தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Actress Roja Speech: ‘என் வாழ்க்கை திறந்த புத்தகம்.. அவர செருப்பால அடிப்பாங்க’- கோயிலில் ரோஜா ஆதங்கம்!

Actress Roja Speech: ‘என் வாழ்க்கை திறந்த புத்தகம்.. அவர செருப்பால அடிப்பாங்க’- கோயிலில் ரோஜா ஆதங்கம்!

Kalyani Pandiyan S HT Tamil
Nov 13, 2023 06:11 PM IST

நடிகை ரோஜா திருச்செந்தூர் சுப்ரமணி சுவாமி கோயிலில் கணவருடன் சாமி தரிசனம் செய்தார்.

ரோஜா ஆதங்கம்!
ரோஜா ஆதங்கம்!

ட்ரெண்டிங் செய்திகள்

அங்கு செய்தியாளர்களை சந்தித்த ரோஜா, “ நாளையில் இருந்து கந்த சஷ்டி திருவிழா தொடங்குகிறது. சனிக்கிழமை சூரசம்ஹாரம் நடக்கிறது. 2024ம் ஆண்டு கர்நாடகாவில் மீண்டும் ஜெகன் மோகன் ரெட்டி முதல்வர் ஆவதற்கு முருகனுக்கு வேல் கொடுத்து இருக்கிறோம். 

மத்திய அரசுடன் கூட்டணி வைத்து நாங்கள் எப்போதுமே தேர்தலை சந்தித்தது இல்லை. நாங்கள் தனித்துதான் போட்டியிடுகிறோம். எங்கள் மாநிலத்திற்கு யார் வந்தாலும் அவர் மாநிலத்திற்கு உறுதுணையாக இருக்கும் பட்சத்தில் மட்டும்தான், நாங்கள் அவர்களுக்கு ஆதரவு கொடுப்போம்.

கண்ணுக்கு கண்டிப்பாக ஆபரேஷன் செய்ய வேண்டும் கூறி, மருத்துவ சிகிச்சை காரணங்களுக்காகத்தான் அவர் பெயிலில் வந்திருக்கிறார். இந்த மாதம் 24ம் தேதிக்குள் மீண்டும் சிறைக்குள் சென்று விடுவார். அவர் தவறு செய்திருக்கிறார். சாட்சியோடு மாட்டி இருக்கிறார். தவறு செய்த அவருக்கு கடவுள் தண்டனை கொடுக்க வேண்டிய காலம் வந்து விட்டது.

மக்கள் நேசிக்கிற தலைவரை பார்த்தால், தவறு செய்பவர்களுக்கு கஷ்டமாகத்தான் இருக்கும். அதனால் அவர்களை எதுவும் செய்ய முடியாமல், அவர்களை திட்டுவது, பொய் பொய்யாக சொல்வது, ஒரு பெண் என்று கூட பார்க்காமல் கேரக்டரை தவறாக சித்தரிப்பது போன்றவற்றில் ஈடுபடுகிறார்கள். 

நான் சினிமா மற்றும் அரசியல் ஆகிய இரண்டிலும் பயணம் செய்கிறேன். என்னுடைய வாழ்கை ஒரு திறந்த புத்தகம். நான் மக்களுக்கு நல்லது செய்வதற்காகவே கஷ்டப்பட்டு முன்னேறி வந்தேன். இப்படி இருக்கையில் என்னுடைய கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல், ஒரு முன்னாள் அமைச்சர் அப்படி பேசி இருக்கிறார். அதை எந்த பெண்ணும் ஒத்துக்கொள்ள மாட்டார். செருப்பால் அடிப்பார். அந்தளவு அவர் விரக்தியில் இருக்கிறார்.” என்று பேசினார். 

 

 

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்