Pat Cummings Middle Finger Loss: விளையாட்டு வினையானாது! நடுவிரல் துண்டான சம்பவத்தை பகிர்ந்த கம்மின்ஸ்
- How Pat Cummins lost part of his middle finger: வலது கை நடுவிரல் பாதி உடைந்திருந்தபோதிலும் எந்த சிரமமும் இன்றி பவுலிங் செய்து வருகிறார் பேட் கம்மின்ஸ். அவரது பவுலிங் வேகத்தையும், பவுன்ஸையும் பவுலர்களால் அவ்வளவு எளிதில் கணிக்க முடியாது. அதேபோல் பந்தை மிகவும் எளிதாகவும் கேட்ச் செய்கிறார்
- How Pat Cummins lost part of his middle finger: வலது கை நடுவிரல் பாதி உடைந்திருந்தபோதிலும் எந்த சிரமமும் இன்றி பவுலிங் செய்து வருகிறார் பேட் கம்மின்ஸ். அவரது பவுலிங் வேகத்தையும், பவுன்ஸையும் பவுலர்களால் அவ்வளவு எளிதில் கணிக்க முடியாது. அதேபோல் பந்தை மிகவும் எளிதாகவும் கேட்ச் செய்கிறார்
(1 / 5)
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டிக்கு பின்னர், சன் ரைசர்ஸ் அணி கேப்டனும், ஆஸ்திரேலியா கேப்டனுமான பேட் கம்மின்ஸ் தனது கைவிரல் உடைந்திருப்பதை ஹர்திக் பாண்ட்யா, சூர்யகுமார் யாதவ் ஆகியோரிடம் காட்டிய விவகாரம் பலருக்கும் அதிர்ச்சி தரும் விஷயமாக இருந்தது. அப்போது விரல் பாதியாக உடைந்த பின்னணி கதையும் அவர் விவரித்தார்
(2 / 5)
பவுலிங் செய்யும் கையில் விரல் உடைந்தது பற்றி கம்மின்ஸிடம், பாண்ட்யா கேட்டபோது, குழந்தையாக இருக்கும்போது விபத்து ஒன்றில் சிக்கியபோது வலது கை நடுவிரலில் பாதியளவு அறுந்து விட்டதாக தெரிவித்தார். இதை கேட்ட சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் வாயடைத்து போனார்கள்
(3 / 5)
கம்மனிஸுக்கு நான்கு வயது இருந்தபோது இந்த விபத்து நேர்ந்துள்ளது. அவரது சகோதரியுடன் கதவை திறப்பதும், மூடுவதுமாக விளையாடியபோது வலது கை நடுவிரலின் மேல் பகுதி துண்டாகியுள்ளது. கம்மின்ஸை பரிசோதனை செய்த மருத்துவர்கள் வெட்டுபட்ட பகுதியை இணைக்க முடியாது என கூறியுள்ளனர்
(4 / 5)
கைகளில் அனைவருக்கும் பெரிதாக இருக்கும் நடுவிரல் கம்மின்ஸுக்கு சிறியதாக இருந்தபோதிலும், அவர் எந்த பிரச்னையும் இல்லாமல் சிறப்பாக பவுலிங் செய்து வருகிறார். ஒரு வேகப்பந்து வீச்சாளருக்கு நடுவிரல் என்பது மிகவும் முக்கியம். ஏனென்றால் அந்த விரலின் உதவியால் தான் அவுட் ஸ்விங் செய்ய முடியும். ஆனால் அந்த விரல் துண்டுபட்டாலும் கம்மின்ஸ் எந்த பாதிப்பும் இன்றி வேகம், பவுன்ஸ், ஸ்விங் என பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தி வருகிறார்
மற்ற கேலரிக்கள்