தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Lakshmi Pooja: கடன் சுமை நீங்கி செல்வ செழிப்பு பெற உதவும் லட்சுமி பூஜை..! பின்பற்ற வேண்டிய சடங்குகள், விதிகள் இதோ

Lakshmi Pooja: கடன் சுமை நீங்கி செல்வ செழிப்பு பெற உதவும் லட்சுமி பூஜை..! பின்பற்ற வேண்டிய சடங்குகள், விதிகள் இதோ

Aug 27, 2024, 10:25 PM IST

Goddess Lakshmi Puja: ஒவ்வொரு பூஜைக்கு வெவ்வேறு விதமான விதிகளும், சடங்குகளும் இருக்கின்றன. அத்துடன் பூஜையின் போத வெளிப்படுத்தும் மந்திரங்களும் மாறுபடும். அதைப்போல் லட்சுமி தேவிக்கு பூஜை செய்வதற்கு முன், அவரது ஆசியை பெறுவதற்கு இந்த விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்

இந்து புராணங்களின்படி, லட்சுமி தேவி அதிர்ஷ்டம் மற்றும் செல்வத்தின் சின்னமாக பார்க்கப்படும் கடவளாக இருக்கிறார். வாரந்தோறும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் லட்சுமி தேவியை வழிபடுகிறார்கள். லட்சுமி தேவியின் அருளால் வறுமை நீங்கும் என்ற நம்பிக்கை உள்ளது
(1 / 7)

ஒவ்வொரு வியாழன் தோறும் லட்சுமி தேவி பல்வேறு சடங்குகளின்படி வழிபாடு செய்யப்படுகிறார். புராணங்களின்படி, லட்சுமி பூஜையின் போது, ​​வீடு மற்றும் பூஜை அறையை நன்கு சுத்தப்படுத்த வேண்டும்.  பின்னர் பூஜை அறையில் அமர்ந்து அமைதியான மனதுடன் வழிபட வேண்டும்
(2 / 7)

லட்சுமி பூஜையில் லட்சுமி பாஞ்சாலி பாராயணம் மிகவும் முக்கியமானது. இந்த பாஞ்சாலி தாளக்கதை பாடி பூஜை செய்வதற்கு முன் தேவியின் பாதங்களைக் நன்கு கழுவ வேண்டும்
(3 / 7)

லட்சுமி தேவிக்கு பழங்கள் மற்றும் இனிப்புகளால் ஆன பிரசாதங்களை வைத்து தர்பை, சந்தனம், மலர்கள் போன்றவற்றால் அலங்கரிக்கப்பட்டு வழிபட வேண்டும். பாயாசத்தை  பிரசாதமாக வைக்கலாம். பூஜையில் தாமரை மலரை வைத்து அர்ச்சனை செய்ய வேண்டும், தீபம் ஏற்ற வேண்டும். லட்சுமி தேவிக்கு துளசி இலைகளை அர்ப்பணிக்க கூடாது
(4 / 7)

புஷ்பாஞ்சலி மந்திரத்தை ஓதிய பின் பூஜையில் பங்கேற்கும் அனைவரின் தலையிலும் தண்ணீர் தெளித்து, கையில் மலர்களுடன் புஷ்பாஞ்சலி மந்திரத்தை மூன்று முறை ஜெபிக்கவும். அதன் பிறகு லட்சுமி தேவி மற்றும் அவரது வாகனத்துக்கும் மலர்கள் அர்ச்சனை செய்ய வேண்டும். லட்சுமி தேவியுடன் விஷ்ணுவையும் வழிபட வேண்டும். குபேரனுக்கும் மலர்களை அர்ப்பணிக்க வேண்டும்
(5 / 7)

தினமும் குளித்துவிட்டு லட்சுமி காயத்ரி மந்திரத்தை 108 முறை சொல்லுங்கள். இந்த மந்திரத்தை உச்சரிக்க தாமரை விதை மாலைகளை பயன்படுத்தலாம். மேலும் லட்சுமியின் 12வது ஸ்தோத்திரத்தை தொடர்ந்து 12 நாள்கள் பக்தியுடன் பாராயணம் செய்தால் கடன் சுமை நீங்கும் என்பது நம்பிக்கை
(6 / 7)

லட்சுமி பூஜையின் போது, ​​பூஜை அறையில் லட்சுமி தேவியின் பாதச்சுவடுகளை வரைவது புனிதமாக கருதப்படுகிறது. தினமும் லட்சுமி தேவியின் சிலைக்கு முன்பாக இரண்டு நெய் தீபம் ஏற்றுவது நல்லது
(7 / 7)

:

    பகிர்வு கட்டுரை