CSKvsRR: பவுலர்களின் எழுச்சி.. நிதானமான ஆட்டம்.. 5 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ்-uprising of bowlers and relaxed game and chennai super kings beat rajasthan by 5 wickets - HT Tamil ,மட்டைப்பந்து செய்திகள்
தமிழ் செய்திகள்  /  மட்டைப்பந்து  /  Cskvsrr: பவுலர்களின் எழுச்சி.. நிதானமான ஆட்டம்.. 5 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ்

CSKvsRR: பவுலர்களின் எழுச்சி.. நிதானமான ஆட்டம்.. 5 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ்

Marimuthu M HT Tamil
May 12, 2024 11:16 PM IST

CSKvsRR: ஐபிஎல் போட்டியில், 61ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதிக்கொண்டன. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தியது.

CSKvsRR: பவுலர்களின் எழுச்சி.. நிதானமான ஆட்டம்.. 5 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ்
CSKvsRR: பவுலர்களின் எழுச்சி.. நிதானமான ஆட்டம்.. 5 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ் (PTI)

17ஆவது ஐ.பி.எல் சீசனில், 61ஆவது லீக் ஆட்டம், சென்னையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் இடையில் நடந்து வருகிறது. இப்போட்டியானது சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் முதலில் டாஸ்வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங்கினை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஷ்வால், 21 பந்துகளில் 24 ரன்கள் எடுத்தபோது, சென்னை சூப்பர் கிங்ஸின் சிமர்ஜீட் சிங்கின் பந்தில் கெய்க்வாட்டிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

அதன்பின்னர், அவரது சக பார்ட்னர் வீரரான ஜோஸ் பட்லர் 21 ரன்களை எடுத்தபோது, அதே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரரான சிமர்ஜீட் சிங்கின் பந்தில், தேஷ்பாண்டேவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். மூன்றாவதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் களமிறங்கி 19 பந்துகளுக்கு 15 ரன்கள் எடுத்தபோது, சிமர்ஜீட் சிங்கின் பந்தில் கெய்க்வாட்டிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார்.

நான்காவதாக ரியான் பராக்கும், ஐந்தாவதாக துருவ் ஜுரெல்லும் களமிறங்கினர். இதில் ரியான் பராக் நிதானமாக ஆடி, 35 பந்துகளுக்கு 47 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவரது இணை வீரரான துர்வ் ஜுரெல் 18 பந்துகளுக்கு 28 ரன்கள் எடுத்தபோது, தேஷ்பாண்டேவின் பந்தில் தாக்கூரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். ஆனால், அதன்பின் வந்த ஷிவம் துபே ரன் எதுவும் எடுக்காமல் தேஷ்பாண்டேவின் பந்தில் டக் அவுட் ஆனார். ஏழாவதாகவும் இறுதியாகவும் களமிறங்கிய ரவிச்சந்திரன் அஸ்வின் ஒரு ரன் மட்டும் எடுத்தார். இறுதியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான முதல் இன்னிங்ஸில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 5 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்தது.

இதன்மூலம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 142 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

சேஸிங்கில் ஈடுபட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி:

142 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆரம்பம் முதலே நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதில் சென்னை அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரச்சின் ரவீந்திராவும், கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருந்தாலும் 27 ரன்கள் எடுத்தபோது ரச்சின், அஸ்வினின் சுழலில் அவுட்டானார். அடுத்து களமிறங்கிய மிட்செல் 13 பந்துகளுக்கு 22 ரன்கள் எடுத்தவிட்டு, சாஹல் பந்தில் எல்.பி.டபிள்யூ ஆனார். அதன்பின், களமிறங்கிய மொயின் அலி 10 ரன்கள் எடுத்தபோது, பர்கரின் பந்தில் பெவிலியன் திரும்பினார். ஷிவம் துபே 18 ரன்கள் பெற்றபோது, அஸ்வினின் சுழலில் அவுட்டானார். மேலும், ரவீந்திர ஜடேஜா 5 ரன்கள் எடுத்தபோது, ஃபீல்டிங்கிற்கு இடையூறு செய்ததாக வெளியேற்றப்பட்டார். அதன்பின் களமிறங்கிய சமீர் ரிஸ்வி 15 ரன்கள் எடுத்து இறுதிவரை களத்தில் இருந்தார். அதேபோல், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து, 42 ரன்களை விளாசினார்.

மொத்தத்தில் 20 ஓவர்கள் முடிவில் 18.2 ஓவர்களுக்கு, 5 விக்கெட் இழப்புக்கு, 145 ரன்கள் எடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றிபெற்றது. இதன்மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தியது. 

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சார்பில், அதிகப்பட்சமாக அஸ்வின் 2 விக்கெட்டுகள் எடுத்தது. 

Whats_app_banner

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.