தமிழ் செய்திகள்  /  மட்டைப்பந்து  /  Srh Vs Rr Live Score: ராஜஸ்தான் பவுலர்கள் பந்து வீச்சை நாலாபுறமும் பறக்கவிட்ட சன் ரைசர்ஸ்! சவாலான இலக்கு

SRH vs RR Live Score: ராஜஸ்தான் பவுலர்கள் பந்து வீச்சை நாலாபுறமும் பறக்கவிட்ட சன் ரைசர்ஸ்! சவாலான இலக்கு

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
May 02, 2024 09:23 PM IST

இந்த சீசனில் பவர்ப்ளே முடிவில் மிகவும் குறைவான ஸ்கோரை பதிவு செய்த சன் ரைசர்ஸ், அதன் பின்னர் அதிரடியாட்டத்தை வெளிப்படுத்தி மற்றொரு 200+ ஸ்கோரை அடித்துள்ளது. இளம் பேட்ஸ்மேன் நிதிஷ் குமார் ரெட்டி, ஹென்ரிச் கிளாசன் ஆகியோர் ராஜஸ்தான் பவுலர்களுக்கு எதிராக வானவேடிக்கை காட்டினார்கள்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சன் ரைசர்ஸ் பேட்ஸ்மேன் நிதிஷ் குமார் ரெட்டி
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சன் ரைசர்ஸ் பேட்ஸ்மேன் நிதிஷ் குமார் ரெட்டி (PTI)

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த இரு அணிகளுக்கு இடையே இந்த சீசனில் முதல் மோதலாக இந்த போட்டி அமைந்துள்ளது. சன் ரைசர்ஸ் அணியில் ஐடன் மார்கரம்க்கு பதிலாக மார்கே ஜான்சன் சேர்க்கப்பட்டுள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

சன் ரைசர்ஸ் பேட்டிங்

இந்த போட்டியில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் கேப்டன் பேட் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட் செய்த அந்த அணி 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் அடித்துள்ளது. அதிகபட்சமாக நிதிஷ் குமார் ரெட்டி 76, ட்ராவிஸ் ஹெட் 58, ஹென்ரிச் கிளாசன் 42 ரன்கள் அடித்தனர்.

ராஜஸ்தான் ராயல்ஸ் பவுலர்களில் ஆவேஷ் கான் 2 விக்கெட்டுகளையும், சந்தீப் ஷர்மா ஒரு விக்கெட்டையும் எடுத்தனர். அந்த அணியின் ஸ்டிரைக் பவுலரும், ஸ்பின்னருமான யஸ்வேந்திரா சஹால் ஓவரை சன் ரைசர்ஸ் பேட்ஸ்மேன்கள் அடித்து நொறுக்கினார்கள். 4 ஓவர்களில் 62 ரன்கள் வாரி வழங்கிய அவர் விக்கெட் எதுவும் வீழ்த்தவில்லை.

பவர்ப்ளேயில் குறைவான ஸ்கோர்

அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சன் ரைசர்ஸ் ஓபனரும், இளம் பேட்ஸ்மேனுமான அபிஷேக் ஷர்மா 12 ரன்களில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். இவரை தொடர்ந்து வந்த அனமோல்ப்ரீத் சிங் 5 ரன்னில் வெளியேறினார்.

இந்த சீசனில் பவர்ப்ளே ஓவர்களில் பட்டையை கிளப்பி வந்த சன் ரைசர்ஸ் இந்த போட்டியில் முதல் ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 37 ரன்கள் மட்டுமே எடுத்து. இதன்மூலம் மிகவும் குறைவான ஸ்கோரை பதிவு செய்தது.

ட்ராவிஸ் ஹெட் - நிதிஷ் குமார் ரெட்டி அதிரடி

இதைத்தொடர்ந்து களத்தில் இருந்த ட்ராவிஸ் ஹெட், நிதிஷ் குமார் ரெட்டி ஆகிய கியரை மாற்றி அதிரடிக்கு மாறினார்கள், மிடில் ஓவர்களில் ராஜஸ்தான் ராயல்ஸ் பவுலர்களின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர்.

இருவரும் தங்களது அரைசதத்தை பூர்த்தி செய்தனர். ஆவேஷ் பந்தில் ஹூக் ஷாட் ஆட முயற்சித்த ஹெட் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அவர் 44 பந்துகளில் 58 ரன்கள் எடுத்தார்.

கிளாசன் மிரட்டல்

ஆட்டத்தின் 14.4 ஓவரில் களமிறங்கிய கிளாசன் தொடக்கம் முதலே அடித்து ஆட தொடங்கினார். இதனால் அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது.

ஏற்கனவே களத்தில் இருந்த நிதிஷ் குமார் ரெட்டி, ராஜஸ்தான் பவுலர்களின் பந்து வீச்சில் சிக்ஸர் வேட்டை நிகழ்த்தினார்.

கடைசி வரை இவர்கள் இருவரும் அவுட்டாகாத நிலையில் 32 பந்துகளில் 70 ரன்கள் சேர்த்தனர்.

நிதிஷ் குமார் ரெட்டி 42 பந்துகளில் 76, கிளாசன் 19 பந்துகளில் 42 ரன்கள் அடித்து நாட் அவுட் பேட்ஸ்மேனாக உள்ளார்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

 

IPL_Entry_Point