தமிழ் செய்திகள்  /  மட்டைப்பந்து  /  Mi Vs Lsg Preview: மும்பை இந்தியன்ஸ்-லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸுக்கு இந்த சீசனில் கடைசி மேட்ச் இன்று

MI vs LSG Preview: மும்பை இந்தியன்ஸ்-லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸுக்கு இந்த சீசனில் கடைசி மேட்ச் இன்று

Manigandan K T HT Tamil
May 17, 2024 07:00 AM IST

MI vs LSG Preview: மும்பை வான்கடே மைதானத்தில் மே 17 அன்று லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டியின் முடிவு இந்த அணிகளின் பிளே ஆஃப் வாய்ப்புகளை பாதிக்க வாய்ப்பில்லை. இது ஒரு சம்பிரதாய ஆட்டம் தான். இது 67வது லீக் மேட்ச் ஆகும்.

MI vs LSG Preview: மும்பை இந்தியன்ஸ்-லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸுக்கு இந்த சீசனில் கடைசி மேட்ச் இன்று
MI vs LSG Preview: மும்பை இந்தியன்ஸ்-லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸுக்கு இந்த சீசனில் கடைசி மேட்ச் இன்று

ட்ரெண்டிங் செய்திகள்

13 போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இரு அணிகளுக்குமே இந்த மேட்ச் சம்பிரதாய மேட்ச் ஆகும்.

எல்எஸ்ஜி அணி விளையாடிய 13 போட்டிகளில் 6-ல் வெற்றி பெற்றுள்ளது. கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ ஏற்கனவே வெளியேற்றப்பட்டுள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் கூட அவர்களின் மோசமான நிகர ரன் விகிதம் காரணமாக அவர்களின் தலைவிதி மாறாது.

மும்பை மற்றும் லக்னோ

அணிகள் இதுவரை 4 ஐபிஎல் போட்டிகளில் மோதியுள்ளன. மும்பை இந்தியன்ஸ் அணி ஒன்றில் வெற்றியையும், எல்எஸ்ஜி அணி 3 போட்டிகளில் வெற்றி பெற்றன. லக்னோவுக்கு எதிராக இதுவரை மும்பையின் அதிகபட்ச ஸ்கோர் 182 ஆகும். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான எல்எஸ்ஜியின் அதிகபட்ச ஸ்கோர் 199 ஆகும்.

இந்த அணிகள் கடைசியாக இந்த ஆண்டு ஏப்ரல் 30 அன்று மோதின. எல்.எஸ்.ஜி அணியின் மார்கஸ் ஸ்டோய்னிஸ் 45 பந்துகளில் 62 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருது பெற்றார். இதில் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

MI vs LSG பிட்ச் ரிப்பாேர்ட்

மும்பையில் உள்ள வான்கடே ஸ்டேடியம் பொதுவாக பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான ஆடுகளத்தை வழங்குகிறது. ஆடுகளம் பொதுவாக நல்ல பவுன்ஸ் மற்றும் கேரியுடன் ஒரு தட்டையான தன்மையை வெளிப்படுத்துகிறது, இது பேட்ஸ்மேன்களை ஆக்ரோஷமாக விளையாட அனுமதிக்கிறது. மைதானத்தின் எல்லைகள் ஒப்பீட்டளவில் குறுகியவை. இருப்பினும், ஆடுகளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் உதவும், குறிப்பாக ஒரு போட்டியின் ஆரம்ப கட்டங்களில் உதவும்.

இந்த மைதானத்தில் கடைசியாக நடந்த போட்டி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்ஆர்எச்) மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே நடைபெற்றது. ஹைதராபாத் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 173 ரன்கள் எடுத்தது. மும்பை அணி 17.2 ஓவர்களில் இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 51 பந்துகளில் 102 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்த சூர்யகுமார் யாதவ் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

MI vs LSG வானிலை

மும்பையில் வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். உண்மையான உணர்வு 38 C ஆக இருக்கும். ஈரப்பதம் சுமார் 68% இருக்கும். AccuWeather படி, மழை பெய்ய 15% வாய்ப்பு உள்ளது.

MI vs LSG கணிப்பு

கூகுளின் வெற்றி வாய்ப்பின்படி, மும்பை தனது கடைசி லீக் ஆட்டத்தில் லக்னோவை வீழ்த்த 56% வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூகுள் வெற்றி நிகழ்த்தகவு
கூகுள் வெற்றி நிகழ்த்தகவு (Google)

ஐபிஎல் 2024

இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 17வது சீசன் ஏறக்குறைய முடிவுக்கு வந்துவிட்டது. 2008ல் தொடங்கிய இந்த மெகா லீக், ஏற்கனவே 16 சீசன்களை நிறைவு செய்துள்ளது. 8 அணிகளுடன் தொடங்கிய இந்த லீக்கில் தற்போது பத்து அணிகள் பங்கேற்றுள்ளன. குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ அணிகள் 2022ல் பங்கேற்றன. கடந்த இரண்டு சீசன்களில் 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஐபிஎல் உலகின் பணக்கார கிரிக்கெட் லீக் என்று அறியப்படுகிறது. இந்த மெகா லீக் மூலம் ஒவ்வொரு ஆண்டும் பல ஆயிரம் கோடிகள் இந்தியப் பொருளாதாரத்திற்கு வந்து கொண்டிருக்கிறது.

டி20 உலகக் கோப்பை 2024