தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  பேரவையில் Display! ஓபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏ கேள்விக்கு முதல்வர் பதில்

பேரவையில் Display! ஓபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏ கேள்விக்கு முதல்வர் பதில்

Kathiravan V HT Tamil
Apr 12, 2023 12:22 PM IST

சட்டப்பேரவையில் பேசும் உறுப்பினர் பெயர், பேசும் பொருள் ஆகியவற்றை முழு திரையில் தெரியும் வண்ணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சட்டப்பேரவையில் வைக்கப்பட்டுள்ள திரை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சட்டப்பேரவையில் வைக்கப்பட்டுள்ள திரை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ட்ரெண்டிங் செய்திகள்

பாராளுமன்ற அமைச்சகம் மற்றும் செயலக அலுவலகம் மூலம் மின் புத்தக செயலி குறித்த செயல்விளக்கம் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு அளிக்கப்பட்டது.

நேவா திட்டத்தின் கீழ் சட்டப்பேரவை நிகழ்வுகளை அறிய சட்டப்பேரவையில் பேசும் உறுப்பினர் பெயர், பேசும் பொருள் ஆகியவற்றை முழு திரையில் தெரியும் வண்ணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் சட்டமன்ற கேள்வி நேரத்தின் நேரடி ஒளிபரப்பை நேவா போர்ட்டலிலும் காணலாம் என்று சபாநாயகர் தெரிவித்தார்.

இத்திட்டத்தின் தொடக்க நிகழ்வாக சட்டப்பேரவை கேள்வி நேரத்தின் போது அதிமுக எம்.எல்.ஏவும், ஓபிஎஸ் ஆதரவாளருமான மனோஜ் பாண்டியன் எழுப்பிய முதல் கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்தார்.

சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் முன் வைக்கப்பட்ட துறைசார் கேள்விகள், கேள்வி எழுப்பிய உறுப்பினர் குறித்த விவரங்கள் திரையில் காட்டப்படுகிறது
சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் முன் வைக்கப்பட்ட துறைசார் கேள்விகள், கேள்வி எழுப்பிய உறுப்பினர் குறித்த விவரங்கள் திரையில் காட்டப்படுகிறது

முதலமைச்சர் பேசுகையில், தென்காசி வட்டம் ஆலங்குளம் தொகுதி, ஆலங்குளம் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையத்திற்கு நிரந்தர கட்டடம் கட்ட கூத்தப்பஞ்சான் கிராமத்தில் 25 செண்ட் அரசு நிலம் தெரிவுசெய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் திருநெல்வேலி ஆட்சியர் செயல்முறை ஆணையின் படி தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் கட்டடம் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கேள்வி நேரத்தில் தீயணைப்பு துறை குறித்த கேள்விகளை எழுப்பி பேசும் பால் மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ
கேள்வி நேரத்தில் தீயணைப்பு துறை குறித்த கேள்விகளை எழுப்பி பேசும் பால் மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ

பால் மனோஜ் பாண்டியன், எம்.எல்.ஏ: ஆலங்குளத்தில் தீயணைப்பு மற்றும் மீட்புபணிகள் கட்டடம் கட்டித்தரப்படும் என்கின்ற முதலமைச்சரின் அறிவிப்புக்கு முதல்வர் பதிலுக்கு நன்றி, அருகில் உள்ள கீழப்பாவூர் ஆண்டிப்பட்டி கிராமத்தில் பிரதான ஆண்டிப்பட்டி-தென்காசி சாலையில் கூட இடம்தேர்வு செய்யப்பட்டு அது இன்னும் சிறப்பான இடமாக அமைந்தால் முதலமைச்சர் அவர்கள் ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்கு 10 கோடி கடந்த ஆண்டு ஒதுக்கி தந்தது போல இந்த ஆண்டு தீயணைப்பு நிலையத்திற்கும் நிறைவேற்றி தருவார்களா? என கேள்வி எழுப்பினார்.

பால் மனோஜ் பாண்டியன் சட்டப்பேரவையில் எழுப்பிய கேள்விகள் குறித்த விவரங்களை திரையில் காட்டப்படுகிறது
பால் மனோஜ் பாண்டியன் சட்டப்பேரவையில் எழுப்பிய கேள்விகள் குறித்த விவரங்களை திரையில் காட்டப்படுகிறது

இதற்கு பதிகளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆலங்குளம் தீயணைப்பு மீட்பு பணிகள் நிலையத்திற்கு சொந்த கட்டுவதற்கான இடங்களை குறிப்பிட்டு கட்டடம் கட்டப்படுமா என்ற வினாவை எழுப்பி உள்ளார். ஏற்கெனவே ஆலங்குலம் வட்டம் குத்தப்பஞ்சான் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான நிலம் தெரிவு செய்யப்பட்டு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறைக்கு பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகத்திடம் இருந்து 3 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அங்கு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ: ஆலங்குளம் தொகுதி கடையம் ஒன்றியத்தில் 2011 மக்கள் தொகைப்படி சுமார் ஒரு லட்சத்து 324 மக்கள் வசிக்கிறார்கள். அருகில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் காட்டுத்தீ மற்றும் வன விலங்குகளால் ஆபத்து ஏற்பட்டாலோ தீயணைப்பு வாகனங்கள் தென்காசி, ஆலங்குளத்தில் இருந்ததான் வரவேண்டிய சூழலில் நீண்டநாள் கோரிக்கையாக கடையத்தில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் கட்டடம் கட்ட பரிசீலிப்பார்களா?

முதல்வர்: தீவிபத்து ஏற்படும் இடங்களுக்கு தீயணைப்பு மற்றும் மீட்பு பணியினர் குறைவான நேரத்தில் விரைவாக வந்து மீட்புபணிகளை மேற்கொள்வதற்கான அவசியத்தை

உணர்ந்துள்ள நம்முடைய அரசு, அறிவியல் பூர்வமாக ஜிபிஎஸ் வரைப்படங்கள் உதவியுடன் தீயணைப்பு மீட்பு பணிகள் நிலையங்கள் அமைவிடங்களை தெரிவு செய்வதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.

ஒரு இடத்தில் இருந்து புதிய தீயணைப்பு நிலையம் தொடங்க சில வரையறைகள் உள்ளது. அதில் 25 கி.மீ சுற்றளவுக்குள் வேறு தீயணைப்பு நிலையம் இருந்தால் அது தவிர்க்கப்பட்ட வேண்டும் என்ற அளவுகோள் உள்ளது. உறுப்பினர் குறிப்பிடக்கூடிய இடத்தில் 18 கி.மீ தொலைவில் அம்பாசமுத்திரம், 20 கி.மீ தொலைவில் தென்காசியிலும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையங்கள் செயல்பட்டு வருகிறது.

கடையத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 59 சிறிய அளவிலான தீவிபத்துகள்தான் நடந்துள்ளது. எனவே கடையம் பகுதியில் தீவிபத்து நடந்தால் அம்பாசமுத்திரம், தென்காசி பகுதியில் இயங்கி வரும் தீயணைப்பு நிலைய பணியாளர்கள் மூலம் மீட்புபணிகளை மேற்கொள்ள இயலும் .

IPL_Entry_Point