அம்பை எய்த அர்ஜுனன்.. ரத்தம் வழிந்தபடி நின்ற சிவபெருமான்.. காட்சி கொடுத்து அருள் ஆசி வழங்கிய திருவேட்டீஸ்வரர்
Tiruvetteeswarar: எத்தனையோ கோயில்கள் பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தும் இன்று வரை கம்பீரமாக நின்று வருகின்றன. அந்த கோயில்கள் அனைத்தும் தற்போது சரித்திர குழுவீடாக திகழ்ந்து வருகின்றன. அப்படிப்பட்ட கோயில்களில் ஒன்றுதான் சென்னை மாவட்டம் அருள்மிகு திருவல்லிக்கேணி அருள்மிகு திருவேட்டீஸ்வரர் திருக்கோயில்.
Tiruvetteeswarar: உலகம் முழுவதும் மிகப்பெரிய பக்தர்கள் கூட்டத்தை வைத்திருக்கக் கூடியவர் சிவபெருமான் திரும்பவும் திசையெல்லாம் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன உலகம் முழுவதும் சிவபெருமானுக்கு கோயில் உண்டு.
மன்னர்கள் காலம் தொட்டு இன்று வரை சிவபெருமானுக்கு பக்தர்கள் கூட்டம் குறைந்தபாடு கிடையாது குறிப்பாக தமிழ்நாட்டில் காலடி எடுத்து வைக்கும் அனைத்து இடங்களிலும் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவை அனைத்தும் சாதாரண கோவில்கள் கிடையாது பிரம்மாண்டமான கோயில்கள்.
மனித இனம் தோன்றுவதற்கு முன்பாகவே பல உயிரினங்கள் சிவபெருமானை வழிபட்டதாக புராணங்களில் கூறப்படுகின்றன. மண்ணுக்காக மன்னர்கள் ஒருபுறம் போரிட்டு வந்தாலும் தங்களது கலை நயம் மற்றும் பக்தியை வெளிப்படுத்துவதற்காகவும் பிரம்மாண்ட கோயில்களை கட்டி வைத்துச் சென்றுள்ளனர்.
அப்படிப்பட்ட எத்தனையோ கோயில்கள் பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தும் இன்று வரை கம்பீரமாக நின்று வருகின்றன. அந்த கோயில்கள் அனைத்தும் தற்போது சரித்திர குழுவீடாக திகழ்ந்து வருகின்றன. அப்படிப்பட்ட கோயில்களில் ஒன்றுதான் சென்னை மாவட்டம் அருள்மிகு திருவல்லிக்கேணி அருள்மிகு திருவேட்டீஸ்வரர் திருக்கோயில்.
தல சிறப்பு
இந்த திருக்கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சிவபெருமான் திருவேட்டீஸ்வரர் எனவும் தாயார் செண்பகாம்பிகை என்ற திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றனர். இந்த திருக்கோயில் ராகு மற்றும் தேதி இவர்களின் பரிகாரத்தனமாக திகழ்ந்து வருகின்றன.
சிவபெருமான் அம்பாள் முருக பெருமான் ஆகிய மூவருக்கும் மூன்று கொடி மரத்தோடு இந்த கோயில் அமைந்துள்ளது. விஷ்ணு பகவானை திருமணம் செய்து கொள்வதற்காக மகாலட்சுமி இந்த கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சிவபெருமானை வணங்கியதாக கூறப்படுகிறது.
அதற்கு சாட்சியாக இந்த கோயிலில் இருக்கக்கூடிய ஒரு தூணில் மகாலட்சுமி தேவி தனது கைகளில் கலசத்தை வைத்து சிவலிங்கத்திற்கு பூஜை செய்வது போல சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. இந்த திருக்கோயிலில் மகாலட்சுமி மற்றும் சரஸ்வதி தேவி ஆகியோருக்கு சன்னதிகள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சரஸ்வதி தேவிக்கு கையில் வீணை இருக்காது.
தல வரலாறு
ஒருமுறை அர்ஜுனன் தீர்த்த யாத்திரை மேற்கொண்டு இருந்தார். அப்போது அவ்வழியாக சென்ற பன்றியை வேட்டையாடியுள்ளார். சிவபெருமான் வேடன் வடிவில் அங்கு வந்து இந்த பன்றி தனக்குரியது என அர்ஜுனனிடம் தர்க்கம் செய்துள்ளார்.
உடனே சிவபெருமானோடு சண்டையிட்டு அர்ஜுனன் தனது கையில் இருந்த அம்பை எய்தார். அந்த அம்பு வேடனாக வந்த சிவபெருமானின் தலையை தாக்கிவிட்டது உடனே அவரது தலையில் இருந்து ரத்தம் வழிந்தது. உடனே வேடனாக இருந்த சிவபெருமான் தனது சுய ரூபத்தை காட்டினார்.
ஆச்சரியமடைந்த அர்ஜுனன் மிகவும் வருத்தம் அடைந்து சிவபெருமானை நோக்கி மன்னிப்பு கேட்டு வருந்தினார். சிவபெருமான் அர்ஜுனனை மன்னித்து அவருக்கு பாசுபதாஸ்திரம் கொடுத்தார். அதற்குப் பிறகு பல இடங்களுக்குச் சென்று அர்ஜுனன் சிவபெருமானுக்கு வழிபாடு செய்தார். பின்னர் தற்போது கோயில் இருக்கக்கூடிய பகுதியில் சுயம்புலிங்கமாக காட்சி கொடுத்த சிவபெருமானை வழிபட்டார்.
வேடன் வடிவில் வந்து அர்ஜுனனுக்கு சிவபெருமான் அருள் பாலித்த காரணத்தினால் இங்கு வீற்றிருக்கக்கூடிய சிவபெருமான் திருவேட்டீஸ்வரர் என அழைக்கப்படுகிறார். இதே போல இந்த சிவபெருமானுக்கு பார்த்தபிரகரலிங்கம் திருநாமமும் உண்டு. பார்த்தன் என்றால் அர்ஜுனன் என்று பொருள். அர்ஜுனன் வழிபட்ட சிவலிங்கம் என்கின்ற காரணத்தினால் இந்த பெயர் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.