Thursday Temple: மனைவியை தேடிச்சென்ற சூரிய பகவான்.. சாபம் கொடுத்த பிரம்ம தேவர்.. விமோசனம் கொடுத்த ரவீஸ்வரர்
Thursday Temple: சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் சென்னை மாவட்டத்தில் உள்ள வியாசர்பாடி அருள்மிகு ரவீஸ்வரர் திருக்கோயில். இந்த திருக்கோயிலும் இருக்கக்கூடிய சிவபெருமான் ரவீஸ்வரர் எனவும் தாயார் மரகதாம்பாள் என்ற திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றனர்.
Thursday Temple: உலகம் முழுவதும் மிகப்பெரிய பக்தர்கள் கூட்டத்தை தன்வசம் வைத்திருக்க கூடியவர் சிவபெருமான். எங்கும் சிவன் எதிலும் சிவம் என திரும்பும் திசை எல்லாம் சிவபெருமானுக்கு மிகப்பெரிய கோயில்கள் அமைக்கப்பட்ட வழிபாடுகள் நடத்தப்பட்ட வருகின்றன.
குறிப்பாக இந்தியாவில் சிவபெருமானுக்கு மிகப்பெரிய பக்தர்கள் கூட்டம் இருந்து வருகிறது. சிவனை வணங்குவதை மட்டும் வேலையாக வைத்துக் கொண்டு இருக்கும் எத்தனையோ பக்தர்கள் என்றும் பல கோடி மக்கள் இருந்து வருகின்றனர்.
குறிப்பாக தமிழ்நாட்டில் மிகப்பெரிய கோயில்கள் அமைக்கப்பட்டு சிவபெருமானுக்கு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. மண்ணுக்காக மன்னர்கள் போரிட்டு வந்தாலும் தங்களது கலை நயம் மற்றும் சிவன் மீது கொண்ட பக்தி வெளிப்படுத்துவதற்காகவே எத்தனையோ கோவில்கள் மிகப்பெரிய அளவில் கட்டப்பட்டுள்ளன.
பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தும் அந்த கோயில்கள் இன்று வரை வரலாற்று சரித்திர குறியீடாக திகழ்ந்து வருகின்றன. பல இயற்கை சீற்றங்களை தாண்டியும் பல புராணக் கதைகளை தன்வசம் வைத்து வரலாற்றுச் சுவடாக கம்பீர கோபரத்தோடு பல கோயில்கள் சிறப்பாக நின்று வருகின்றன.
அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் சென்னை மாவட்டத்தில் உள்ள வியாசர்பாடி அருள்மிகு ரவீஸ்வரர் திருக்கோயில். இந்த திருக்கோயிலும் இருக்கக்கூடிய சிவபெருமான் ரவீஸ்வரர் எனவும் தாயார் மரகதாம்பாள் என்ற திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றனர்.
தல சிறப்பு
இந்த கோயிலில் இருக்கக்கூடிய சிவபெருமானின் சன்னதிக்கு மேலே இருக்கக்கூடிய இந்திர விமானம் நடுவில் எந்த வித பிடிமானமும் இல்லாமல் கூடு போல சிறப்பாக கட்டப்பட்டுள்ளது. சிவபெருமானை மூலஸ்தானத்தில் இருந்து பார்த்தால் இது போன்ற அமைப்பு கண்ணுக்குத் தெரியும்.
சிவபெருமானின் சன்னதிக்கு வாசல் கிடையாது தெற்கு புற திசையில் இருந்து வாசல் வழியாக வந்து அதற்குப் பிறகு இவரை தரிசனம் செய்ய வேண்டும். சிவபெருமானுக்கு எதிரே இருக்கக்கூடிய சுவரில் சிவலிங்கம் போல துணை ஒன்று அமைக்கப்பட்டு இருக்கும் அதற்கு நேராக நந்தி அமைந்திருக்கும். தினமும் காலையில் சூரிய ஒளி சிவலிங்க வடிவாக அந்த துளையின் வழியே சுவாமி என் மீது படும். இது மிகவும் சிறப்பாக கருதப்படுகிறது.
தல வரலாறு
சூரிய பகவானின் மனைவி சமுக்ஞா தேவி சூரிய பகவானின் உக்கிரம் தாங்க முடியாமல் தனது நிழல் வடிவை பெண்ணாக உருவாக்கி சூரிய பகவானிடம் விட்டுச் சென்றுவிட்டார். சாயாதேவி என்று பெயரிடப்பட்ட அவர் சூரிய பகவானின் பிள்ளைகளிடம் பாரபட்சமாக நடந்து கொண்டுள்ளார்.
இதனை அறிந்து சூரிய பகவான் தனது மனைவி சமுக்ஞா தேவி பிரிந்து சென்றதை அறிந்து அவர் மீது கோபம் கொண்டார். உடனே சூரிய பகவான் தனது மனைவி
சமுக்ஞா தேவியை தேடிச் சென்றார். அப்போது அந்த வழியில் பிரம்மதேவர் யாகம் ஒன்று நடத்திக் கொண்டிருந்தார்.
மனைவியை தேடிச்சென்ற காரணத்தினால் பிரம்மதேவரை கண்டுகொள்ளாமல் சூரிய பகவான் சென்று விட்டார். இதனை அறிந்த பிரம்ம தேவர் சூரியபகவான் மீது கோபம் கொண்டார். உடனே சூரிய பகவானுக்கு சாபம் கொடுத்தார். அதன் காரணமாக பூமியில் சூரிய பகவான் மானிடராகப் பிறந்தார்.
நாரத முனிவரின் ஆலோசனைப்படி பூலோகத்தில் சூரிய பகவான் இந்த தளத்தில் ஒரு வன்னி மரத்தடியில் லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். உடனே அவருக்கு காட்சி கொடுத்த சிவபெருமான் சூரிய பகவானுக்கு சாப விமோசனம் கொடுத்தார். சூரிய பகவானின் வேண்டுதலுக்காக சிவபெருமான் லிங்கத்தில் அமர்ந்தார். சூரிய பகவானுக்கு விமோசனம் கொடுத்த காரணத்தினால் இவர் ரவீஸ்வரர் என அழைக்கப்பட்டு வருகிறார்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.