புனித மண் திருவொற்றியூர்.. சிவபெருமான் படைத்த நகரம்.. தொழிலை தொடங்கிய பிரம்மதேவர்.. சிவனின் நகரம்!
Adipureeswarar: சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் சென்னை மாவட்டம் திருவொற்றியூர் அருள்மிகு ஆதிபுரீஸ்வரர் திருக்கோயில். இந்த திருக்கோயிலில் இருக்கக்கூடிய சிவபெருமான் ஆதிபுரீஸ்வரர் என்ற திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகிறார்.
Adipureeswarar: கடவுள்களுக்கெல்லாம் கடவுளாக திகழ்ந்து வருபவர் சிவபெருமான். இந்தியாவில் திரும்பும் திசையெல்லாம் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன உலகம் முழுவதும் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு மிகப்பெரிய பக்தர்கள் கூட்டம் அவரை வணங்கி வருகின்றன.
குறிப்பாக இந்தியாவின் தெற்கு பகுதியில் காலடி எடுத்து வைக்கும் அனைத்து இடங்களிலும் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்ட வருகின்றன. மன்னர்கள் காலம் தொட்டு இன்று வரை சிவபெருமானுக்கு பக்தர்கள் கூட்டம் குறைந்தபாடு கிடையாது.
மண்ணுக்காக ஒருபுறம் மன்னர்கள் போரிட்டு வந்தாலும் மறுபுறம் தங்களது பக்தியை வெளிப்படுத்துவதற்காகவே பிரம்மாண்ட கோயில்களை கட்டி வைத்து சென்றுள்ளனர். அப்படிப்பட்ட கோயில்கள் காலம் கடந்தும் இன்று வரை கம்பீரமாக நின்று வருகின்றன.
உலகத்தில் மனிதர்கள் பிறப்பதற்கு முன்பு உயிரினங்கள் சிவபெருமானை வணங்கியதாக புராணங்களில் கூறப்படுகின்றன. அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் சென்னை மாவட்டம் திருவொற்றியூர் அருள்மிகு ஆதிபுரீஸ்வரர் திருக்கோயில். இந்த திருக்கோயிலில் இருக்கக்கூடிய சிவபெருமான் ஆதிபுரீஸ்வரர் என்ற திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகிறார். இந்த கோயிலில் இருக்கக்கூடிய தீர்த்தம் பிரம்ம தீர்த்தம் என அழைக்கப்படுகிறது.
தல சிறப்பு
இந்த திருக்கோயிலில் நடராஜர் தியாகராஜர் என்ற பெயரில் அமர்ந்த கோலத்தில் நடனம் ஆடுவது மிகப்பெரிய சிறப்பாக கருதப்படுகிறது. அதேபோல பட்டினத்தார் இங்குதான் ஜீவசமாதி அடைந்துள்ளார்.
இந்த திருக்கோயிலில் சிவபெருமானை 27 நட்சத்திரங்களும் வழிபட்டுள்ளனர். அந்த 27 நட்சத்திரங்களும் சிவலிங்கங்களாக மர சிவபெருமான் அருள் வழங்கியுள்ளார். அந்தந்த நட்சத்திரங்களைச் சேர்ந்தவர்கள் குறிப்பிட்ட நாளில் இந்த லிங்கங்களை வழிபட்டால் அவர்களுடைய தோஷங்கள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.
இந்த கோயிலுக்கு வந்து வெளியே மிகப்பெரிய பிரமாண்டமான பிரம்ம தீர்த்த குளம் அமைந்துள்ளது. இந்த குளத்தில் இருந்து தண்ணீரை எடுத்து தலையில் தெளித்துக் கொண்டாலே பாவங்கள் நீண்டு விடும் என கூறப்படுகிறது. யாரிடமும் பாவ மன்னிப்பு கேட்காமலேயே பாவங்கள் அனைத்தும் நிவர்த்தி செய்யும் கோயிலாக இது விளங்கி வருகிறது.
இந்த ஊரில் இருக்கக்கூடிய அனைத்து கற்களும் லிங்கங்கள் எனவும் சிதறு கிடக்கின்ற மண் அனைத்தும் திருநீறு எனவும் புராணங்களில் கூறப்படுகின்றன.
தல வரலாறு
வைகுண்டத்தில் இருந்த விஷ்ணு பகவானின் நாபிக் கமலத்திலிருந்து பிரம்மன் பிறந்தார். அதற்குப் பிறகு பிரம்ம தேவர் உலகத்தை படைக்க தொடங்கினார். அதற்கு முன்பாகவே இந்த உலகத்தில் ஒரு நகரம் இருந்துள்ளது. நான் உலகத்தை படைப்பதற்கு முன்பாகவே ஒரு நகரத்தை படைத்தது யார் எனவும் எனக்கு மேலே ஒருவர் யார் இருக்கிறார் எனவும் விஷ்ணு பகவானிடம் பிரம்மதேவர் கேட்டார்.
அதற்கு மகாவிஷ்ணு அந்த நகரை படைத்தது சிவபெருமான் தான். அந்த நகரத்தின் பெயர் ஆதிபுரி. அங்கு இருக்கக்கூடிய சிவபெருமான் ஆதிபுரீஸ்வரர் என அழைக்கப்படுகிறார். அந்த நகரம் திருவெற்றியூர் எனவும் அழைக்கப்படுகிறது. அங்கு சென்று ஆதிபுரீஸ்வரரை வணங்கி விட்டு உனது படைக்கும் தொழிலை தொடங்க வேண்டும் என பிரம்மதேவரிடம் மகாவிஷ்ணு கூறியுள்ளார்.
அதே போல திருவொற்றியூர் வந்து ஆதுபுரீஸ்வரரை பிரம்மதேவர் வழிபட்டார். இந்த உலகத்தை படைப்பதற்கு ஏதுவாக சிவபெருமான் சூழ்ந்திருந்த கடலை விளக்கி கொடுத்தார்.