RR vs CSK: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 142 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி!
RR vs CSK: ஐபிஎல் போட்டியில், 61ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதிக்கொண்டன.

RR vs CSK: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 142 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி! (PTI)
RR vs CSK: 17ஆவது ஐ.பி.எல் சீசனில், 61ஆவது லீக் ஆட்டம், சென்னையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் இடையில் நடந்து வருகிறது. இப்போட்டியானது சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் முதலில் டாஸ்வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங்கினை தேர்வு செய்தது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஷ்வால், 21 பந்துகளில் 24 ரன்கள் எடுத்தபோது, சென்னை சூப்பர் கிங்ஸின் சிமர்ஜீட் சிங்கின் பந்தில் கெய்க்வாட்டிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.