தமிழ் செய்திகள்  /  மட்டைப்பந்து  /  Csk Vs Pbks Toss: இரண்டு மாற்றங்கள் - பதிரனாவுக்கு பதிலாக புதிய வீரரை களமிறக்கிய சிஎஸ்கே! பஞ்சாப் பவுலிங்

CSK vs PBKS Toss: இரண்டு மாற்றங்கள் - பதிரனாவுக்கு பதிலாக புதிய வீரரை களமிறக்கிய சிஎஸ்கே! பஞ்சாப் பவுலிங்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
May 01, 2024 07:20 PM IST

மீண்டும் மீண்டும் டாஸில் தோல்வியடைந்து வருகிறார் ருதுராஜ் கெய்க்வாட். பஞ்சாப் டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்திருக்கும் நிலையில் இரண்டு முக்கிய மாற்றங்களுடன் சிஎஸ்கே அணி களமிறங்குகிறது. இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ரிச்சார்டு க்ளீசன் சிஎஸ்கேவுக்காக முதல் போட்டியில் களமிறங்குகிறார்.

டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் பவுலிங் தேர்வு
டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் பவுலிங் தேர்வு (AP)

ட்ரெண்டிங் செய்திகள்

பஞ்சாப் அணியை பொறுத்தவரை மிகவும் முக்கியமான போட்டியாக இருப்பதோடு, கட்டாய வெற்றியை பெற்றாக வேண்டிய போட்டியாகவும் உள்ளது. இந்த போட்டியில் இருந்து இனி வரும் போட்டிகளில் அனைத்திலும் வெற்றி பெற்றால் மட்டுமே பஞ்சாப் கிங்ஸ் ப்ளே ஆஃப் வாய்ப்பை பெற முடியும்.

பஞ்சாப் பவுலிங்

இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் சாம் கரன் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து பஞ்சாப் கிங்ஸ் அணி கடந்த போட்டியில் விளையாடிய அதே அணியுடன் களமிறங்குகிறது. 

சிஎஸ்கே அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அணியின் ஸ்டிரைக் பவுலரான பதிரான லேசான காயம் காரணமாக விளையாடிவில்லை. அதேபோல் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் துஷார் தேஷ்பாண்டேவும் விளையாடவில்லை.

இவர்களுக்கு பதிலாக ஷர்துல் தாக்கூர், ரிச்சார்டு க்ளீசன் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இங்கிலாந்து பவுலரான ரிச்சர்டு க்ளீசன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக முதல் போட்டியில் களமிறங்குகிறார்.

இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடியிருக்கும் 9 போட்டிகளில் ஒரேயொரு முறை மட்டுமே டாஸ் ஜெயித்துள்ளார் அந்த அணியின் கேப்டனான ருதுராஜ் கெய்க்வாட். தற்போது தொடர்ச்சியாக நான்காவது முறை டாஸில் தோல்வியுற்றுள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் இதுவரை

இந்த இரு அணிகளும் 28 போட்டிகளில் இதுவரை நேருக்கு நேர் மோதியுள்ளன. சிஎஸ்கே 15, பஞ்சாப் கிங்ஸ் 13 வெற்றிகளை பெற்றுள்ளன. பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக சிஎஸ்கேவின் 240 என உள்ளது. சிஎஸ்கேவுக்கு எதிராக பஞ்சாப் அணியின் அதிகபட்ச ஸ்கோர் 231 என இருக்கிறது.

இந்த இரு அணிகளுக்கு இடையிலான கடைசி 5 மோதலில் பஞ்சாப் கிங்ஸ் 4 வெற்றிகளை பெற்றுள்ளது. 2021 சீசனில் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசியாக பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தியது. எனவே இரண்டு சீசன்களுக்கு பிறகு சிஎஸ்கே தனது சொந்த மண்ணில் பஞ்சாப்பை வீழ்த்துமா என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

இன்றைய போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் விவரம்

சென்னை சூப்பர் கிங்ஸ்: ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), அஜிங்கியா ரகானே, டேரில் மிட்செல், ஷிவம் டூபே, மொயின் அலி, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி (விக்கெட் கீப்பர்), தீபக் சஹார், ஷர்துல் தாக்கூர், ரிச்சர்டு க்ளீசன், முஸ்தபிசுர் ரஹ்மான்

பஞ்சாப் கிங்ஸ்: ஜானி பேர்ஸ்டே, ரிலி ரோசவ், ஜித்தேஷ் ஷர்மா (விக்கெட் கீப்பர்), சாம் கரன் (கேப்டன்), சஷாங்க் சிங், அசுடோஷ் ஷர்மா, ஹர்ப்ரீத் பிரார், ஹர்ஷல் படேல், ராகுல் சஹார், ககிசோ ரபாடா, அர்ஷ்தீப் சிங்

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point