தமிழ் செய்திகள்  /  மட்டைப்பந்து  /  Srh Vs Gt Preview: இந்த மேட்ச்சில் ஜெயிச்சா போதுமா.. பாட் கம்மின்ஸ் டீமுக்கு சவால் கொடுக்குமா கில் அணி!

SRH vs GT Preview: இந்த மேட்ச்சில் ஜெயிச்சா போதுமா.. பாட் கம்மின்ஸ் டீமுக்கு சவால் கொடுக்குமா கில் அணி!

Manigandan K T HT Tamil
May 16, 2024 06:15 AM IST

SRH vs GT Preview: ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் மே 16ஆம் தேதி குஜராத் டைட்டன்ஸ் (ஜிடி) அணியுடன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்ஆர்எச்) மோதுகிறது. ஆட்டம் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

SRH vs GT Preview: இந்த மேட்ச்சில் ஜெயிச்சா போதுமா.. பாட் கம்மின்ஸ் டீமுக்கு சவால் கொடுக்குமா கில் அணி!
SRH vs GT Preview: இந்த மேட்ச்சில் ஜெயிச்சா போதுமா.. பாட் கம்மின்ஸ் டீமுக்கு சவால் கொடுக்குமா கில் அணி!

ட்ரெண்டிங் செய்திகள்

SRH, 12 போட்டிகளில் ஏழில் வெற்றி பெற்றுள்ளதால், இந்த போட்டியில் வெற்றி பெற்றால் பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும். பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஐதராபாத் அணி கடைசியாக விளையாடிய ஐந்து போட்டிகளில் இரண்டில் வெற்றி பெற்றுள்ளது.

ஜிடி 12 போட்டிகளில் ஐந்தில் வெற்றி பெற்றுள்ளது. சுப்மன் கில் தலைமையிலான குஜராத் அணி வெளியேறியது. GT அவர்கள் கடைசியாக விளையாடிய ஐந்து போட்டிகளில் ஒன்றில் வெற்றி பெற்றுள்ளனர், ஒரு போட்டி வாஷ் அவுட் ஆனது. புள்ளிகள் பட்டியலில் எட்டாவது இடத்தில் உள்ளனர். மேலும், ஜிடி ஏற்கனவே எலிமினேட் ஆகிவிட்டது.

SRH vs GT நேருக்கு நேர்

ஹைதராபாத் மற்றும் குஜராத் அணிகள் நான்கு ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ளன. SRH ஒரு வெற்றி பெற்றுள்ளது, GT மூன்று வென்றுள்ளது. குஜராத் அணிக்கு எதிராக இதுவரை சன்ரைசர்ஸ் எடுத்த அதிகபட்ச ரன் 195. எஸ்ஆர்எச்க்கு எதிராக குஜராத் அணி எடுத்த அதிகபட்ச ரன் 199 ஆகும்.

இந்த அணிகள் கடைசியாக இந்த ஆண்டு மார்ச் 31ம் தேதி மோதியது. நான்கு ஓவர்களில் 25 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்திய ஜிடியின் மோகித் சர்மா ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதில் டைட்டன்ஸ் அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

SRH vs GT பிட்ச் ரிப்போர்ட்

ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் உள்ள ஆடுகளம் பொதுவாக ஒரு சீரான மேற்பரப்பை வழங்குகிறது. ஆட்டத்தின் ஆரம்பத்தில், வேகப்பந்து வீச்சாளர்கள் ஸ்விங் நிலைமைகளை பயன்படுத்திக் கொள்ளலாம். போட்டி முன்னேறும் போது, ​​பொதுவாக பேட்டர்கள் கை ஓங்குவது எளிதாகிறது.

இந்த மைதானத்தில் கடைசியாக விளையாடிய போட்டி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) மற்றும் ஐதராபாத் அணிக்கு இடையே நடந்தது. LSG 20 ஓவர்களில் 165/4 எடுத்தது. SRH தொடக்க ஆட்டக்காரர்களான டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் 9.4 ஓவர்களில் இலக்கை அடைந்தனர். 10 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் வெற்றி பெற்றது.

SRH vs GT வானிலை

மாலையில், சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். ஹைதராபாத்தில் வெப்பநிலை 28 C ஆகவும், ஈரப்பதம் 68% ஆகவும் இருக்கும். AccuWeather படி, மழை பெய்ய 40% வாய்ப்பு உள்ளது.

SRH vs GT கணிப்பு

கூகுளின் வெற்றி நிகழ்தகவின்படி, சன்ரைசர்ஸ் தனது 13வது லீக் ஆட்டத்தில் குஜராத்தை வீழ்த்த 60% வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூகுள் நிகழ்த்தகவு
கூகுள் நிகழ்த்தகவு (Google)

இதுவரை ஐபிஎல் சாம்பியன்கள்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2010, 2011, 2018, 2021, 2023 ஆகிய ஆண்டுகளில் சாம்பியன் ஆனது. முதல் சீசனில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வெல்லவில்லை. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இரண்டு முறை (2012, 2014) பட்டம் வென்றுள்ளது. ஹைதராபாத் அணி முதன்முறையாக டெக்கான் சார்ஜர்ஸ் அணியாக 2009 இல் ஒரு முறையும், 2016 இல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியாக மீண்டும் ஒருமுறையும் பட்டம் வென்றது.

IPL_Entry_Point