Manathakali thani saru : புதுசா இருக்கு இல்ல.. அரிசி தண்ணீரில் செய்யும் மணத்தக்காளி தண்ணீர் சாறு.. ரொம்ப ஈஸி தான்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Manathakali Thani Saru : புதுசா இருக்கு இல்ல.. அரிசி தண்ணீரில் செய்யும் மணத்தக்காளி தண்ணீர் சாறு.. ரொம்ப ஈஸி தான்!

Manathakali thani saru : புதுசா இருக்கு இல்ல.. அரிசி தண்ணீரில் செய்யும் மணத்தக்காளி தண்ணீர் சாறு.. ரொம்ப ஈஸி தான்!

Divya Sekar HT Tamil
Mar 28, 2024 12:40 PM IST

குழந்தைகளுக்கு மணத்தக்காளி கீரையில் ரசம் வைத்து கொடுத்து வந்தால் நல்ல ஊட்டச்சத்துடன் வளருவார்கள். இந்த மணத்தக்காளி கீரையில் எப்படி மணத்தக்காளி தண்ணீர் சாறு செய்வது என்பது குறித்து பார்க்கலாம்.

மணத்தக்காளி தண்ணீர் சாறு
மணத்தக்காளி தண்ணீர் சாறு

தேவையான பொருட்கள்

மணத்தக்காளி கீரை

ஒரு டீஸ்பூன் எண்ணெய்

கால் டீஸ்பூன் வெந்தயம்

பத்து சின்ன வெங்காயம்

நான்கு வரமிளகாய்

நான்கு பூண்டு

ஒரு தக்காளி

அரிசி தண்ணீர்

மஞ்சள்தூள்

மிளகு

உப்பு

செய்முறை

குழந்தைகளுக்கு மணத்தக்காளி கீரையில் ரசம் வைத்து கொடுத்து வந்தால் நல்ல ஊட்டச்சத்துடன் வளருவார்கள். இந்த மணத்தக்காளி கீரையில் எப்படி மணத்தக்காளி தண்ணீர் சாறு செய்வது என்பது குறித்து பார்க்கலாம்.

முதலில் ஒரு கடாய் எடுத்துக் கொள்ளுங்கள் அதில் ஒரு டீஸ்பூன் எண்ணெய், கால் டீஸ்பூன் வெந்தயம், பத்து சின்ன வெங்காயம், நான்கு வரமிளகாய், நாலு தட்டி வைத்த பூண்டு, ஒரு தக்காளி பழத்தை சிறிதாக அறிந்து சேர்த்துக் கொள்ளுங்கள். இதை அனைத்தும் நன்கு கிண்டி விடவும்.

பின்னர் நாம் வைத்திருக்கும் மணத்தக்காளியை எடுத்து சுத்தம் செய்து தண்ணீரில் நன்கு கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் இரண்டு கைப்பிடி அளவு மணத்தக்காளி கீரையை கடாயில் வெங்காயம் தக்காளியோடு இதனை சேர்த்து நன்கு கிளறி விடவும்.

கீரையை சேர்த்த உடனேயே கீரை நன்கு வேக ஆரம்பிக்கும் அந்த சமயத்தில் நீங்கள் அரிசி தண்ணீரை சேர்க்க வேண்டும். (குறிப்பு முதலில் அரிசியை நீங்கள் தண்ணீர் ஊற்றி கழுவிய பிறகு அதன் பிறகு அதில் மீண்டும் தண்ணீர் ஊற்றி ஒரு பத்து நிமிடம் கழித்து அந்த தண்ணீரை எடுத்து நாம் இந்த ரசம் வைக்க பயன்படுத்த வேண்டும்)

அரிசி தண்ணீரை சேர்த்தவுடன் அதில் உப்பு மிளகாய்த்தூள் மற்றும் மிளகு சேர்த்து ஐந்திலிருந்து பத்து நிமிடம் கீரை நன்கு வேகம் வரை கொதிக்க விடவும். கீரை நன்கு வெந்தவுடன் அரை மூடி தேங்காய் எடுத்து அதன் தேங்காய் பாலில் மட்டும் இதில் சேர்த்துக் கொள்ளவும்.

இந்த மணத்தக்காளி தன்னைச் சாறு குடிக்கவும் நன்றாக இருக்கும் சாதத்துடன் சேர்த்தும் சாப்பிடலாம் இது சூப் போல நமக்கு சுவை தரும் உடம்புக்கு மிகவும் நல்ல இந்த மணத்தக்காளி தண்ணி சாறை வீட்டில் ஒரு முறை செய்து சுவைத்து பாருங்கள்.

மணத்தக்காளி பழத்தின் நன்மைகள்

நீங்கள் உங்கள் வீட்டிலோ அல்லது எங்கோ வெளியிடங்களில் படர்ந்திருக்கும் மணத்தக்காளி கீரை செடியில் உள்ள கருப்பும், பிரவுனுமான மணத்தக்காளி பழங்களை பறித்திருக்கிறீர்களா? அதை சாப்பிட்டு இருக்கிறீர்களா? அவற்றை ஆங்கிலத்தில் பிளாக் நைட் ஷேட் என்று அழைக்கிறார்கள்.

இது ஆயுர்வேத மருத்துவத்தில் ஒரு முக்கிய மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. இதன் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளுக்காக இந்தப்பழம் கொண்டாடப்படுகிறது. இதன் அளவோ சிறியது, ஆனால் பலனோ பன்மடங்கு பெரியது. இந்த சிறிய பழத்தை ஆயுர்வேத மருத்துவம் ஏன் கொண்டாடுகிறது என்று தெரிந்துகொள்ளுங்கள்.

நோய் எதிர்ப்பை அதிகரிக்கிறது

மணத்தக்காளி பழம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. உடலின் எதிர்ப்பாற்றலை பன் மடங்கு பலப்படுத்துகிறது. தொற்று கிருமிகளுக்கு எதிராக போராடுகிறது. வாழ்க்கையை மாற்றும் தொற்றுக்களையும் பறந்தோடச் செய்கிறது.

அழற்சிக்கு எதிரான குணங்கள்

இதில் உள்ள அழற்சிக்கு எதிரான குணங்கள், அழற்சி மற்றும் வீக்கத்தை உடலில் இருந்து அகற்றுகிறது. இந்த பழத்தை சாப்பிடுவதால் ஆர்த்ரடிஸ், சிறுநீரக நோய்கள், குடல் வீக்கம் மற்றும் அழற்சி போன்ற பிரச்னைகள் தீர்கிறது.

கல்லீரல் ஆரோக்கியம்

மணத்தக்காளி பழம் கல்லீரல் பிரச்னைகள் கொண்டவர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் என்றே கூறலாம். இதில் உள்ள ஹெப்டோபுரொடக்டிவ் குணங்கள் உடல் கழிவுநீக்கம் செய்வதற்கு உதவுகிறது. கல்லீரல் ஆரோக்கியத்தை பராமரிக்கிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.