HT Yatra: கோபம் தணிந்து அமர்ந்த இடம்.. வள்ளியை மணந்த முருகப்பெருமான்
திருத்தணி முருகன் கோயில் வரலாறு குறித்து இங்கே காண்போம்.
உலகம் முழுவதும் மிகப்பெரிய பக்தர்கள் கூட்டத்தை வைத்திருக்கக் கூடிய முருக பெருமான் அறுபடை வீடு கொண்டு தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய தமிழர்களின் தலைவனாக திகழ்ந்து வருகிறார். அந்த அறுபடை திருத்தலங்களில் சக்தி வாய்ந்த திருத்தலமாக விளங்கக்கூடியது திருத்தணி முருகன் கோயில்.
திருவள்ளூர் மாவட்டத்தில், தமிழ்நாட்டின் வடக்கு எல்லையில் இந்த திருத்தணி அமைந்துள்ளது. மிகவும் பழமையான கோவிலாக விளங்கக்கூடிய இந்த திருத்தணி முருகனை அருணகிரிநாதர் போற்றி புகழ்ந்து பாடியுள்ளார். பல்லவர் மற்றும் சோழர்களால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்த தளம் போற்றப்பட்டு வந்துள்ளது. அனைத்து சான்றோர்களும் திருத்தணி முருகனை புகழ்ந்து பாடியுள்ளனர்.
தல வரலாறு
சூரபத்மன் தீராத துன்பங்களை தேவர்களுக்கு கொடுத்து வந்தார். அவர்களை அழிப்பதற்காகவே சிவபெருமான் முருக பெருமானை பெற்றெடுத்தார். தேவர்களின் துயரங்களை துடைப்பதற்காக சூர பத்மனை முருகப்பெருமான் வதம் செய்தார்.
அதன் பின்னர் வள்ளியை திருமணம் செய்து கொள்வதற்காக வேடர்களுடன் விளையாட்டாக போர் புரிந்தார். பின்னர் போர்களில் ஏற்பட்ட கோபம் தணிந்து முருகப்பெருமான் அமர்ந்து இடம்தான் இந்த திருத்தணி. இந்த இடத்திற்கு தணிகை மலை என்ற பெயரும் உள்ளது.
தேவர்கள் மற்றும் முனிவர்கள் என அனைவரது பயமும் நீங்கியதால் இந்த இடத்திற்கு திருத்தணி என பெயர் வந்துள்ளது. இங்கு இருக்கக்கூடிய மலைகளில் தனி மலையில் கிழக்கு நோக்கி முருக பெருமான் காட்சி கொடுத்து வருகிறார்.
அவர் அமர்ந்திருக்கும் இரண்டு பக்கங்களிலும் மலை தொடர்ச்சியாக பரவி காணப்படுகிறது வடக்கில் இருக்கக்கூடிய மலையானது வெள்ளை நிறமாகவும் தெற்கே இருக்கக்கூடிய மலை கருப்பு நிறமாகவும் இருக்கும். வெள்ளை நிற மலை பச்சரிசி மலை எனவும், கருப்பு நிற மழை புண்ணாக்கு மலை எனவும் அழைக்கப்படுகிறது. இந்த மலையின் அடிவாரத்தில் சரவணப் பொய்கையான குமார தீர்த்தம் உள்ளது. பல மடங்கள் இந்த குளத்தைச் சுற்றி இருக்கின்றது.
வழிபாட்டு முறை
திருத்தணி கோயிலுக்கு முருக பெருமானை வழிபாடு செய்ய செல்லும் பக்தர்கள் முதலில் குமார தீர்த்தத்தில் நீராடி விட்டு சுத்தமாக உலர்ந்த ஆடையோடு மலையில் ஏற வேண்டும். மலையில் ஏறும்பொழுது முருக பெருமானை குறித்து புகழ்பாடி கொண்டு செல்ல வேண்டும்.
அதன் பின்னர் மலை உச்சியில் கிழக்கு பிரகாரத்தில் இருக்கக்கூடிய கொடி கம்பத்தையும், விநாயகரையும், ஐராவத யானையையும் தரிசனம் செய்ய வேண்டும். அதன் பின்னர் இந்திரன் நீலச்சுணையை தரிசனம் செய்துவிட்டு கோயிலின் உள்ளே செல்ல வேண்டும்.
அங்கே இருக்கக்கூடிய விநாயகர் மற்றும் வீரவாகு உள்ளிட்ட அனைத்து வீரர்களையும் வழிபாடு செய்து விட்டு, அருகே இருக்கக்கூடிய குமார லிங்கேஸ்வரரை வணங்க வேண்டும். அதன் பின்னர் மூலஸ்தானத்தில் வீற்றிருக்கக்கூடிய முருகப்பெருமான் வள்ளி தெய்வானை உள்ளிட்டோரை வழிபாடு செய்ய வேண்டும்.
திருத்தணி முருகனின் வழிபட்டால் தீராத துன்பம் மற்றும் துயரம் உள்ளிட்டவைகள் அனைத்தும் நிவர்த்தி அடையும் என கூறப்படுகிறது.
வழித்தடம்
இந்த கோயில் சென்னையில் இருந்து 84 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. அரக்கோணத்தில் இருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. கோயிலுக்குச் செல்ல பேருந்து வசதிகள் உள்ளன.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9