தலைகணத்தோடு திரிந்த பிரம்மதேவர்.. தலையைக் கொய்த சிவபெருமான்.. பிரம்ம தேவர் வழிபட்ட பிரம்மபுரீஸ்வரர்.. அகந்தை ஒழிந்தது!
Oct 19, 2024, 06:00 AM IST
Brahmapureeswarar: சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் நாகப்பட்டினம் மாவட்டம் விளத்தொட்டி அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில். இந்த கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சிவபெருமான் பிரம்மபுரீஸ்வரர் எனவும் தாயார் இட்சுரச நாயகி என்ற திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றனர்.
Brahmapureeswarar: உலகம் முழுவதும் மிகப்பெரிய பக்தர்கள் கூட்டத்தை தன்வசம் வைத்திருக்க கூடியவர் சிவபெருமான். மனிதர்கள் தோன்றுவதற்கு முன்பாகவே பல உயிரினங்கள் சிவபெருமானை வழி விட்டதாக புராணங்களில் கூறப்படுகின்றன. மண்ணுக்காக மன்னர்கள் போரிட்டு வந்தாலும் மறுபுறம் சிவபெருமானின் மிகப்பெரிய பக்தனாக அனைத்து மன்னர்களும் திகழ்ந்து வந்துள்ளனர்.
சமீபத்திய புகைப்படம்
அப்படி சிவபெருமான் மீது மிகப்பெரிய பக்தி கொண்ட மன்னர்கள் எத்தனையோ மிகப்பெரிய பிரமாண்ட கோயில்களை கட்டி வைத்துச் சென்றுள்ளனர். சிவபெருமான் மீது இருந்த பக்தியை அனைத்து மன்னர்களும் வெளிப்படுத்தி சென்றுள்ளனர்.
எத்தனையோ மன்னர்கள் மற்ற மண்ணை வென்றெடுத்து வந்தாலும் அங்கு இருந்த கோயில்களை புனரமைப்பு செய்து வழிபாடுகளும் மேற்கொண்டு வந்துள்ளனர். அந்த அளவிற்கு சிவபெருமான் மீது அதீத பக்தியோடு வாழ்ந்து வந்துள்ளனர்.
குறிப்பாக இந்தியாவில் மிகப் பெரிய பக்தர்கள் கூட்டம் சிவபெருமானுக்கு இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் திரும்பும் திசையெல்லாம் கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. பல ஆண்டுகள் கடந்தும் அந்த கோயில்கள் காலத்தால் அளிக்க முடியாத சரித்திர குறியீடாக திகழ்ந்து வருகின்றன.
அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் நாகப்பட்டினம் மாவட்டம் விளத்தொட்டி அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில். இந்த கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சிவபெருமான் பிரம்மபுரீஸ்வரர் எனவும் தாயார் இட்சுரச நாயகி என்ற திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றனர்.
தல சிறப்பு
முருகப்பெருமான் குழந்தையாக இருந்த பொழுது தொட்டிலில் தவழ்ந்து உறங்கிய கோயிலாக இந்த கோயில் விளங்கி வருகின்றது. அதன் காரணமாக பாலமுருகனை பெருமைப்படுத்தும் விதமாக பிறந்த குழந்தைகளை இந்த ஊரில் 10 நாட்கள் வரை தொட்டிலில் படுக்க வைக்க மாட்டார்கள். அதேசமயம் இந்த ஊரில் தொட்டில் கட்டும் பழக்கமும் கிடையாது எனக் கூறப்படுகிறது.
இந்த கோயிலில் இருக்கக்கூடிய மகா மண்டபத்தின் வாசலில் பிரம்மதேவர் சிவபெருமானை பூஜிக்கும் காட்சி புடைப்பு சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. இந்த கோயிலில் குழந்தை வரம் வேண்டி வழிபட்டால் அவர்களுக்கு உடனே கேட்ட வரம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. தங்களது வேண்டுதல் நிறைவேறிய பிறகு பக்தர்கள் பாலமுருகன் சன்னதியில் தொட்டில் கட்டி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
தல வரலாறு
பிரம்மதேவர் ஆரம்ப காலகட்டத்தில் ஐந்து தலைகளோடு இருந்து வந்துள்ளார். சிவபெருமானை போல தனக்கும் ஐந்து தலைகள் இருக்கின்றது என எண்ணி கர்வத்தோடு திரிந்து வந்துள்ளார். காலப்போக்கில் அது பெரும் தலைக்கனமாக அவருக்கு மாறிவிட்டது. தன்னைவிட இந்த உலகத்தில் உயர்ந்தவர் யாரும் கிடையாது என பிரம்மதேவர் கர்வத்தோடு நினைத்து வந்துள்ளார்.
பிரம்மதேவரின் அகந்தை ஒரு கட்டத்தில் அளவு மீறி சென்றுள்ளது. இதனை கண்ட சிவபெருமான் அவருடைய ஆணவத்தை அடக்க நினைத்துள்ளார். அதன் காரணமாக பிரம்மதேவரின் தலைகளில் ஒன்றை சிவபெருமான் கொய்து எடுத்துள்ளார்.
அதேபோல பிரம்ம தேவருக்கு கொடுக்கப்பட்ட படைப்பாற்றலும் பறிக்கப்பட்டுள்ளது. அவருடைய தலை போன காரணத்தினால் தலைகணமும் போய்விட்டது. உடனே பிரம்ம தேவர் தான் செய்த தவறை உணர்ந்துள்ளார். சிவபெருமானிடம் சென்று தான் செய்த தவறை மன்னிக்கும்படி வேண்டியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் பிரம்ம தேவர் பல கோயில்களுக்கு சென்று சிவபெருமானை வழிபட்டு வந்துள்ளார். அதன் பின்னர் பிரம்ம தேவர் எங்கு சென்று வழிபட்டாலும் அந்த இடமெல்லாம் சிவபெருமானுக்கு பிரம்மபுரீஸ்வரர் என்ற திருநாமம் கொடுக்கப்பட்டது. அந்த வரிசையில் இருக்கக்கூடிய கோவில்களில் ஒன்றாக இந்த விளத்தொட்டி பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் விளங்கி வருகிறது. பிரம்ம தேவர் பூஜை செய்து வழிபட்டதன் காரணமாகவே இந்த திருக்கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சிவபெருமான் பிரம்மபுரீஸ்வரர் என அழைக்கப்படுகிறார்.