தமிழ் செய்திகள்  /  மட்டைப்பந்து  /  Srh Vs Pbks Result: அபிஷேக் ஷர்மாவின் அதிரடி ஆட்டம்! புள்ளிப்பட்டியலில் நடந்த அதிரடி மாற்றம்

SRH vs PBKS Result: அபிஷேக் ஷர்மாவின் அதிரடி ஆட்டம்! புள்ளிப்பட்டியலில் நடந்த அதிரடி மாற்றம்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
May 19, 2024 08:51 PM IST

SRH vs PBKS Result:அபிஷேக் ஷர்மாவின் அதிரடி ஆட்டம், சன் ரைசர்ஸ் அணிக்கு வெற்றியை தேடி தர முக்கிய காரணமாக அமைந்துள்ளது. அத்துடன் புள்ளிப்பட்டியலிலும் அதிரடி மாற்றம் நடந்துள்ளது. பஞ்சாப் கிங்ஸ் தோல்வியுடன் இந்த சீசனை முடித்துள்ளது.

அபிஷேக் ஷர்மாவின் அதிரடி ஆட்டத்தால் புள்ளிப்பட்டியலில் நடந்த அதிரடி மாற்றம்
அபிஷேக் ஷர்மாவின் அதிரடி ஆட்டத்தால் புள்ளிப்பட்டியலில் நடந்த அதிரடி மாற்றம் (PTI)

ட்ரெண்டிங் செய்திகள்

சன் ரைசர்ஸ் அணி 13 போட்டிகளில் 7 வெற்றியுடன் 15 புள்ளிகளை பெற்று ப்ளேஆஃப்புக்கு தகுதி பெற்றுள்ளது. பஞ்சாப் கிங்ஸ் 13 போட்டிகளில் 5 வெற்றியுடன், 10 புள்ளிகளை பெற்று 9வது இடத்தில் இருந்தது.

இந்த இரு அணிகளுக்கு இடையிலான முதல் மோதலில் சன் ரைசர்ஸ் 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

இதையடுத்து இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் அதர்வா தைடே, ரிஷி தவான், ஷிவம் சிங் ஆகியோர் விளையாடும் வாய்ப்பை பெற்றனர். சன் ரைசர்ஸ் அணியில் ராகுல் திரிபாதி சேர்க்கப்பட்டார்.

பஞ்சாப் கிங்ஸ் பேட்டிங்

இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஜித்தேஷ் ஷர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன் பின்னர் முதலில் பேட் செய்த பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 214 ரன்கள் குவித்தது.

அதிகபட்சமாக பிரப்சிம்ரன் சிங் 71, ரிலி ரோசவ் 49, அதர்வா தைடே 46, ஜித்தேஷ் ஷர்மா 32 ரன்கள் அடித்தனர். சன் ரைசர்ஸ் பவுலர்களில் நடராஜன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பேட் கம்மின்ஸ், விஜயகாந்த் வியாஸ்காந்த் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.

சன் ரைசர்ஸ் சேஸிங்

215 ரன்கள் என்ற மிக பெரிய இலக்கை விரட்டிய சன்ரைசர்ஸ் 19.1 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் சன் ரைசர்ஸ் 17 புள்ளிகளை பெற்ற இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

சன் ரைசர்ஸ் அணியில் அதிகபட்சமாக அபிஷேக் ஷர்மா 66, ஹென்ரிச் கிளாசன் 42, நிதிஷ் குமார் ரெட்டி 37, ராகுல் திரிபாதி 33 ரன்கள் அடித்தனர்.

அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் படேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழத்தினர். ஹர்ப்ரீத் ப்ரார், சஷாங் சிங் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.

பஞ்சாப் கிங்ஸ் தோல்வியுடன் இந்த சீசனை முடித்துள்ளது.

அபிஷேக் ஷர்மா அதிரடி

இம்பேக்ட் வீரராக ஓபனங்கில் களமிறங்கிய ட்ராவிஸ் ஹெட், அர்ஷ்தீப் வீசிய ஆட்டத்தின் முதல் பந்தில் க்ளீன் போல்டாகி வெளியேறினார்.

மற்றொரு ஓபனர் அபிஷேக் ஷர்மா, மூன்றாவது பேட்ஸ்மேன் ராகுல் திரிபாதி இணைந்து பார்டனர்ஷிப் அமைத்து ரன்குவித்தனர்.

அபிஷேக் ஷர்மா தனது வழக்கமான பாணியில் அதிரடியில் மிரட்டினார். பஞ்சாப் பவுலர்களின் பந்து வீச்சை பவுண்டரி, சிக்ஸர்கள் என அடித்து துவைத்த அபிஷேக் ஷர்மா 21 பந்துகளில் அரைசதத்தை பூர்த்தி செய்தார்.

28 பந்துகளில் 66 ரன்கள் எடுத்த அபிஷேக் ஷர்மா, சஷாங்க் சிங் பந்தில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அவர் தனது இன்னிங்ஸில் 5 பவுண்டரி, 6 சிக்ஸர்களை அடித்தார்.

இவருடன் இணைந்து ராகுல் திரிபாதியும் தன் பங்குக்கு அதிரடியில் மிரட்டினார். 18 பந்தில் 33 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

கிளாசன் கிளாஸ் ஆட்டம்

நான்காவது பேட்ஸ்மேனாக களமிறங்கிய நிதிஷ் குமார் ரெட்டி, அவருடன் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்த ஹென்ரிச் கிளாசன் தேவைப்படும் ரன்ரேட்டுக்கு ஏற்ப நிதானமும், அதிரடியும் கலந்து விளையாடினர்.

நிதிஷ் குமார் ரெட்டி 37, கிளாசன் 42 ரன்கள் அடித்துவிட்டு அவுட்டானார்கள். ப்ளேஆஃப்பில் இரண்டாவது இடத்தை பிடிப்பதற்கான வாய்ப்பாக அமைந்த போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.

இருப்பினும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி பெற்றால் மீண்டும் மூன்றாவது இடத்துக்கு செல்லும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டி20 உலகக் கோப்பை 2024