தமிழ் செய்திகள்  /  மட்டைப்பந்து  /  Srh Vs Pbks Innings Break: நல்ல தொடக்கம், அதிரடி பினிஷ்! சன் ரைசர்ஸ் பவுலர்களை வெளுத்து வாங்கிய பஞ்சாப் கிங்ஸ்

SRH vs PBKS Innings Break: நல்ல தொடக்கம், அதிரடி பினிஷ்! சன் ரைசர்ஸ் பவுலர்களை வெளுத்து வாங்கிய பஞ்சாப் கிங்ஸ்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
May 19, 2024 05:39 PM IST

SRH vs PBKS Innings Break: நல்ல தொடக்கம், அதிரடி பினிஷ் மூலம் பஞ்சாப் கிங்ஸ் 214 ரன்கள் குவித்துள்ளது. சன் ரைசர்ஸ் பவுலர்கள் அனைவரின் பந்துவீச்சிலும் பஞ்சாப் கிங்ஸ் பேட்ஸ்மேன் வெளுத்து வாங்கியுள்ளனர்.

சன் ரைசர்ஸ் பவுலர்களை வெளுத்து வாங்கிய பஞ்சாப் கிங்ஸ் பேட்ஸ்மேன்கள்
சன் ரைசர்ஸ் பவுலர்களை வெளுத்து வாங்கிய பஞ்சாப் கிங்ஸ் பேட்ஸ்மேன்கள் (AP)

ட்ரெண்டிங் செய்திகள்

சன் ரைசர்ஸ் அணி 13 போட்டிகளில் 7 வெற்றியுடன் 15 புள்ளிகளை பெற்று ப்ளேஆஃப்புக்கு தகுதி பெற்றுள்ளது. பஞ்சாப் கிங்ஸ் 13 போட்டிகளில் 5 வெற்றியுடன், 10 புள்ளிகளை பெற்று 9வது இடத்தில் இருக்கிறது.

இந்த இரு அணிகளுக்கு இடையிலான முதல் மோதலில் சன் ரைசர்ஸ் 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

இதையடுத்து இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் அதர்வா தைடே, ரிஷி தவான், ஷிவம் சிங் ஆகியோர் விளையாடும் வாய்ப்பை பெற்றனர். சன் ரைசர்ஸ் அணியில் ராகுல் திரிபாதி சேர்க்கப்பட்டார்

பஞ்சாப் கிங்ஸ் பேட்டிங்

இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஜித்தேஷ் ஷர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன் பின்னர் முதலில் பேட் செய்த பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 214 ரன்கள் குவித்துள்ளது.

அதிகபட்சமாக பிரப்சிம்ரன் சிங் 71, ரிலி ரோசவ் 49, அதர்வா தைடே 46, ஜித்தேஷ் ஷர்மா 32 ரன்கள் அடித்தனர். சன் ரைசர்ஸ் பவுலர்களில் நடராஜன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பேட் கம்மின்ஸ், விஜயகாந்த் வியாஸ்காந்த் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.

நல்ல தொடக்கம்

பஞ்சாப் அணியின் ஓபனர்களாக களமிறங்கிய அதர்வா தைடே - பிரப்சிம்ரன் சிங் ஆகியோர் அணிக்கு நல்ல தொடக்கத்தை அளித்தனர். 9.1 ஓவரில் இருவரும் இணைந்து 97 ரன்கள் சேர்த்தனர்.

தனக்கு கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்தி கொண்ட அதர்வா தைடே 27 பந்துகளில் 46 ரன்கள் அடித்துவிட்டு அவுட்டானார். மற்றொரு ஓபனராக பிரப்சிம்ரன் சிங் 34 பந்துகளுக்கு அரைசதமடித்தார். தொடர்ந்து அதிரடி காட்டிய அவர் 45 பந்துகளில் 71 ரன்கள் அடித்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

ரோசவ் அபாரம்

மூன்றாவது பேட்ஸ்மேனாக களமிறங்கிய ரோசவ் தொடக்கம் முதலே அதிரடியில் மிரட்டினார். பவுண்டரி, சிக்ஸர் என வேகமாக ரன்குவிப்பில் ஈடுபட்ட அவர் 24 பந்துகளில் 49 ரன்கள் அடித்தார்.

ஜித்தேஷ் பினிஷ்

கடைசி கட்டத்தில் கேமியோ ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜித்தேஷ் ஷர்மா 15 பந்துகளில் 32 ரன்கள் அடித்து நாட் அவுட் பேட்ஸ்மேனாக இருந்தார்.  இவர் தனது இன்னிங்ஸில் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் பறக்கவிட்டார்.

பஞ்சாப் இன்னிங்ஸில் 12 சிக்ஸர்கள், 17 பவுண்டரிகள் என அடித்து நொறுக்கப்பட்டன.

சன் ரைசர்ஸ் அணியில் பவுலிங் செய்த நிதிஷ் குமார் ரெட்டி 3 ஓவர்கள் வீசி 54 ரன்களை வாரி வழங்கியுள்ளார். 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டி20 உலகக் கோப்பை 2024