RR vs KKR Result: மழையால் அடித்தது லக்! குவாலிபையரில் சன் ரைசர்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸுக்கு வில்லனாக அமைந்த ரன்ரேட்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு இடையிலான போட்டி மழையால் ரத்தான நிலையில் சன் ரைசர்ஸ் அணிக்கு அடித்தது லக். ரன் ரேட் அடிப்படையில் குவாலிபயரில் நுழைந்தது. நான்கு தொடர் தோல்விகளால் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு வில்லனாக அமைந்தது ரன்ரேட்

ஐபிஎல் 2024 தொடரின் 70வது மற்றும் இந்த சீசனின் கடைசி போட்டி ராஜஸ்தான் ராயல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே கவுகாத்தியில் இன்று நடைபெற இருந்தது. ஆனால் அங்கு பெய்த தொடர் காரணமாக போட்டியானது ரத்தாகியுள்ளது. இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டுள்ளது.
இதில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் என இரு அணிகளும் 17 புள்ளிகள் பெற்றுள்ளது. இதில் ரன் ரேட் அடிப்படையில் சன் ரைசர்ஸ் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியதால், குவாலிபயர் விளையாடும் வாய்ப்பை பெற்றது.
டாஸ்க்கு பின் போட்டி ரத்து
போட்டி தொடங்குவதற்கு முன்னர் இருந்தே கவுகாத்தியில் தொடர் மழை விட்டு விட்டு பெய்து வந்தது. இதையடுத்து 10 மணிக்கு மேல் மழை நின்று விளையாடும் சூழல் உருவானது. அப்போது டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பவுலிங்கை தேர்வு செய்தார்.