தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  சதமடித்த சர்பராஸ்..அதிரடியில் மிரட்டும் பண்ட்! மழை குறுக்கீடுக்கு பின் மீண்டும் ஆட்டம் ஆரம்பம் - இந்திய முன்னிலை

சதமடித்த சர்பராஸ்..அதிரடியில் மிரட்டும் பண்ட்! மழை குறுக்கீடுக்கு பின் மீண்டும் ஆட்டம் ஆரம்பம் - இந்திய முன்னிலை

Oct 19, 2024, 02:53 PM IST

google News
நான்காம் நாள் ஆட்டத்தை 125 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்தியா தொடர்ந்த நிலையில் களத்தில் இருந்த சர்பராஸ் கான் சதமடித்துள்ளார். அதிரடியில் மிரட்டும் பண்ட் அரைசதமடித்து விளையாடி வருகிறார்.மழை குறுக்கீடுக்கு பின் மீண்டும் ஆட்டம் ஆரம்பம் ஆகியுள்ள நிலையில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது. (PTI)
நான்காம் நாள் ஆட்டத்தை 125 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்தியா தொடர்ந்த நிலையில் களத்தில் இருந்த சர்பராஸ் கான் சதமடித்துள்ளார். அதிரடியில் மிரட்டும் பண்ட் அரைசதமடித்து விளையாடி வருகிறார்.மழை குறுக்கீடுக்கு பின் மீண்டும் ஆட்டம் ஆரம்பம் ஆகியுள்ள நிலையில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.

நான்காம் நாள் ஆட்டத்தை 125 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்தியா தொடர்ந்த நிலையில் களத்தில் இருந்த சர்பராஸ் கான் சதமடித்துள்ளார். அதிரடியில் மிரட்டும் பண்ட் அரைசதமடித்து விளையாடி வருகிறார்.மழை குறுக்கீடுக்கு பின் மீண்டும் ஆட்டம் ஆரம்பம் ஆகியுள்ள நிலையில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.

இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் 46 ரன்களுக்கு ஆல்அவுட்டான இந்தியா, இரண்டாவது இன்னிங்ஸில் மீண்டெழ வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. இதை கருத்தில் கொண்டு இந்திய பேட்ஸ்மேன்கள் பொறுப்புடன் பேட் செய்தனர். மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு 231 ரன்கள் எடுத்திருந்தது.

அந்த நாளின் கடைசி பந்தில் கோலி 70 ரன்களில் அவுட்டாக, களத்தில் சர்பராஸ் கான் 70 ரன்களுடன் நாட்அவுட் பேட்ஸ்மேனாக இருந்தார்.

சர்பராஸ் சதம்

நான்காம் நாள் ஆட்டத்தை ரிஷப் பண்ட் உடன் தொடர்ந்த சர்பராஸ் கான், சிறப்பாக பேட் செய்து சதமடித்தார். அவர் 110 பந்துகளில் 100 ரன்கள் அடித்து தனது இன்னிங்ஸில் 13 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் அடித்திருந்தார்.

பண்ட் அதிரடி

சர்பராஸ் உடன் பார்டனர்ஷிப் அமைத்த ரிஷப் பண்ட், பேட்டிங் செய்ய வந்தது முதல் விரைவாக ரன்கள் குவிப்பதில் குறியாக இருந்தார். 55 பந்துகளில் தனது அரைசதத்தை பூர்த்தி செய்த பண்ட் 5 பவுண்டரி, 3 சிக்ஸர்களை பறக்கவிட்டார். இவர்கள் இருவரின் பார்ட்னர்ஷிப்பின் அணியின் ஸ்கோர் மளமள வென உயர்ந்தது.

மழை குறுக்கீடு

71 ஓவரில் இந்தியாவின் ஸ்கோர் 3 விக்கெட் இழப்புக்கு 344 ரன்கள் என இருந்தபோது மழை குறுக்கிட்டது. அப்போது சர்பராஸ் 125, பண்ட் 53 ரன்கள் என களத்தில் இருந்தனர். பின்னர் உணவு இடைவேளை நேரத்துக்கு பின்னரும் மழை தொடர்ந்த நிலையில் சுமார் 1 மணி நேரம் 40 நிமிடங்கள் வரை ஆட்டம் பாதிக்கப்பட்டது.

மதியம் 1.50 மணிக்கு ஆட்டம் மீண்டும் தொடங்கிய நிலையில், தற்போது நடைபெற்று வருகிறது. சதத்துடன் சர்பராஸ் ஆட்டத்தை தொடர்ந்து வரும் நிலையில், பண்ட் தனது பாணியில் அதிரடியில் மிரட்டி வருகிறார்.

73.2 ஓவரில் பண்ட் அடித்த பவுண்டரி மூலம் இந்தியா முன்னிலை பெற்றது. இதைத்தொடர்ந்து 75 ஓவர் முடிவில் இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு 373 ரன்கள் எடுத்துள்ளது. சர்பராஸ் கான் 134, பண்ட் 72 ரன்களுடன் விளையாடி வருகிறார்கள்.

இந்தியா - நியூசிலாந்து டெஸ்ட் தொடர்

இந்தியா சுற்றுப்பயணம் வந்திருக்கும் நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் பெங்களுரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழையால் முழுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், இரண்டாவது நாள் தான் டாஸ் போடப்பட்டது.

மோசமான சாதனை

டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்தியா முதல் இன்னிங்ஸில் 46 ரன்களுக்கு ஆல்அவுட்டாகியது. இதன் உள்ளூரில் மிகவும் குறைவான ரன்களுக்கு ஆல்அவுட்டாகி மோசமான சாதனையை நிகழ்த்தியது.

இதன்பின் நியூசிலாந்து தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த நிலையில், ரச்சின் ரவிந்திரா 134, டேவான் கான்வே 91, டிம் செளத்தி 65 ரன்கள் எடுக்க 402 ரன்கள் குவித்தது. இதனால் 356 ரன்கள் முன்னிலை பெற்றது.

இந்திய பவுலர்களில் குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 3, முகமது சிராஜ் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள். பும்ரா, அஸ்வின் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.

 

டாபிக்ஸ்

For latest Cricket News, Live Score , IPL stay connected with HT Tamil
அடுத்த செய்தி
கவனம் பெற்றவை