தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  சக்தியிடம் ரங்கநாயகி வாங்கிய சத்தியம் - மீனாட்சி பொண்ணுங்க இன்றைய அப்டேட்!

சக்தியிடம் ரங்கநாயகி வாங்கிய சத்தியம் - மீனாட்சி பொண்ணுங்க இன்றைய அப்டேட்!

Pandeeswari Gurusamy HT Tamil
Apr 12, 2023 01:24 PM IST

Meenakshi Ponnunga: நெருப்பு வளையத்துக்குள் அமர்ந்து பரிகார பூஜை செய்ய வெற்றி தயாராக, அதைப் பார்த்து சக்தி அதிர்ச்சியாகி நிற்கிறாள்.

மீனாட்சி பொண்ணுங்க
மீனாட்சி பொண்ணுங்க

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் வெற்றி பரிகாரம் செய்ய இருப்பதாக அறிந்து ரங்கநாயகியும் பூஜாவும் கோவிலுக்கு வருகிறார்கள்.

நெருப்பு வளையத்துக்குள் அமர்ந்து பரிகார பூஜை செய்ய வெற்றி தயாராக, அதைப் பார்த்து சக்தி அதிர்ச்சியாகி நிற்கிறாள்.

எதிர்பாராமல் நெருப்பு‌ வெற்றி மீது பரவ, பூஜா பயந்து ஓட சக்தி அவனை காப்பாற்றுகிறாள். இதை வைத்து வெற்றி ரங்கநாயகியிடம், தனக்கு யார் சரியான ஜோடி, பூஜாவா சக்தியா என்று கேட்க ரங்கநாயகி யோசிக்கிறாள். மறுநாள் ரங்கநாயகியே சக்திக்கு போன் செய்து வீட்டுக்கு வரச் சொல்லி, அவளுக்கு செயின் போட்டு பாராட்டுகிறாள்.

அதற்கு பிறகு, வெற்றி, பூஜா கல்யாணத்தை நீதான் நடத்தித் தரணும், எந்த பிரச்சினை வந்தாலும் நடத்தி தரணும் என்று சத்தியம் கேட்க, சக்தியும்‌ சத்தியம் செய்கிறாள்.

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய மீனாட்சி பொண்ணுங்க சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்