தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Ht Book Spl: சபரிமலையும் அதன் அழிவில்லா தத்துவத்தையும் அறிந்து கொள்ள இந்த நூலை படிங்க!

HT Book SPL: சபரிமலையும் அதன் அழிவில்லா தத்துவத்தையும் அறிந்து கொள்ள இந்த நூலை படிங்க!

Manigandan K T HT Tamil

May 23, 2023, 05:45 AM IST

Sabarimala: போக்குவரத்து பெரிதும் இல்லாத 50 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் சபரிமலை செல்வது என்பது சவாலான ஒன்றாக இருந்துவந்தது.
Sabarimala: போக்குவரத்து பெரிதும் இல்லாத 50 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் சபரிமலை செல்வது என்பது சவாலான ஒன்றாக இருந்துவந்தது.

Sabarimala: போக்குவரத்து பெரிதும் இல்லாத 50 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் சபரிமலை செல்வது என்பது சவாலான ஒன்றாக இருந்துவந்தது.

"கர்மம், பக்தி, ஞானம் மூன்றையும் இணைத்து ஒன்றாக்கும் பணியைத் தலம், தீர்த்தம், மூர்த்தம் மூன்றும் செய்கின்றன. இதன் பலனாக மக்கள் கண்டதே சேஷ்த்ராடனம், அல்லது தீர்த்தாடனம். எனவே, வாழ்வின் பயனைப் பெற தங்களால் இயன்ற அளவு தீர்த்த யாத்திரையை மேற்கொள்வது மக்களாய்ப் பிறந்த நமது முக்கியமான நன்மைகளில் ஒன்றாகும்."

சமீபத்திய புகைப்படம்

Anusham Nakshatram: 'மகா லட்சுமி பிறந்த நட்சத்திரம்!’ அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான பொது பலன்கள்!

May 03, 2024 05:00 PM

சனியால் கண்ணீர் விட்டு கதற போகும் ராசிகள்.. துன்பத்தில் சிக்கிய 3 ராசிகள்.. வக்ரத்தில் மாட்டியதால் சிக்கல்!

May 03, 2024 04:45 PM

மே மாதம் ஜாலிதான்.. சுக்கிரன் சூப்பராக வருகிறார்.. பணக்கடலில் மிதக்கும் ராசிகள் இவர்கள்தான்

May 03, 2024 04:36 PM

அடை மழையாக கொட்டும் பணம்.. புதன் புயலாக மாறிவிட்டார்.. 3 ராசிகளுக்கு யோகம் வந்துவிட்டது

May 03, 2024 02:51 PM

Akshaya Tritiya 2024 : அட்சய திருதியை நாளில் இந்த 5 மந்திரங்களை சொல்லுங்கள்.. வீட்டில் பண மழைதான்.. குபேரன் கொட்டுவார்!

May 03, 2024 01:55 PM

குரு வெட்டப் போகிறார்.. மறைந்து தாக்க போகிறார்.. பணத்தில் குளிக்க போகும் ராசிகள்.. அதிர்ஷ்டம் உங்களுக்கு தான்

May 03, 2024 01:20 PM

'சபரிமலை அதன் அழிவில்லா தத்துவம்' புத்தகத்தை திறந்ததும் மூன்றாம் பக்கத்தில் காஞ்சி மகா பெரியவா கூறிய இந்த பொன்மொழியுடன் தொடங்குகிறது இந்நூல்.

சபரிமலை, கேரள மாநிலத்தில் பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த மலையில் சக்திவாய்ந்த ஸ்ரீ ஐயப்பன் உலக மக்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

கார்த்திகை மாதம் பிறந்தாலே தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா என தென் தமிழ்நாட்டில் ஐயப்பனுக்கு மாலை அணிந்து பக்தி சிரத்தையுடன் விரதம் இருந்து கோயிலுக்குச் சென்று வருவார்கள்.

போக்குவரத்து பெரிதும் இல்லாத 50 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் சபரிமலை செல்வது என்பது சவாலான ஒன்றாக இருந்துவந்தது.

அடர்ந்த வனப்பகுதியில் வீற்றிருக்கும் ஐயப்பனை தரிசிக்க பல தடைகளைத் தாண்டி செல்ல வேண்டும். அதற்காகவே இந்தக் கடுமையான ஒரு மண்டல விரதத்தை மாலை அணிபவர்கள் கட்டாயம் கடைப்பிடிக்க அறிவுறுத்தப்படுகிறது.

ஆனால் இன்றோ இந்த வேகமான உலகத்தில் மாலை அணிந்து அன்றைய தினமே சபரிமலைக்கு செல்பவர்களும் இருக்கிறார்கள்.

ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் பதினெட்டு படிகள் ஏறி சென்றால் த்துவம் அஸி என சமஸ்கிருதத்திலும் மலையாளத்திலும் எழுதியிருக்கும்.

அதற்கு "நீயே அந்த பேருண்மை" என அர்த்தம் எனவும் சபரிமலை யாத்திரையால்க கிடைக்கும் பலன்களும் இந்நூலில் தரப்பட்டுள்ளன.

நூலின் அட்டைப் படம்

சபரிமலை புனித யாத்திரை, ஸ்ரீ ஐயப்பனுக்கு மேற்கொள்ளப்பட வேண்டிய விரத முறைகள், இருமுடி கட்டின் அவசியம், அதன் பலன்கள் என பல தகவல்கள் இந்தப் புத்தகத்தில் தரப்பட்டுள்ளன.

அதேபோன்று பெரிய பாதையில் எப்படி செல்ல வேண்டும் எந்தெந்த இடங்களைக் கடந்து செல்ல வேண்டும் என்பதும் இந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், கிடைப்பதற்கு அரிய ஐயப்பன் புகைப்படங்கள், சபரிமலை 40-50 ஆண்டுகளுக்கு முதல் எப்படி இருந்தது என்பதை அறிந்து கொள்ள உதவும் புகைப்படங்களும் இந்நூலில் கொடுக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீகாந்த், சி.வி.மனோஜ் இந்நூலை எழுதியுள்ளனர். நிர்மலா வெங்கடேசன் தமிழாக்கம் செய்துள்ளார். மொத்தம் 150 பக்கங்களைக் கொண்ட இந்நூலின் விலை ரூ.120.

https://www.integralbooks.com/sabarimala-tamil இந்த லிங்க்கில் இப்புத்தகத்தை நீங்கள் வாங்கலாம். சபரிமலை செல்பவராகவும் ஐயப்பப் பக்தராகவும் நீங்கள் இருந்தால் கட்டாயம் படிக்க வேண்டிய நூல் இது.

டாபிக்ஸ்