தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Karthigai Deepam: மிஷினுக்குள் கையை விட்ட கார்த்திக்.. ஐஸ்வர்யாவின் சதியால் அதிர்ச்சியான அபிராமி..இன்றைய எபிசோட் அப்டேட்

Karthigai Deepam: மிஷினுக்குள் கையை விட்ட கார்த்திக்.. ஐஸ்வர்யாவின் சதியால் அதிர்ச்சியான அபிராமி..இன்றைய எபிசோட் அப்டேட்

Marimuthu M HT Tamil
May 01, 2024 04:58 PM IST

Karthigai Deepam: கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய எபிசோடில், மிஷினுக்குள் கையை விட்ட கார்த்திக் பற்றியும், ஐஸ்வர்யா செய்த திருகு வேலைகளையும் அபிராமி அறிந்துகொள்கிறார்.

Karthigai Deepam: மிஷினுக்குள் கையை விட்ட கார்த்திக்.. ஐஸ்வர்யாவின் சதியால் அதிர்ச்சியான அபிராமி
Karthigai Deepam: மிஷினுக்குள் கையை விட்ட கார்த்திக்.. ஐஸ்வர்யாவின் சதியால் அதிர்ச்சியான அபிராமி

ட்ரெண்டிங் செய்திகள்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினந்தோறும் இரவு 9:00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் ஐஸ்வர்யா ஐடியா கொடுக்க ஆனந்த் மேனேஜரிடம் சொல்லி சதி செய்து கார்த்திக்கை தரையை துடைக்க விட்ட நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாருங்கள்.

அதாவது, அபிராமி கம்பெனிக்கு வந்திருக்க கார்த்திக் வேலை செய்வதை பார்த்து கண்கலங்கி நிற்க, அந்த நேரம் பார்த்து கார்த்தி மெஷினுக்கும் கையை விட்டு காயம் ஏற்பட அபிராமி பதறி போய் ஓடி வந்து, துடிதுடிக்க கார்த்திக் ’நீங்க என்னங்க’ என்று கேட்க, ’நீ வேலை செய்வதைப் பார்க்க வந்தேன்’ என்று சொல்கிறார்.

’உனக்கு இதெல்லாம் தேவையா வேண்டாம் வந்துடு’ என்று சொல்லி கார்த்திக்கை கூப்பிட, கார்த்திக், ’’இந்த குடும்பம் பிரியக்கூடாதுன்னு சொல்லிட்டுதானே நான் இந்த வேலைக்கு வந்தேன். வேலை செஞ்சா அடிப்பட தான் செய்யும். அதை பத்தி எல்லாம் நீங்க கவலைப்படாதீங்க. வீட்டுக்கு போங்க’’ என்று சொல்லி அனுப்பி வைக்கிறான்.

வீட்டுக்கு வந்த அபிராமி அருணாச்சலத்துடன் நடந்த விஷயத்தை சொல்லி வருத்தப்பட அடுத்ததாக, தீபா கார்த்திக்கு சாப்பாடு எடுத்துக்கொண்டு கம்பெனிக்கு வருகிறாள். சாதாரண புடவை கட்டிக்கொண்டு சிம்பிளாக வர, செக்யூரிட்டி உள்ளே விட மறுப்பு தெரிவிக்கிறார்.

தீபா கார்த்தியோட மனைவி என்று சொல்ல, ’’கார்த்திக் சார் எங்களுடைய முதலாளி; அவருடைய மனைவினு யாரை ஏமாற்றப் பாக்கறீங்க? விட முடியாது’’ என்று சொல்ல இந்த நேரம் பார்த்து அங்கு வரும் அருண், தீபாவை பார்த்து செக்யூரிட்டியை திட்டிவிட்டு, உள்ளே வந்து அழைத்துச்செல்கிறான்.

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

நேற்று (ஏப்ரல் 30), மதுவை வீட்டிற்கு வரவைத்து ஆனந்திடம் அவளை பற்றிய எல்லா விஷயங்களையும் தெரியப்படுத்துகின்றனர். அதன் பிறகு தீபாவும் ஆமாம் ’மாமா அவர் சொல்றது எல்லாமே உண்மை தான்’ என்று சொல்ல ஆனந்தால் அதை முழுமையாக நம்பவும் முடியவில்லை, நம்பாமலும் இருக்கவும் முடியவில்லை.

பிறகு மது வெளியே கிளம்பி வரும் போது ரியா இதை பார்த்துவிட ’ஆனந்துக்கு எல்லா உண்மையும் தெரிந்துடுச்சோ’ என்று அதிர்ச்சி அடைகிறாள், ஆனந்திடம் வந்து தீபா தன்னை அறைந்துவிட்டதாகவும் அத்தை எதுவுமே கேட்கவில்லை என்றும் பிளேட்டை மாற்றி பேசுகிறாள்.

இதனால் ஆனந்த் ’’அப்படியா? நீ அவளை சும்மாவா விட்ட’’ என்று கேட்க ரியா, ’’வேண்டாம் நீ அவகிட்ட எதுவும் கேட்க வேண்டாம், இந்த விஷயம் உங்களுக்கு தெரிய வேண்டாம், பிரச்னை வேண்டாம்னு தான் சொல்லாமல் இருந்தேன்’’ என்று நல்லவள் வேஷம் போட்டு ஆனந்த் மனசை கலைக்கிறாள். 

அதன் தொடர்ச்சியாக ஐஸ்வர்யா ஆனந்தை கூப்பிட்டு கார்த்திக்கை வேலையில் இருந்து அனுப்ப என்னிடம் ஒரு வழி இருப்பதாக சொல்லி எதையோ ஒன்றை சொல்ல ஆனந்த், ’’நீ சொன்ன மாதிரியே செஞ்சிடுறேன்’’ என்று கிளம்பிச்செல்கிறான்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்