தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Mint Water Benefits : தினமும் காலையில் வெறும் வயிற்றில் இந்த தண்ணீரை பருகுங்கள்! கோடையும் குளுமையாகும்!

Mint Water Benefits : தினமும் காலையில் வெறும் வயிற்றில் இந்த தண்ணீரை பருகுங்கள்! கோடையும் குளுமையாகும்!

Priyadarshini R HT Tamil
May 07, 2024 03:06 PM IST

Mint Water Benefits : கோடையில் தினமும் புதினா தண்ணீரை பருகுவதால் ஏற்படும் நன்மைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

Mint Water Benefits : தினமும் காலையில் வெறும் வயிற்றில் இந்த தண்ணீரை பருகுங்கள்! கோடையும் குளுமையாகும்!
Mint Water Benefits : தினமும் காலையில் வெறும் வயிற்றில் இந்த தண்ணீரை பருகுங்கள்! கோடையும் குளுமையாகும்!

ட்ரெண்டிங் செய்திகள்

இது கலோரிகள் குறைவான தண்ணீர். இதில் ஓரளவுக்கு சர்க்கரை உள்ளது. உங்கள் நாளை ஆரோக்கியமாக துவங்க இந்த தண்ணீர் உதவும். உங்களை நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் வைக்கிறது. புதினா தண்ணீரை உங்கள் உணவின் ஒரு அங்கமாக வைப்பது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

புதினா தண்ணீர் என்றால் என்ன?

புதினாவை தண்ணீரில் ஊறவைத்து தயாரிப்பது புதினா தண்ணீர். மெந்தா குடும்ப தாவரங்களைச் சேர்ந்தது புதினா. இது ஆயுர்வேத மருந்துகளில் பல ஆயிரம் ஆண்டுகளாக பயன்படுத்தப்படுகிறது.

புதினாவை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறுவைத்து காலை எழுந்தவுடந் வடிகட்டி வெறும் வயிற்றில் பருகுவதால் உடலுக்கு பல்வேறு நன்மைகளைக் கொடுக்கிறது.

செரிமானத்துக்கு உதவுகிறது

உங்களுக்கு செரிமானத்தில் பிரச்னைகள் இருந்தால், நீங்கள் உங்கள் உணவில் புதினா நீரை பருகவேண்டும். புதினா இலைகளை தண்ணீரில் ஊறவைத்து பருகுவது, செரிமானத்துக்கு உதவுகிறது. 

வாயு, வயிறு உப்புசம் ஆகியவற்றை போக்குகிறது. செரிமான தசைகளை ரிலாக்ஸ் ஆக்கி, குடலுக்கு ஆரோக்கியத்தை வழங்குகிறது.

உடலில் ஹார்மோன்களை சமப்படுத்துகிறது

உடலில் டெஸ்டோஸ்ரோன் அளவை குறைத்து, ஹார்மோன் சமநிலையைப் பேண புதினா தண்ணீரை பருகவேண்டும். இது உங்கள் ஹார்மோன் அளவை பராமரிக்க உதவுகிறது. பிசிஓஎஸ்க்கு சிகிச்சையளிக்க உதவுகிறது.

இதனால் உங்கள் உடலில் ஹார்மோன் சமநிலை பேணப்படுகிறது. உடலில் ஹார்மோன்கள் சமமின்மையால், இனப்பெருக்க உறுப்புகள் பாதிக்கப்படுவதுடன், கருமுட்டை உருவாவதில் சிக்கலை ஏற்படுத்துகிறது.

உங்கள் உடலை நீர்ச்சத்துடன் வைத்துக்கொள்ள உதவுகிறது

உங்கள் உடல் நல்ல முறையில் இயங்குவதற்கு உங்களை நீர்ச்சத்துடன் வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். அதற்கு இந்த புதினா தண்ணீர் உதவுகிறது. 

உங்கள் உடலுக்கு தேவையான நீர்ச்சத்தை வழங்குகிறது. உடல் இயங்குவதற்கும், ஒட்டுமொத்த உடல் இயக்கத்துக்கும் புதினா தண்ணீர் உதவுகிறது. அதுமட்டுமின்றி உங்கள் சரிவிகித உணவுக்கு தனிச்சுவையையும் கொடுக்கிறது.

மனஅழுத்தை குறைக்க உதவுகிறது

மனஅழுத்ததை குறைக்க புதினா தண்ணீர் உதவுகிறது. புதினா, ஆயுர்வேத மருந்துகளில் மனஅழுத்தத்தை குறைத்து உங்களை மனஅமைதியுடன் வைத்துக்கொள்வதற்கு உதவும் ஒரு மருந்தாகும். இது உடலை குளிர்வித்து, உங்கள் மனதை அமைதியாக்கும் ஒன்றாகும். உங்கள் மனஅழுத்தத்தை குறைக்கிறது.

உடல் எடையை குறைக்க உதவுகிறது

உடல் எடையை குறைக்க நீங்கள் விரும்பினால், உங்கள் உணவில் நீங்கள் புதினா தண்ணீரை சேர்த்துக்கொள்ளலாம். இதில் கலோரிகள் குறைவு, உங்களுக்கு புத்துணர்ச்சி தரும் இனிப்பு பானம்.

இதை பருகும்போது உங்களுக்கு வயிறு நிறைந்த உணர்வைக் கொடுக்கும். அதிகம் சாப்பிடும் வாய்ப்பை குறைக்கும். இதனால் உங்கள் உடல் எடை குறையும் வாய்ப்பு ஏற்படுகிறது.

நோய் எதிர்ப்பை அதிகரிக்கிறது

புதினாவில், வைட்டமின்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்களும் அதிகம் உள்ளது. இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உங்கள் உடலில் நோய் எதிர்ப்பை அதிகரிக்க உதவுகிறது.

இதில் தாவர அடிப்படையிலான வைட்டமின்கள், செல்கள் சேதமடைவதை தடுக்கிறது. உங்கள் செல்களை பாதுகாக்கிறது. உங்கள் உடலில் வெளியில் இருந்து எந்த நோய்கிருமிகளும் உள்ளே நுழையாமல் காக்கிறது.

சரும ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது

புதினாவில் வைட்டமின் ஏ மற்றும் சாலிசிலிக் அமிலம் நிறைய உள்ளது. இது உங்கள் சருமத்தை காக்க உதவுகிறது. புதினா தண்ணீரில், பூஞ்ஜைக்கு எதிரான குணங்கள் மற்றும் பாக்டீரியாவுக்கு எதிரான குணங்கள் வீக்கம் மற்றும் முகப்பருக்களை குறைக்க உதவுகிறது.

புதினா தண்ணீரை பருகும்போது, உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்றுகிறது. இது சரும ஆரோக்கியம் மற்றும் பளபளப்பாக சருமத்தை பராமரிக்க உதவுகிறது.

புதினா, வெள்ளரி, எலுமிச்சை பழத்தின் துண்டு என அனைத்தையும், ஓரிரவு ஃபிரிட்ஜில் வைத்து ஊறவைத்து அடுத்த நாள் காலையில் ஆறவைத்து வடிகட்டி பருக உங்கள் உடலுக்கு மேற்கண்ட நன்மைகள் கிடைக்கும்.

WhatsApp channel