CSK vs RR Preview: சென்னை - ராஜஸ்தான் அணிகள் மோதும் போட்டியில் வெல்லப்போவது யார்?: பல்வேறு தகவல்கள் உள்ளே!
CSK vs RR Preview:சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் மே 12-ம் தேதி நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. பிற்பகல் 3.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.
CSK vs RR Preview: சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் மே 12-ம் தேதியான இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. பிற்பகல் 3.30 மணிக்கு இந்தப் போட்டி தொடங்குகிறது.
12 போட்டிகளில் 6 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள சிஎஸ்கே, பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற அடுத்த 2 போட்டிகளில் வெற்றி பெற்றே ஆகவேண்டும். 14 புள்ளிகள் பெற்றிருப்பது அவர்களுக்கு மைதானத்தில் ஒரு வாய்ப்பினை உண்டாக்கலாம் என்றாலும், அவர்கள் நிச்சயமாக 16 புள்ளிகளைப் பெற்று, தங்கள் வாய்ப்புகளை உறுதிப்படுத்த வேண்டும். அப்படி செய்ததால் தான், கடைசியாக விளையாடிய 5 போட்டிகளில் 2-ல் வெற்றி பெற்றுள்ளது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
இது இப்படி இருக்க மறுமுனையில் ஆடும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மிகவும் சீராகவுள்ளது. அவர்கள் 11 போட்டிகளில் விளையாடி, 8-ல் வெற்றி பெற்று புள்ளிகள் அட்டவணையில் 2ஆவது இடத்தில் உள்ளனர். இருப்பினும், ராஜஸ்தான் அணி ஏற்கனவே 11 ஆட்டங்களில் இருந்து 16 புள்ளிகளுடன் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியிருந்தாலும், அடுத்தடுத்து 2 தோல்வியினைச் சந்தித்து சற்று பின்னடைவைச் சந்தித்துள்ளது.
சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதிய விவரம்:
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இதுவரை, 28 ஐ.பி.எல் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 13 முறையும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 15 முறையும் வெற்றி பெற்றுள்ளன. ராஜஸ்தானுக்கு எதிராக இதுவரை சிஎஸ்கேவின் அதிகபட்ச ஸ்கோர் 246 ஆகும். சென்னைக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் அதிகபட்ச ஸ்கோர் 223 ஆகும்.
யார் பலம் பொருந்திய அணி?
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான கடைசி 5 ஆட்டங்களில் 4ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வென்றுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான சிஎஸ்கேவின் கடைசி வெற்றி ஐபிஎல் 2021-ல் தான் சாத்தியமானது.
ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர்கள் பட்டியல்:
சஞ்சு சாம்சன் (ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட்(சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன்), ஜோஸ் பட்லர், ரவீந்திர ஜடேஜா, ஷிம்ரான் ஹெட்மயர், ரவிச்சந்திரன் அஸ்வின், எம்.எஸ்.தோனி, தீபக் சாஹர், ஷர்துல் தாகூர், யுஸ்வேந்திர சாஹல், ஷிவம் துபே.
CSK vs RR பிட்ச் அறிக்கை
மைதானத்தின் ஆடுகளம் பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் இருவருக்கும் ஏற்ற வகையில் இருக்கிறது. மைதானம் வறண்டு இருப்பதால் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு கைகொடுக்கும். ஆனால், ஆட்டம் விறுவிறுப்பாகும்போது, சுழற்பந்து சங்கடத்தினை தருகிறது. இது பிற்கால இன்னிங்ஸில் பேட்டிங்கை மிகவும் சவாலானதாக ஆக்குகிறது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடிய கடைசி ஐபிஎல் 2024 ஆட்டமானது, பஞ்சாப் கிங்ஸ் (பிபிகேஎஸ்) மற்றும் சிஎஸ்கேவுக்கு இடையில் இருந்தது. முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி 7 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது. இருப்பினும், PBKS அணி 17.5 ஓவர்களில் இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
CSK vs RR வானிலை:
சில பகுதிகளில் காலை இடியுடன் கூடிய மழையை எதிர்பார்க்கலாம்; மே 12 பெரும்பாலும் வெயில், ஈரப்பதம் மற்றும் சற்று மேகமூட்டமாக இருக்கும்.
சென்னையில் வெப்பநிலை 36 டிகிரியை ஒட்டி இருக்கும். அதிகபட்ச வெப்பநிலை 44 டிகிரியாக இருக்கும். ஈரப்பதம் சுமார் 69% இருக்கும். AccuWeather- இணையதளத்தின்படி, மழை பெய்ய வாய்ப்பு 6% ஆகும்.
CSK vs RR கணிப்பு:
கூகுளின் வெற்றி வாய்ப்பின்படி, சென்னை தனது 13ஆவது போட்டியில் ராஜஸ்தானை, தனது சொந்த மண்ணான சென்னையில் தோற்கடிக்க 51% வாய்ப்பு உள்ளது.
இருப்பினும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சிஎஸ்கேவை வீழ்த்தும் என்று நம்புகிறோம். 18 புள்ளிகளுடன் பிளே ஆஃப் சுற்றுக்கு அதிகாரப்பூர்வமாக தகுதி பெறவும் வாய்ப்புள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம்
டாபிக்ஸ்