தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Cskvsrr: ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்திய பின் Lap Of Honour முறையில் நன்றி தெரிவித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர்

CSKvsRR: ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்திய பின் Lap Of Honour முறையில் நன்றி தெரிவித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர்

Marimuthu M HT Tamil

May 12, 2024, 10:11 PM IST

google News
CSKvsRR: ஐபிஎல் 2024 இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான சிஎஸ்கேவின் வெற்றிக்குப் பிறகு மகேந்திர சிங் தோனி மற்றும் சென்னை அணி வீரர்கள் Lap Of Honour முறையில் நன்றி தெரிவித்தனர். (PTI)
CSKvsRR: ஐபிஎல் 2024 இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான சிஎஸ்கேவின் வெற்றிக்குப் பிறகு மகேந்திர சிங் தோனி மற்றும் சென்னை அணி வீரர்கள் Lap Of Honour முறையில் நன்றி தெரிவித்தனர்.

CSKvsRR: ஐபிஎல் 2024 இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான சிஎஸ்கேவின் வெற்றிக்குப் பிறகு மகேந்திர சிங் தோனி மற்றும் சென்னை அணி வீரர்கள் Lap Of Honour முறையில் நன்றி தெரிவித்தனர்.

CSKvsRR: ஐபிஎல் 2024 சீசனில்,ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான வெற்றிக்குப் பிறகு எம்.எஸ்.தோனி மற்றும் அவரது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில், Lap Of Honour (கௌரவ மடி) முறையில் மரியாதை செலுத்தினர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சொந்த மண்ணில் 50ஆவது முறையாக வென்ற பின்னர், சிஎஸ்கே வீரர்கள் கையொப்பமிட்ட பந்துகளை ரசிகர்களுக்கு வழங்கினர். மேலும் இது இந்த சீசனில், சென்னையில் நடக்கும் அவர்களின் கடைசி லீக் போட்டி இதுவாகும்.

எங்கும் ஒலித்த தோனியின் பெயர்:

கௌரவ மடி மரியாதை செலுத்தும் இந்நிகழ்வில் மகேந்திர சிங் தோனி மீதான அன்பு மீண்டும் ஒருமுறை சென்னையில் சரியாக பிரதிபலித்தது. அவரது பெயரை பலராக கோஷமாக மாற்றி, மைதானம் முழுவதும் எதிரொலிக்கும் வகையில் உச்சரித்தனர். சிஎஸ்கே வீரர்கள் கையெழுத்திட்ட சில டென்னிஸ் பந்துகளையும் ரசிகர்களுக்குத் தூக்கி அடித்து கொடுத்தனர். 

போட்டிக்கு முன்பு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எக்ஸ் தளத்தில் போட்டி முடிந்தபின்பு, ரசிகர்கள் கலைந்து செல்லவேண்டாம் என சஸ்பென்ஸ் பதிவுபோட்டிருந்தது. 

அந்தப் பதிவில், “சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டிக்குப் பிறகு, அமர்ந்து இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்! சம்திங் ஸ்பெஷல் உங்க வழியில வருது!”’’ என்று பதிவிட்டிருந்தனர். 

பல ரசிகர்கள் இது Lap Of Honour என்று சொன்னாலும், இந்தப் பதிவுக்கு எதிர்வினையாற்றும் விதமாக, சில ரசிகர்கள் இது தோனியின் ஓய்வாக இருக்கலாம் என்று கூறினர். இந்த நிகழ்வின் வீடியோ வைரலாகியுள்ளது. அங்கு தோனி சில டென்னிஸ் பந்துகளை ரசிகர்களுக்கு அடிப்பதைக் காணலாம். ரசிகர்களும் தோனியின் முகத்துடன் ஒரு பெரிய பேனரை வைத்திருக்கிறார்கள்.

மகேந்திர சிங் தோனியின் நல்ல ஃபார்ம்:

142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணி 18.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 41 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இறுதிவரை இருந்தார். ரச்சின் ரவீந்திரா 27 ரன்களும், மிட்செல் 22 ரன்களும், மொயின் அலி 10 ரன்களும், ஷிவம் துபே 18 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 5 ரன்களும், சமீர் ரிஸ்வி 15 ரன்களும் எடுத்தனர்.

ராஜஸ்தான் ராயல்ஸ் தரப்பில் அஸ்வின் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆரம்பத்தில் ரியான் பராக் 35 பந்துகளில் 47 ரன்கள் குவித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை நிலைநிறுத்த உதவினார். 20 ஓவர்களில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சார்பில், பந்துவீச்சில் சிமர்ஜீத் சிங் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

மகேந்திர சிங் தோனி இந்த சீசனில் நல்ல ஃபார்மில் உள்ளார். மேலும் டெத் ஓவர்களில் கீழ் வரிசையில் வந்து பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் பாத்திரம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. 13 போட்டிகளில் 226.66 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 136 ரன்கள் குவித்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிமர் ஜீட் சிங் 26 ரன்கள் மட்டுமே கொடுத்து, மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் இன்றைய ராஜஸ்தான் அணி மற்றும் சிஎஸ்கே அணிகள் மோதிய போட்டியின் ‘மேன் ஆஃப் தி மேட்ச்’ ஆனார்.

டாபிக்ஸ்

For latest Cricket News, Live Score , IPL stay connected with HT Tamil
அடுத்த செய்தி
கவனம் பெற்றவை