Driver Sharmila: ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு கமல் ஹாசன் கொடுத்த காரில் இவ்வுளவு வசதிகளா?
சென்னையில் இந்த காரின் ஆன் ரோடு விலை 17.17 லட்சமாக உள்ளது.

கோவை ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு கார் வழங்கிய மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்
கோவையில் தனியார் பேருந்தை இயக்கி வந்த அம்மாவட்டத்தில் முதல் பெண் ஓட்டுநர் ஷர்மிளா. இவர் இயக்கிய பேருந்தில் திமுக எம்.பி கனிமொழி சென்ற போது அந்த பேருந்தில் நடத்துநராக இருந்த பெண் அவரிடம் டிக்கெட் கேட்டதால் ஓட்டுநர் ஷர்மிளாவுக்கும் பெண் நடத்துனருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்த பிரச்னையை பேருந்து உரிமையாளரிடம் ஷர்மிளா முறையிட்ட போது ஷர்மிளாவின் தந்தைக்கும் பேருந்து உரிமையாளருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் ஓட்டுநர் வேலையை ஷர்மிளா ராஜினாமா செய்தார்.
இந்த நிலையில் ஓட்டுநர் ஷர்மிளாவை நேரில் சந்தித்து பேசிய மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவருக்கு கார் ஒன்றை வழங்குவதாக அறிவித்து இருந்தார்.