Jasprit Bumrah: சர்வதேச போட்டிகளில் அதிவேக விக்கெட்டுகள்..மைல்கல் சாதனை புரிந்த இந்திய பவுலர் ஆன பும்ரா
- Jasprit Bumrah Record: வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா புதியதொரு சாதனை புரிந்துள்ளார்.
- Jasprit Bumrah Record: வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா புதியதொரு சாதனை புரிந்துள்ளார்.
(1 / 6)
வங்கதேசத்துக்கு எதிரான சென்னையில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் அனல் பறக்கவிட்ட இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, பல சாதனைகளை புரிந்துள்ளார் . டி20 உலகக் கோப்பை 2024க்குப் பிறகு விளையாடிய முதல் சர்வதேசப் போட்டியின் முதல் ஓவரிலேயே அவர் விக்கெட் வேட்டையைத் தொடங்கினார். மொத்தம் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய பும்ரா, தனது பெயருக்கு ஒரு சிறப்பான சாதனையை படைத்துள்ளார்.
(2 / 6)
ஜஸ்பிரித் பும்ரா தான் வீசிய 11 ஓவர்களில் 50 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனுடன், சர்வதேச கிரிக்கெட்டின் 3 வடிவங்களிலும் 400 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார். (AFP)
(3 / 6)
ஜஸ்பிரித் பும்ரா 196 சர்வதேச போட்டிகளில் 227 இன்னிங்ஸ்களில் 401 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டின் 3 வடிவங்களிலும் 12 இன்னிங்ஸ்களில் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 10 முறையும், ஒருநாள் போட்டிகளில் இரண்டு முறையும் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்(PTI)
(4 / 6)
பும்ரா 37 டெஸ்ட் போட்டிகளில் 70 இன்னிங்ஸ்களில் மொத்தம் 163 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 89 ஒருநாள் போட்டிகளில் 88 இன்னிங்ஸ்களில் 149 விக்கெட்டுகளையும், 70 டி20 போட்டிகளில் 89 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார்(AP)
(5 / 6)
பும்ரா அனைத்து வடிவங்களிலும் 400 விக்கெட்டுகளை வீழ்த்திய 10வது இந்திய பந்துவீச்சாளர் ஆனார். அனில் கும்ப்ளே (953), ரவிச்சந்திரன் அஷ்வின் (744), ஹர்பஜன் சிங் (707), கபில்தேவ் (687), ஜாகீர் கான் (597), ரவீந்திர ஜடேஜா (570), ஜவகல் ஸ்ரீநாத் (551), முகமது ஷமி (448), இஷாந்த் சர்மா (448) என இந்த சாதனையை படைத்துள்ளார்
மற்ற கேலரிக்கள்