KL Rahul: கே.எல்.ராகுலுடன் மைதானத்தில் விவாதித்த எல்எஸ்ஜி அணியின் உரிமையாளர்-நடந்தது என்ன?
LSG: DC பிளேஆஃப்களுக்கு தகுதிபெறும் நம்பிக்கையை முடிவுக்குக் கொண்டுவந்த பிறகு, LSG உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா, கேப்டன் KL ராகுல் மற்றும் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கருடன் மற்றொரு போட்டிக்குப் பிந்தைய கலந்துரையாடலை நடத்தினார். இதுபோன்று இதற்கு முன்பும் ஒரு முறை நடந்தது.

இப்போதெல்லாம் நெட்டிசன்கள் எதையும் தவறவிடுவதில்லை, குறிப்பாக ஐபிஎல் போட்டிகளில் நடக்கும் ஆஃப் தி ரெக்கார்டு ஸ்டோரிக்களை ஹைலைட் செய்வது முதலில் ஐபிஎல் ரசிகர்கள்தான். அந்த வகையில், எல்எஸ்ஜி உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா மற்றும் கே.எல். ராகுலுடன் தொடர்புடையதாக ஒரு புதிய செய்தி வந்துள்ளது. ஐபிஎல் 2024 இல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான அணி தோல்வியைத் தொடர்ந்து லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் உரிமையாளரும் அதன் கேப்டனும் டிரெண்டிங்கில் உள்ளனர். இந்த சீசன் முடிவதற்கு முன்பே ராகுல் கேப்டன் பதவியை ராஜினாமா செய்வது குறித்த ஊகங்களுக்கு வழிவகுத்தது. ஆனால் அதன்பிறகு விஷயங்கள் வேறு திருப்பத்தை எடுத்துள்ளன.
செவ்வாயன்று அருண் ஜேட்லி ஸ்டேடியத்தில் DC க்கு எதிரான LSG போட்டிக்கு முன், கோயங்கா திங்களன்று ராகுலை இரவு உணவிற்கு அழைத்ததாக கூறப்படுகிறது. இருவரின் படங்கள் வைரலானது. DC க்கு எதிரான போட்டியின் போதும் அதற்குப் பின்னரும் கூட LSGயின் இரண்டு பேரின் செயல்களும் பாசிட்டிவாகவே இருந்தது.
போட்டி முடிந்த பிறகும் காட்சிகள் நேர்மறையாகவே இருந்தன. ஐபிஎல் 2024 பிளேஆஃப்க்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்புகள் எல்எஸ்ஜிக்கு மங்கிவிட்டது, மும்பையுடன் ஓர் ஆட்டம் மட்டுமே எஞ்சியிருக்கிறது.