தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Sabarimala: சபரிமலையில் பங்குனி உத்திர திருவிழா - ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்!

Sabarimala: சபரிமலையில் பங்குனி உத்திர திருவிழா - ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்!

Mar 25, 2023, 01:47 PM IST

சபரிமலை ஐயப்பன் கோயிலில் வரும் மார்ச் 27ஆம் தேதி அன்று பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றப்படுகிறது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் வரும் மார்ச் 27ஆம் தேதி அன்று பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றப்படுகிறது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் வரும் மார்ச் 27ஆம் தேதி அன்று பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றப்படுகிறது.

உலகப் பிரசித்தி பெற்ற கோவில்களில் சபரிமலை ஐயப்பன் திருக்கோயிலும் ஒன்று. இக்கோயிலில் மண்டல மற்றும் மகர விளக்குப் பூஜை காலத்தில் இந்த லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி ஐயப்பனைத் தரிசனம் செய்ய வருவார்கள்.

சமீபத்திய புகைப்படம்

மோசமான உடலுறவில் ஈடுபடும் இரண்டு ராசிகள் இவர்கள் தான்.. சனி இந்த ராசிக்காரர்களுக்கு அதிக அழுத்தம் கொடுக்கிறார்?

May 09, 2024 06:15 AM

Today Rasi Palan : ‘நிம்மதி நிரந்தமா.. யாருக்கு பணம் செழிக்கும்’ மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்கள் இதோ!

May 09, 2024 04:30 AM

குரு ரிஷப பண மழையில் சிக்கிய ராசிகள்.. உங்களுக்கு கொட்டப் போகிறார்.. உங்க ராசி இதில் இருக்கா உடனே வந்து பாருங்க!

May 08, 2024 04:23 PM

தலை தெறிக்க ஓட விடும் செவ்வாய்.. மீனத்தில் சூறையாட்டம் போடும் செவ்வாய்.. விடாமல் ஓடும் ராசிகள்

May 08, 2024 04:12 PM

Pooram Nakshatram: ‘ஆண்டாள் பிறந்த நட்சத்திரம்!’ பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான பொதுப்பலன்கள்!

May 08, 2024 03:28 PM

பரணியில் பணமழை கொட்ட போகுது.. சூரியன் கொட்டும் அதிர்ஷ்டத்தில் நனையும் ராசிகள்.. நீங்க என்ன ராசி!

May 08, 2024 01:44 PM

அதே சமயம் மாத பூஜை திருவிழா காலங்களில் சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவார்கள். மாதம்தோறும் பூஜைகளும், திருவிழாக்களும் நடைபெறுவது வாடிக்கையாகும்.

இக்கோயிலில் ஒவ்வொரு மாதமும் படி பூஜை மார்கழி மாதத்தில் மண்டல பூஜை, தை மாதத்தில் மகர விளக்குப் பூஜை மற்றும் மகரஜோதி தரிசன நிகழ்ச்சிகள் நடைபெறும். பங்குனி மாதத்தில் சபரிமலை ஐயப்பன் கோயிலில் பாராட்டு திருவிழா நடைபெறும். சித்திரை மாதத்தில் விஷு கனி விழா நடைபெறுவது மிகவும் புகழ் பெற்ற திருவிழாக்களில் ஒன்றாகும்.

இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா தொடங்க உள்ளது. இந்த திருவிழா தொடர்ந்து 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர திருவிழா வரும் மார்ச் 27ஆம் தேதி அன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இதன் காரணமாகச் சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை ஆனது நாளை 26 ஆம் தேதி அன்று மாலை 5 மணிக்குத் திறக்கப்படுகிறது. நடைதிறக்கப்பட்டாலும் பூச்சிகள் எதுவும் நடைபெறாது.

கொடியேற்றுத் திருநாளன்று காலை தந்திரி கண்டரரு முன்னிலையில் பங்குனி உத்திர திருவிழாவுக்கான கொடி ஏற்றப்படும். அன்றைய தினத்திலிருந்து தினமும் சிறப்புப் பூஜைகள் நடைபெறும். இதனைத் தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த பங்குனி உத்திர திருவிழாவின் நிறைவு நாளான ஏப்ரல் ஐந்தாம் தேதி பம்பை ஆற்றில் பாராட்டு விழா நடைபெற உள்ளது. பத்தாம் நாள் திருவிழாவான அன்று மாலை கொடி இறக்கப்பட்டு பங்குனி உத்திர திருவிழா நிறைவடைகிறது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்