Today Pooja Time : விநாயகர் சதுர்த்தி இன்று.. வீட்டில் பூஜை செய்வதற்கு உகந்த நேரம் எது பாருங்க!
Sep 07, 2024, 06:34 AM IST
Today Pooja Time : சனிக்கிழமையில் சனிபகவான், பெருமாள், ஆஞ்சநேயர் போன்ற கடவுள்களுக்கு மிகவும் விஷேசமான நாள். இந்த நாளில் இந்த தெய்வங்களை வழிபடுவது வாழ்வில் அனைத்து நன்மைகளையும் கொண்டு வரும் என்பது மக்களின் நம்பிக்கை.
TODAY POOJA TIME : இன்று 2024 செப்டம்பர் மாதம் 7ம் தேதி சனிக்கிழமை. விநாயகர் சதுர்த்தி. இன்று காலை மாலை நல்ல நேரம், எமகண்டம், எப்போது என்பதை பார்க்கலாம். இன்று விநாயகர் சதுர்த்தி பூஜையை வீட்டில் செய்வதற்கு எது உகந்த நேரம் என்பதை பார்க்கலாம். மேலும் இன்று எந்த கடவுளை வணங்குவது உங்களுக்கு நன்மை பயக்கும். சனிக்கிழமை வழிபாட்டுக்கு உகந்த தெய்வங்கள் எவை. தெய்வங்களின் வழிபாட்டு முறைகள் குறித்த சில தகவல்களை இங்கு பார்க்கலாம். சனிக்கிழமையில் சனிபகவான், பெருமாள், ஆஞ்சநேயர் போன்ற கடவுள்களுக்கு மிகவும் விஷேசமான நாள். இந்த நாளில் இந்த தெய்வங்களை வழிபடுவது வாழ்வில் அனைத்து நன்மைகளையும் கொண்டு வரும் என்பது மக்களின் நம்பிக்கை.
சமீபத்திய புகைப்படம்
இன்றைய பஞ்சாங்கம்
தமிழ் ஆண்டு : குரோதி வருடம்
மாதம் : ஆவணி மாதம்
தேதி: 22
கிழமை : சனிக்கிழமை
பிறை : வளர்பிறை
திதி : சதுர்த்தி
நேரம் : பிற்பகல் 3 மணி 38 நிமிடம் வரை
பின்பு : பஞ்சமி
நட்சத்திரம் : இன்று சித்திரை காலை 11 மணி 44 நிமிடம் வரை பின்பு சுவாதி
சூரிய உதயம்
காலை : 6 மணி 04 நிமிடம்
நல்ல நேரம்
காலை : 7 மணி 45 நிமிடம் முதல் 8 மணி 45 நிமிடம் வரை
மாலை : 4 மணி 30 நிமிடம் முதல் 5 மணி வரை
நல்ல காரியங்கள் செய்வதை தவிர்க்க வேண்டிய நேரம்
ராகுகாலம் : காலை 9 மணி முதல் காலை 10 மணி 30 நிமிடம்
குளிகை : காலை 6 மணி முதல் 7 மணி 30 நிமிடம் வரை
எமகண்டம் : பிற்பகல் 1 மணி 30 நிமிடம் முதல் முதல் 3 மணி வரை
இன்று விநாயகர் சதுர்த்தி - பூஜை நேரம்
இன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் நடந்து வருகிறது. காலை 7 மணி முதல் 8.50 வரை பூஜை செய்யலாம். அதே போல் காலை 10.35 மணி முதல் மதியம் 1.20 வரை விநாயகர் சதுர்த்திக்கான பூஜைகளை செய்யலாம். அல்லது மாலை 6 மணிக்கு மேல் விநாயகர் சதுர்த்திக்கான பூஜைகளை செய்யலாம்.
சனிக்கிழமை வழிபாடு
இன்று சனிக்கிழமை. சனிக்கிழமையில் பொதுவாக சனிபகவான், பெருமாள், ஆஞ்சநேயர் போன்ற கடவுள்களுக்கு மிகவும் விஷேசமான நாள். இந்த நாளில் இந்த தெய்வங்களை வழிபடுவது வாழ்வில் அனைத்து நன்மைகளையும் கொண்டு வரும் என்பது மக்களின் நம்பிக்கை.
பொதுவாக சனிக் கிழமையில் சனி பகவானின் அருளை பெற வீட்டில் சமைக்கும சாதத்தில் தயிர் கலந்து அதில் கருப்பு எள்ளை சேர்க்க வேண்டும். இந்த உருண்டைகளை காக்கைக்கு வைக்க வேண்டும். இதனால் சனி தோஷத்தை நீக்கி வாழ்வில் அமைதி கிடைக்கும் என்பது நம்பிக்கை.
ஆஞ்சநேயருக்கு உகந்த நாள்
சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கும் மிகவும் உகந்த நாள் ஆகும். இந்த நாளில் வெண்ணெய் சாற்றி ஆஞ்சநேயரை மனதார வழிபடுவது உங்கள் கஷ்டங்களை நீக்கும்.சனிக்கிழமையில் அனுமன் பதிகத்தை படிப்பது மிகவும் விஷேசம்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
தொடர்ந்து ஜோதிடம் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை அறிந்து கொள்ள இந்துஸ்தான் டைம்ஸ் தமிழுடன் இணைந்திருங்கள்
டாபிக்ஸ்