IPL Sixer Record: ஒவ்வொரு போட்டியிலும் 17.7 சிக்ஸர்கள், பவர்ப்ளேயில் அதிக சிக்ஸர்கள் - இந்த சீசனில் அடடே சாதனைகள்
IPL 2024: இதுவரை இல்லாத அளவில் பேட்ஸ்மேன்களுக்கு கொண்டாட்டமான சீசனாக இந்த ஐபிஎல் 2024 தொடர் அமைந்துள்ளது. ஒவ்வொரு போட்டியிலும் 17.7 சிக்ஸர்கள், பவர்ப்ளேயில் அதிக சிக்ஸர்கள் என பேட்ஸ்மேன்கள் சிக்ஸர் மழை பொழிந்துள்ளனர்.

பவர்ப்ளேயில் அதிக சிக்ஸர்கள், இந்த சீசனில் அடடே சாதனைகள் (AFP)
ஐபிஎல் 2024 தொடர் இறுதி கட்டத்தை நோக்கி வந்துள்ளது. லீக் போட்டிகள் வரும் ஞாயிற்றுகிழமையுடன் நிறைவு பெறுகின்றன. அனைத்து அணிகளுக்கும் தலா ஒரு போட்டி மட்டுமே மீதம் உள்ளது.
கடந்த இரு நாள்களுக்கு முன்னரே டெல்லி கேபிடல்ஸ் அணி 14 போட்டிகளை விளையாடி முடித்து, 14 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது.
பேட்ஸ்மேன்கள் ரன் மழை
முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பவுலர்களுக்கு எதிராக பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்திய சீசனாக இது அமைந்துள்ளது. ரன் ரேட் அதிகரிப்பு, பல்வேறு சாதனை , 500 க்கும் மேற்பட்ட மொத்த ரன்கள், பவர்பிளேயில் 100+ ரன்கள் என முந்தைய சீசன்களில் இல்லாத அளவு ரன்வேட்டை நிகழ்த்தப்பட்டது.