தமிழ் செய்திகள்  /  மட்டைப்பந்து  /  Csk Vs Pbks Live Score: அடிசறுக்கிய தோனி! தனியொருவனாக போராடிய ருதுராஜ் - பவுலிங்கில் சிஎஸ்கேவை கட்டுப்படுத்திய பஞ்சாப்

CSK vs PBKS Live Score: அடிசறுக்கிய தோனி! தனியொருவனாக போராடிய ருதுராஜ் - பவுலிங்கில் சிஎஸ்கேவை கட்டுப்படுத்திய பஞ்சாப்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
May 01, 2024 09:30 PM IST

ஒரு புறம் சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்த தங்களது விக்கெட்டுகளை பறிகொடுக்க தனியொருவனாக சிறப்பாக பேட் செய்து ரன் குவித்து வந்த ருதுராஜ் கெய்க்வாட் அரைசதமும் அடித்தார். 8 போட்டிகளுக்கு பிறகு தோனி பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக தனது விக்கெட்டை பறிகொடுத்துள்ளார்.

ஸ்பின்னர் ராகுல் சஹார் ஓவரில் தோனி பேட்டிங்
ஸ்பின்னர் ராகுல் சஹார் ஓவரில் தோனி பேட்டிங் (AP)

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த போட்டியில் சிஎஸ்கே அணியில் பதிரனா, துஷார் தேஷ்பாண்டேவுக்கு பதிலாக ஷர்துல் தாக்கூர், ரிச்சர்ட் க்ளீசன் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளரான க்ளீசன் சிஎஸ்கே அணிக்காக முதல் போட்டியில் களமிறங்கியுள்ளார்.

பஞ்சாப் பவுலிங்

இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் சாம் கரன் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து முதலில் பேட் செய்த சிஎஸ்கே 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் அடித்துள்ளது. அதிகபட்சமாக ருதுராஜ் கெய்க்வாட் 62, அஜிங்கியா ரகானே 29, சமீர் ரிஸ்வி 21, மொயின் அலி 15 ரன்கள் அடித்தனர்.

பஞ்சாப் பவுலர்களில் ஹர்ப்ரீத் பிரார், ராகுல் சஹார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். ககிசோ ரபாடா, அர்ஷ்தீப் சிங் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர். ஸ்பின்னர்களான பிரார், ராகுல் சஹார் ஆகியோர் சிறப்பாக பவுலிங் செய்து சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள் நன்கு கட்டுப்படுத்தினர். இதனால் அணியின் ஸ்கோரும் வெகுவாக குறைந்தது.  

நல்ல தொடக்கத்துக்கு பின் சரிவு

சிஎஸ்கேவுக்கு ருதுராஜ் - ரகானே நல்ல தொடக்கத்தை தந்தனர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 64 ரன்கள் சேர்த்தனர். சிறப்பாக பேட் செய்து வந்த ஹர்ப்ரீத் பிரார் ஓவரில் அடிக்க முயன்று அவுட்டானார்.

அதே ஓவரில் அடுத்த பந்தில் சிக்ஸர் மன்னன் ஷிவம் டூபேவும் முதல் பந்திலேயே டக்அவுட்டாகி வெளியேறினார்.

இதைத்தொடர்ந்து பேட் செய்ய வந்த ஜடேஜாவும், ஸ்பின்னர் ராகுல் சஹார் வீசிய அடுத்த ஓவர் 2 ரன்னில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார்.

தனியொருவனாக போராடிய ருதுராஜ்

அடுத்தடுத்து மூன்று முக்கிய விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே தடுமாறியதோடு, அணியின் ரன்ரேட்டும் வெகுவாக குறைந்தது.

இம்பேக்ட் வீரராக களமிறக்கப்பட்ட சமீர் ரிஸ்வி நிதானமாக பேட் செய்து ருதுராஜுடன் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்தார்.

தனியொருவனாக போராடி ரன்களை சேர்த்து வந்து ருதுராஜ் தொடர்ச்சியாக நான்காவது அரைசதத்தை அடித்தார். பொறுமையாக ரன்களை சேர்த்து வந்த ரிஸ்வி 21 ரன்களில் ரபாடா பந்து வீச்சில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார்.

இதைத்தொடர்ந்து வந்து மொயின் அலியும் 15 ரன் என சிறிய கேமியோ இன்னிங்ஸ் ஆடிவிட்ட அவுட்டானார்ய

இதற்கிடையே சிஎஸ்கே பேட்ஸ்மேன்களில் ரன்குவிப்பில் ஈடுபட்டு வந்த ருதுராஜ் 68 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார்

அடிசறுக்கிய தோனி

ஆட்டத்தின் 17.5 ஓவரில் ருதுராஜ் அவுட்டானவுடன் தோனி களமிறங்கினார். அப்போது அணியின் ஸ்கோர் 5 விக்கெட் இழப்புக்கு 145 என இருந்தது.

இதையடுத்து தோனி க்ரீஸில் இருந்ததால் அணியின் ஸ்கோர் உயரும் என எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் ஏமாற்றமே மிஞ்சியது.

ஆடத்தின் 19வது ஓவரை ஸ்பின்னர் ராகுல் சஹார் வீசினார். ஆடுகளம் ஸ்பின்னுக்கு நன்றாக ஒத்துழைக்க அந்த ஓவரில் தோனி பேட் செய்து 3 ரன்கள் மட்டும் அடிக்கப்பட்டது.

பின்னர் அர்ஷ்தீப் வீசிய ஆட்டத்தின் கடைசி ஓவரில் தோனி ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் அடித்தார். இருப்பினும் அந்த ஓவரில் 13 ரன்கள் மட்டும் எடுக்கப்பட்டது.

ஆட்டத்தின் கடைசி பந்தில் இரண்டு ரன்கள் எடுக்கும் முயற்சியில் இரண்டாவது ரன்னில் தோனி அவுட்டானார். இதனால் தொடர்ச்சியாக 8 இன்னிங்ஸில் நாட் அவுட்டாக இருந்த அவரது பயணம் முடிவுக்கு வந்தது.

கலக்கிய ஸ்பின்னர்கள்

பஞ்சாப் ஸ்பின்னர்களான ஹர்ப்ரீத் பிரார், ராகுல் சஹார் இணைந்து 8 ஓவரில் 33 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை எடுத்தனர். இதில் மிக முக்கியமாக இவர்கள் ஓவரில் ஒரு பவுண்டரி கூட அடிக்கவில்லை. இந்த கூட்டணியே சிஎஸ்கே அணியை ரன் குவிக்க விடாமல் முக்கிய காரணமாக இருந்தது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point