இந்திய பேட்ஸ்மேன்களின் நான்காவது வீரராக, உலக அளவில் 18வது வீரராக கோலி நிகழ்த்திய மைல்கல் சாதனை
- Virat Kohli Record: நியூசிலாந்துக்கு எதிராக பெங்களுருவில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸிஸ் சிறப்பாக பேட் செய்து அரைசதமடித்து இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் கடைசி பந்தில் துர்தஷ்டவசமாக அவுட்டானார். இருப்பினும் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் புதியதொரு சாதனை புரிந்துள்ளார்

(1 / 5)
இந்த டெஸ்ட் போட்டியில் விராட் கோலி தனது 31வது அரைசதத்தை அடித்துள்ளார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் புதியதொரு மைல்கல் சாதனையை எட்டியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் நான்காவது வீரராக அவர் இந்த சாதனை புரிந்துள்ளார்(AP)
(2 / 5)
டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோல் 9000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார். இந்த போட்டி தொடங்குவதற்கு முன் அவருக்கு 53 ரன்கள் இதை எட்ட தேவைப்பட்ட நிலையில் முதல் இன்னிங்ஸில் டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில் கம்பேக் கொடுத்த கோலி அரைசதம் அடித்ததோடு, 70 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார் (AFP)
(3 / 5)
டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய பேட்ஸ்மேன்களின் சச்சின் டென்டுல்கர் 15921, ராகுல் டிராவிட் 13265, சுனில் கவாஸ்கர் 10122 ரன்கள் எடுத்துள்ளனர். இவர்களுக்கு அடுத்தபடியாக 9 ஆயிரம் ரன்களை கடந்த இந்திய பேட்ஸ்மேன் என்ற சாதனை புரிந்துள்ளார்(AFP)
(4 / 5)
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் இரண்டாவது இன்னிங்ஸில் விராட் கோலி 70 பந்துகளில் அரைசதமடித்தார். அப்போது 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் அடித்திருந்தார். 9 ஆயிரம் ரன்கள் என்ற சாதனையை 116 டெஸ்ட் போட்டிகள், 197 இன்னிங்ஸில் விராட் கோலி எட்டியுள்ளார். உலக அளவில் இந்த சாதனையை நிகழ்த்திய 18வது கிரிக்கெட் வீரராக கோலி உள்ளார்(AP)
மற்ற கேலரிக்கள்