தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here We Will See About The Benefits Of Kamala Saptami Fast

Saptami Tithi: பலன்களை அள்ளித் தரும் கமலா சப்தமி விரதம்!

Mar 28, 2023, 05:53 PM IST

கமலா சப்தமி விரதத்தின் நன்மைகள் குறித்து இங்கே காண்போம்.
கமலா சப்தமி விரதத்தின் நன்மைகள் குறித்து இங்கே காண்போம்.

கமலா சப்தமி விரதத்தின் நன்மைகள் குறித்து இங்கே காண்போம்.

ஆன்மீகத்தில் விரதத்தின் மூலம் பல நன்மைகள் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. அறிவியல் ரீதியாக ஆன்மீகத்தில் உடலில் பல முன்னேற்றங்கள் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.

சமீபத்திய புகைப்படம்

விடாமல் விரட்டி விரட்டி அடிக்க போகும் செவ்வாய்.. திட்டத்தில் சிக்கிய ராசிகள்.. கட்டத்தை மாற்ற முடியாது..!

May 02, 2024 02:48 PM

சனி கஷ்டப்படுத்த போகிறார்.. வக்ரத்தில் சிக்கிய 3 ராசிகள்.. 5 மாதம் விடமாட்டார்.. கும்பத்தில் சம்பவம்

May 02, 2024 02:17 PM

Jackpot: ஜாக்பாட் அடிக்க போகும் ராசிகள்.. பண மழையில் அசைக்க முடியாத ராசி.. உங்க ராசி இதில் இருக்கா?

May 02, 2024 01:40 PM

Transit of Venus : சுக்கிரன் பெயர்ச்சி.. பலன்களை அள்ளப்போகும் மூன்று ராசிகள்.. பதவி உயர்வு.. சம்பள உயர்வு கிடைக்கும்!

May 02, 2024 12:19 PM

மீனத்தில் காப்புக் கட்டிய புதன்.. இனி இந்த ராசிகளை அசைக்க முடியாது.. பணத்தில் குளிக்கும் 3 ராசிகள்..!

May 02, 2024 10:35 AM

குரு பிச்சி தூக்கி போடப்போறார்.. மே முதல் ஒன்னும் பண்ண முடியாது.. இந்த ராசிகளுக்கு தலையில் அடி

May 02, 2024 10:20 AM

நமது வாழ்க்கையில் அனைத்தையும் நிர்ணயிப்பது நவகிரகங்கள் என ஆன்மீகம் கூறுகிறது. நவகிரகங்களின் செயல்பாட்டால் நமது வாழ்வில் எந்தவிதமான மாற்றத்தையும் ஏற்படுத்த முடியும் எனவும் கூறப்படுகிறது.

சில நேரங்களில் ஏற்படும் சிக்கல்கள் காரணமாக அதனை மாற்றுவதற்காகவே பரிகாரங்கள் கொண்டுவரப்பட்டன. அதன் மூலமாகவே விரதங்களும், சிறப்பு விழாக்களும் கொண்டாடப்படுகின்றது.

அந்த வகையில்தான் திதிகளும் உண்டாக்கப்பட்டன. அனைத்துமே நமக்கு நன்மைகளை ஏற்படுத்துவதற்காகவே உண்டாக்கப்பட்டது என ஆன்மீகத்தின் மூலம் முன்னோர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேபோல் திதிகள் ஏழு வகையாகப் பிரிக்கப்படும். அந்த ஏழு துதிகளில் ஏழாவது திதி மிகவும் சிறப்பாகக் கூறப்படுகிறது. அந்த விதியின் பெயர்தான் சப்தமி திதி. சூரியனை வழி விடுவதே இதன் முக்கிய சிறப்பாகும். பங்குனி மாதத்தில் வளர்பிறையில் வரக்கூடிய திதி இந்த சப்தமி திதி. இந்த சப்தமி திதியைக் கமலா சப்தமி எனவும் அழைக்கப்படுகிறது.

இந்த கமலா சப்தமி திருநாளில் விரதம் இருந்து மகாலட்சுமியையும், சூரிய பகவானையும் வழிபட்டால் சந்ததி விருத்தி கிடைக்கும், குழந்தை செல்வம் இல்லாதவர்களுக்குக் குழந்தைப் பேறு கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.

குறிப்பாக இந்நாளில் விரதம் இருந்து வழிபட்டால் கண் நோய்கள் நீங்கும் என ஆன்மீகம் கூறுகிறது. இந்த சப்தமி திதி திருநாளில் மகாலட்சுமியை நோக்கி மந்திரங்களையும் சுலோகங்களையும் உச்சரித்து வழிபட்டால் அதீத நன்மைகள் கிடைக்குமாம்.

சூரிய பகவான் வீற்றிருக்கும் கோயில்களுக்குச் சென்று வழிபாடு செய்தால் நமது வேண்டுதல்கள் நிறைவேறும் எனக் கூறப்படுகிறது. காலையிலிருந்து மாலை வரை வீட்டில் பூஜை செய்து விட்டு பின்னர் மாலை நேரத்தில் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்ய வேண்டும்.

குறிப்பாக நமது வேண்டுதல்கள் நிறைவேற வேண்டுமென்றால் தானங்கள் செய்ய வேண்டும். அனைத்து கடவுள்களும் மிகவும் விரும்புவது தானங்களைத் தான்.

தானத்தில் சிறந்தது அன்னதானம், இல்லையென்றால் தன்னால் முடிந்தவர்கள் இயன்றவற்றை மற்றவர்களுக்குத் தானமாகக் கொடுக்கலாம். அதன் காரணமாகவே நமது வேண்டுதல்கள் நிறைவேறும் என ஆன்மீகம் கூறுகிறது.

பின்னர் வீட்டிற்கு வந்து விளக்கேற்றி வழிபாடு செய்து விட்டு காலை நேரத்தில் தொடங்கியவர்கள் தங்களது விரதத்தை முடித்துக் கொள்ளலாம்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்