SRH vs GT Result: ஒரு பந்து கூட வீசாமல் ரத்து! ஆடாமல் சன் ரைசர்ஸ் ப்ளேஆஃப் தகுதி - சிஎஸ்கே, ஆர்சிபி யாருக்கு வாய்ப்பு?
சன் ரைசர்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் போட்டி ஒரு பந்து கூட வீசாமல் ரத்து செய்யப்பட்டது. இந்த சீசனில் இரண்டாவது போட்டியாக மழையால் ரத்தாகியுள்ளது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டன. இந்த போட்டியில் ஆடாமல் சன் ரைசர்ஸ் ப்ளேஆஃப் தகுதியை பெற்றது.

ஒரு பந்து கூட வீசாமல் சன்ரைசர்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் போட்டி ரத்து
ஐபிஎல் 2024 தொடரின் 66வது போட்டி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே ஹைதராபாத்தில் நடைபெற இருந்தது. ஆனால் அங்கு பெய்த தொடர் மழை காரணமாக ஒரு பந்து கூட வீசாமல் போட்டி ரத்து செய்யப்பட்டது. இந்த சீசனில் மழையால் பாதிக்கப்பட்ட முதல் போட்டியாக இது அமைந்துள்ளது.
ப்ளே ஆஃப்பில் நுழைந்த சன் ரைசர்ஸ்
சன் ரைசர்ஸ் அணி ப்ளேஆஃப் வாய்ப்பை பெறுவதற்கான முக்கியமான போட்டியாக இது அமைந்திருந்தது. இதையடுத்து இந்த போட்டி மழையால் ரத்தானதால் சன் ரைசர்ஸ் ஹைதராபாத், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் அளிக்கப்பட்டன.
இந்த போட்டியில் ஆடாமல் சன் ரைசர்ஸ் ப்ளேஆஃப் வாய்ப்பை பெற்றது. தற்போது புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது.