தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Karthigai Deepam: குல்பி ஐஸ்கிரீமில் குட்டி ரொமன்ஸ்; பேப்பர் ரோஸ்ட் தோசைக்கிடையே பக்கா ஸ்கெட்ச்! -கார்த்திகை தீபம்!

Karthigai Deepam: குல்பி ஐஸ்கிரீமில் குட்டி ரொமன்ஸ்; பேப்பர் ரோஸ்ட் தோசைக்கிடையே பக்கா ஸ்கெட்ச்! -கார்த்திகை தீபம்!

Kalyani Pandiyan S HT Tamil
Apr 29, 2024 12:32 PM IST

தீபாவுக்கு ஊட்டி விட்டு அழகு பார்த்த கார்த்திக்.. மீனாட்சிக்காக எடுத்த முடிவு - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்!

கார்த்திகை தீபம்!
கார்த்திகை தீபம்!

ட்ரெண்டிங் செய்திகள்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில், கார்த்தியை வேற ஒரு கம்பெனிக்கு வேலைக்கு அனுப்ப வேண்டும் என்று ஐஸ்வர்யா, ரியா, ஆனந்த், அருண் ஆகியோர் கூட்டு சேர்ந்து முடிவு எடுத்த நிலையில், இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். 

அதாவது, கார்த்திக் தீபாவை அழைத்துக் கொண்டு வெளியே வர, ஒரு தள்ளுவண்டி கடையை பார்த்து, வாங்க சாப்பிடலாம் என்று கூப்பிடுகிறான். அதற்கு தீபா நீங்க, இந்த மாதிரி கடையிலெல்லாம் சாப்பிடுவீங்களா என்று கேட்க, நான் அடிக்கடி இந்தக் கடைக்கு வந்து இருக்கேன் என்று சொல்லி, தீபாவை அழைத்துச் செல்கிறான்.

கடைக்காரர் கார்த்திக்கை பார்த்ததும், வாங்க கார்த்திக் சார், என்ன சாப்பாடு என்று கேட்க, கார்த்திக் பேப்பர் ரோஸ்ட் என்று சொன்னான். இதையடுத்து கடைக்காரர் தீபாவை பார்த்து, இது யாரு புதுசா இருக்காங்க என்று கேட்கிறான். 

அதன் பிறகு கார்த்திக் இது தீபா, என்னுடைய மனைவி என அறிமுகம் செய்து வைக்கிறான். பிறகு தீபாவிடம் உங்களுக்கும் பேப்பர் ரோஸ்ட்டா என்று கேட்க, அவளும் ஆமாம் என்று சொல்கிறாள்.

பிறகு கார்த்திக் மற்றும் தீபா இடையே யார் ஆஃபாயிலை உடைக்காமல் சாப்பிடுறாங்கனு பார்க்கலாம் என்று போட்டி நடக்க, தீபா எனக்கு அதெல்லாம் சாப்பிடத் தெரியாது என்று சொல்கிறாள். இதையடுத்து கார்த்திக் அவளுக்கு ஊட்டி விடுகிறான். பிறகு டைம் ஆகிவிட்டதால், ஆட்டோ கிடைக்காமல் இருக்க, தீபா நடந்தே போகலாம் என்று சொல்லி கூட்டி வருகிறாள்.

மேலும் தீபா எனக்கு குல்பி சாப்பிடணும் என்று சொல்ல, குல்பி கடைக்கு கூட்டிச் செல்கிறான்.  அங்கே எல்லோரும் ஜோடி, ஜோடியாக வந்து ஐஸ்கிரீம் சாப்பிடுவதை பார்த்த தீபா, புரியாமல் எதுக்கு எல்லாம் ஜோடி ஜோடியா இருக்காங்க என்று கேட்கிறாள். 

இதை பார்த்து அங்கே இருந்தவர்கள் சிரிக்க, கடைக்காரர் என்ன சார் நீங்க சொல்றீங்களா…? இல்ல நான் சொல்லட்டுமா…? என்று கேட்கிறான். தொடர்ந்து கார்த்திக், தீபாவின் காதில் எல்லாரும் லவ்வர்ஸ் என்ற விஷயத்தை சொல்கிறான்.

அடுத்ததாக, ரியாவோட உண்மை முகத்தை வெளியே கொண்டு வரணும். ஆனந்த் அவளைப் பற்றி தெரிந்து கொண்டால், அவ கிட்ட இருந்து விலகி வந்து, மீனாட்சி அண்ணியோட சேர்ந்து வாழ்வான். அதற்கான வேலைகளை செய்ய வேண்டும் என்று முடிவெடுக்கின்றனர். 

கார்த்திக், உங்களோடு வந்தா ஜாலியா இருக்கு; ஆனால் இப்படி இரண்டு பேரும் ஒண்ணா வெளிய வந்து ரொம்ப நாள் ஆயிடுச்சு என பேசினான். 

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

IPL_Entry_Point

டாபிக்ஸ்