சனி கஷ்டப்படுத்த போகிறார்.. வக்ரத்தில் சிக்கிய 3 ராசிகள்.. 5 மாதம் விடமாட்டார்.. கும்பத்தில் சம்பவம்
- Saturn: ஜூன் 29ஆம் தேதி அன்று சனி பகவான் கும்ப ராசியில் வக்ரப் பெயர்ச்சி அடைகிறார். வரும் நவம்பர் 15ஆம் தேதி வரை இதே நிலையில் பயணம் செய்வார். இதனுடைய தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும் குறிப்பிட்ட மூன்று ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.
- Saturn: ஜூன் 29ஆம் தேதி அன்று சனி பகவான் கும்ப ராசியில் வக்ரப் பெயர்ச்சி அடைகிறார். வரும் நவம்பர் 15ஆம் தேதி வரை இதே நிலையில் பயணம் செய்வார். இதனுடைய தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும் குறிப்பிட்ட மூன்று ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.
(1 / 6)
நவக்கிரகங்களில் நீதிமானாக விளங்க கூடியவர் சனி பகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக் கூடியவர் சனி பகவான். கர்மநாயகனாக திகழ்ந்து வருகின்றார். ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். சனிபகவான் நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக விளங்கி வருகின்றார்.
(2 / 6)
சனி பகவான் தற்போது கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். இது இவருடைய சொந்தமான ராசியாகும் 30 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ராசியில் பயணம் செய்து வருகிறார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசிகள் பயணம் செய்வார் வரும் 2025 ஆம் ஆண்டுக்கான இடத்தை மாற்றுகிறார். சனிபகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
(3 / 6)
அந்த வகையில் வரும் ஜூன் 29ஆம் தேதி அன்று சனி பகவான் கும்ப ராசியில் வக்ரப் பெயர்ச்சி அடைகிறார். வரும் நவம்பர் 15ஆம் தேதி வரை இதே நிலையில் பயணம் செய்வார். இதனுடைய தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும் குறிப்பிட்ட மூன்று ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அது எந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
(4 / 6)
மேஷ ராசி: உங்கள் ராசியில் 11 வது வீட்டில் சனி பகவான் வக்ர பெயர்ச்சி அடைகின்றார். இதனால் உங்களுக்கு அவ்வளவு சிறப்பான பலன்கள் அமையாது. பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சில நேரங்களில் ஆசைகள் நிறைவேறாமல் போய்விடும். மன விரக்தி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
(5 / 6)
ரிஷப ராசி: உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் சனி பகவான் வக்கிர பெயர்ச்சி அடைகிறார். இதனால் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் பணிச்சுமை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. கடின உழைப்பு உங்களுக்கு மிகப்பெரிய பாராட்டுகளை எல்லாம் பெற்று தராது. நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
(6 / 6)
கன்னி ராசி: உங்கள் ராசிகள் ஆறாவது வீட்டில் சனி வக்ர பெயர்ச்சி அடைகிறார். இதனால் இந்த காலம் உங்களுக்கு சிறப்பான காலமாக இருக்காது. நிதி ரீதியாக நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உடன் வேலை செய்பவர்களோடு கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. உயர் அலுவலர்களிடம் பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
மற்ற கேலரிக்கள்