தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ‘சிறுமி பாலியல் வன்கொடுமை’ திமுக கவுன்சிலர் பக்கிரிசாமி நீக்கப்பட்ட பின்னணி!

‘சிறுமி பாலியல் வன்கொடுமை’ திமுக கவுன்சிலர் பக்கிரிசாமி நீக்கப்பட்ட பின்னணி!

Pandeeswari Gurusamy HT Tamil
Apr 12, 2023 11:30 AM IST

DMK councillor Pakriswamy: இன்று பாலியல் புகாரில் சிக்கியதால் திமுகவில் இருந்து நீக்கப்பட்ட கவுன்சிலர் பக்கிரிசாமி கைது செய்யப்பட்டுள்ளார்.

பக்கிரிசாமி
பக்கிரிசாமி

ட்ரெண்டிங் செய்திகள்

கடலூரில் தனது பள்ளியில் படித்த சிறுமியிடம் பக்கிரிசாமி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் இன்று பக்கிரி சாமியை திமுக கட்சியில் இருந்து நீக்கி அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, கடலூர் மேற்கு மாவட்டம், விருத்தாசலம் நகராட்சி 30வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் பக்கிரிசாமி, கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நிரந்தரமாக நீக்கி (Dismiss) வைக்கப்படுகிறார் என பொதுச்செயலாளர் துறைமுருகன் அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து இன்று பாலியல் புகாரில் சிக்கியதால் திமுகவில் இருந்து நீக்கப்பட்ட கவுன்சிலர் பக்கிரிசாமி கைது செய்யப்பட்டுள்ளார். போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பக்கிரிசாமியிடம் விருத்தாசலம் மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் என்ற முதல் கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. 

இந்த விவகாரம் குறித்து சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின் இது குறித்து மாவட்ட குழந்தை நல அலுவலகம்  உரிய முறையில் விசாரித்து மேற்கொண்டு வருகிறார்கள் என தெரிவித்தார். 

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்