Karthigai Deepam: : கார்த்திக்கு எதிராக ஐஸ்வர்யா போட்ட பிட்டு.. ஓட விட்டு பின் மண்டையில் அடித்த அபிராமி!
கார்த்திக்கு எதிராக ஐஸ்வர்யா சொன்ன வார்த்தை.. பேய் ஓட்டி விட்ட அபிராமி, நடந்தது என்ன? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்!
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில், மில்லில் கார்த்திக் சாப்பாடு சரியில்லை என்று வாக்குவாதம் செய்து தொழிலாளர்களுக்கு நீதி வாங்கி கொடுத்த நிலையில், இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, கார்த்தி செய்த விஷயத்தால், தொழிலாளர்கள் எல்லாரும் அவரை கொண்டாடி மகிழ்கின்றனர். அடுத்ததாக வேலை முடிந்து அருண் மற்றும் ஆனந்த் வீட்டிற்கு வர, இன்னைக்கு எப்படி போச்சு என்று ரியா கேட்கிறாள்.
அதற்கு அவன், அந்த கார்த்திக்கை நம்மளால தோற்கடிக்க முடியாது போல, எல்லாரும் அவனை கொண்டாடுறாங்க என்று சொல்கிறான்.