DC vs RR Innings Break: வந்துட்டாரய்யா பழைய அஸ்வின்! ராஜஸ்தானுக்கு எதிராக அதிரடியில் மிரட்டிய டெல்லி பேட்ஸ்மேன்கள்
அடிரடியான ஓபனிங்கும், பினிஷிங்கும் டெல்லி கேபிடல்ஸ் பேட்ஸ்மேன்கள் வெளிப்படுத்தி 221 ரன்கள் குவித்துள்ளனர். இந்த சீசன் முழுக்க பவுலிங்கில் பெரிதாக சாதிக்காமல் இருந்து வந்த ரவிச்சந்திரன் அஸ்வின் பழைய பாணியில் அற்புதமாக பந்து வீசி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

மூன்று விக்கெட்டுகளை வீழ்த்திய ரவிச்சந்திரன் அஸ்வின்,, அதிரடி காட்டிய டெல்லி பேட்ஸ்மேன்கள்
ஐபிஎல் 2024 தொடரின் 54வது போட்டி டெல்லி கேபிடல்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டி தொடங்குவதற்கு ராஜஸ்தான் ராயல்ஸ் 10 போட்டிகளில் 8 வெற்றியுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. டெல்லி கேபிடல்ஸ் 11 போட்டிகளில் 5 வெற்றியுடன் 7வது இடத்தில் இருக்கிறது.
இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் டோனோவன் ஃபெரேரா, ஷுபம் டூபே ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். அதேபோல் டெல்லி கேபிடல்ஸ் அணியில் இஷாந்த் ஷர்மா, குலாப்தீன் நயிப் ஆகியோர் விளையாடுகிறார்கள்.
ராஜஸ்தான் ராயல்ஸ் பவுலிங்
இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் அடித்துள்ளது.
