தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Darshana Who Acted In Zee Tamil Kana Serial Is Away From That Serial

Kana serial: ஜீ தமிழ் சீரியலில் இருந்து திடீரென்று விலகிய நடிகை! - காரணம் என்ன தெரியுமா?

Kalyani Pandiyan S HT Tamil
Apr 02, 2024 05:32 PM IST

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் கனா சீரியலில் இருந்து அதன் கதாநாயகி விலகி இருக்கிறார்.

கனா சீரியலில் இருந்து நடிகை விலகல்!
கனா சீரியலில் இருந்து நடிகை விலகல்!

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த சீரியலில் நாயகியாக தர்ஷனா, அன்பரசி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். உன்னி கிருஷ்ணன் நாயகனாக நடிக்க மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த நிலையில், அன்பரசியாக நடித்து வரும் தர்ஷனா, திருமணம் காரணமாக இந்த சீரியலில் இருந்து வெளியேற போவதாக ஏற்கனவே தகவல் பரவிய நிலையில், தற்போது வெளியேறி விட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

மேலும் அவருக்கு பதிலாக தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து பிரபலமான டோனிஷா என்பவர் நடிக்க இருப்பதாக தெரிய வந்துள்ளது. நாளை அல்லது நாளை மறுநாள் முதல் இவரது காட்சிகள் இடம்பெற இருக்கிறதாம். 

இவர்கள் தெலுங்குவில் ஹிட்லர் காரி பெல்லம் என்ற சீரியலிலும் மலையாளத்தில் பலுங்கு என்ற சீரியலிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இன்று ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் கார்த்திகை தீபம் சீரியலில் நடந்தது என்ன என்பதையும் படியுங்கள்!

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் அபிராமியை தேடி குடோனுக்கு வந்திருந்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

அதாவது, அபிராமி குடோனில் இருந்த பொருட்களால் மூடி வைக்கப்பட்டு இருந்த நிலையில், கார்த்திக் அங்கிருந்து வெளியே வரும் போது, ஒரு பொருள் கீழே விழுந்தது. திரும்பி பார்த்த போது, பூனை ஒன்று கத்த, அங்கிருந்து அவன் கிளம்பி வந்து விடுகிறான்.

இதனையடுத்து மீண்டும் பல இடங்களில் அபிராமியை தேடி பார்க்க, எங்கும் கிடைக்காததால் வருத்தப்பட்டு உடைகிறான். தீபா ரவுடிகளை பார்த்ததால், அவரை வைத்து எதாவது செய்ய முடியுமா என்று யோசிக்கிறான். மறுபுறம் தீபா கட்டுடன் வீட்டிற்கு வர, வீட்டில் என்னாச்சு என்று கேட்க, நடந்த விஷயத்தை சொல்கிறாள். இதைக்கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

பிறகு போலீசுடன் வீட்டிற்கு வரும் கார்த்திக், தீபா நீங்க சில ரவுடிகளை பார்த்தீங்கல, அவர்களில் யாரவது இந்த லிஸ்டில் இருக்காங்களா பாருங்க என்று போலீஸ் அக்கியூஸ்ட் லிஸ்ட்டை காட்ட, தீபா அதை பார்த்து சிலரை அடையாளம் காட்டினாள். இதைப்பார்த்த ஐஸ்வர்யா அதிர்ச்சி அடைகிறாள்.

உடனே ரவுடிகளுக்கு போன் போட்டு அந்த தீபா உங்களை அடையாளம் காட்டிட்டா… உஷாரா இருங்க என்று வார்னிங் கொடுக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

கடந்த எபிசோடில் நடந்தது என்ன?

கார்த்திக் கோயிலை நெருங்கும் நேரத்தில், அபிராமியை ரவுடிகள் கடத்தினர். உடனே கார்த்திக் வண்டி நம்பரை நோட் செய்து, போலீசுக்கு தகவல் கொடுத்தான். இன்னொரு பக்கம், கார்த்தியும் அபிராமியை தேடினான்.

இதற்கிடையே போலீஸ் கார்த்திக்கு போன் போட்டு, ரவுடிகள் இந்த ஏரியாவை விட்டு தாண்டி இருக்க வாய்ப்பு இல்லை. இங்கேதான் எங்கேயாச்சும் இருக்கணும்..சீக்கிரம் தேடி கண்டுபிடித்து விடலாம் என்றனர்.

மறுபக்கம் ரவுடிகள், அபிராமியை ஒரு குடோனுக்குள் அடைத்து வைக்க, இங்கே தீபா, அபிராமி அத்தையை இங்கதான் பக்கத்துல எங்கயாச்சும் மறைத்து வைத்திருக்கணும், ஏதாச்சும் குடோன்களில் தேடிப் பார்க்கலாம் என்று சொல்ல, போலீஸ், கார்த்திக், தீபா என எல்லோரும் கிளம்பிச் சென்றனர்.

போலீஸ் உடன் கார்த்திக், தீபா வருவதை பார்த்த ரவுடிகள் அபிராமியை அங்கிருந்த பொருட்களை வைத்து மூடினர். கார்த்திக் குடோனுக்குள் நுழைந்து, அபிராமி தேடி பார்க்க, அங்கும் யாரும் இல்லாததால் குழப்பம் அடைந்தான்.

இந்த நேரத்தில் கண் விழிக்கும் அபிராமி, கார்த்திக்கு எப்படியாவது தான் இங்கே இருப்பதை தெரியப்படுத்த வேண்டும் என முயற்சி செய்தாள். ஆனால் எதுவும் செய்ய முடியவில்லை.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

 

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்