Savukku Shankar: சவுக்கு சங்கரிடம் அரசியல் பேசிய கமல்ஹாசன்! மாறுகிறதா கூட்டணி கணக்கு?
”தான் எழுதிய ’கேள்வி எண் 17182’ என்ற நூலை கமல்ஹாசனிடம் அளிக்கும் புகைப்படத்தை ’எக்ஸ்’ சமூகவலைத்தளத்தில் சவுக்கு சங்கர் பதிவிட்டுள்ளார்.”
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் உடன் பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர்
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் உடன் மூத்த பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் சந்தித்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் பேசு பொருள் ஆகி உள்ளது.
மூத்த பத்திரிக்கையாளரான சவுக்கு சங்கர் திமுக அரசுக்கு எதிரான விமர்சனங்களை சமூகவலைத்தளமான ட்விட்டர் மற்றும் யூட்டியுபில் தொடர்ந்து முன் வைத்து வருகிறார். இந்த நிலையில் ‘சவுக்கு மீடியா’ என்ற புதிய செய்தி நிறுவனத்தையும் அவர் தொடங்கி உள்ளார்.
இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும், நடிகருமான கமல்ஹசனை சந்தித்து சவுக்கு சங்கர் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த சந்திப்பில் தான் எழுதிய ’கேள்வி எண் 17182’ என்ற நூலை கமல்ஹாசனிடம் அளிக்கும் புகைப்படத்தை ’எக்ஸ்’ சமூகவலைத்தளத்தில் சவுக்கு சங்கர் பதிவிட்டுள்ளார்.