தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Janhvi Kapoor Climbs Tirupati Steps On Her Knees

Janhvi Kapoor: திருப்பதி மலைப் படிக்கட்டுகளில் முழங்கால் போட்டு ஏறிய ஜான்வி - ஆன்மிக Vibe-ல் சொன்ன தத்துவம்!

Marimuthu M HT Tamil
Mar 24, 2024 07:19 PM IST

ஜான்வி கபூர் இந்த மாத தொடக்கத்தில் தனது பிறந்தநாளுக்காக திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்தார். அப்போது அவர் முழங்காலில் படிக்கட்டுகளில் ஏறிய வீடியோ வைரல் ஆகி வருகிறது.

ஜான்வி கபூர் ஷிகர் பஹாரியா, ஓரி மற்றும் இன்னும் சில அன்பர்களுடன் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்
ஜான்வி கபூர் ஷிகர் பஹாரியா, ஓரி மற்றும் இன்னும் சில அன்பர்களுடன் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார் (Orry/YouTube)

ட்ரெண்டிங் செய்திகள்

இதுதொடர்பாக, ஜான்வியின் நண்பர் ஓரி வீடியோ ஒன்றினை யூடியூப்பில் பகிர்ந்துள்ளார். அதில் திருப்பதியின் படிகளில் ஏறிய அனுபவத்தை விவரிக்கிறார்.

திருப்பதி மலைப்படிக்கட்டு வழியாக சென்ற ஜான்வி

திருமலை - திருப்பதி மலையில் படிக்கட்டு வழியாக ஏறுவதற்கு முன்பு பேசிய ஜான்வி, தான் திருப்பதி கோயிலுக்குச் செல்வது இது 50ஆவது முறை என்றும், ஓரி ஏறுவது இதுவே முதல் முறை என்றும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

 திருப்பதிக்குச் செல்வதற்கு முன்பு, ஜான்வியின் சென்னை வீட்டில் அவர்கள் எவ்வாறு ஓய்வெடுத்தார்கள் என்பதை ஓரி விவரித்தார். மதிய உணவுக்கு ஒரு நண்பரின் வீட்டில் நிறுத்தினார்.

திருப்பதி ஏறும் முன் ஓரியிடம் பேசிய ஜான்வி, தான் ஏன் படிக்கட்டுகளில் ஏறி கோவிலுக்கு செல்ல விரும்புகிறார் என்பதை விளக்கினார். 

ஜான்வி கூறியதாவது, "நிறையபேர் இது பயணம் என்று கூறுகிறார்கள். ஆனால், இது வாழ்க்கையின் இலக்கினை சொல்லித் தருவது. இது முன்னேறுவதைப் பற்றியது. வாழ்க்கை என்பது முன்னேறுவதைப் பற்றியது தான். திருப்பதி மலை ஏறும் அனுபவத்தை எல்லோரும் அனுபவிக்க வேண்டும். ஏனென்றால், அது உங்களை பணிவுடன் நினைக்க வைக்கும் என்று நான் நினைக்கிறேன்’’ என்றார்.

 பயணத்தில் ஜான்வியுடன் சென்ற காதலன் ஷிகர் கூறியதாவது, "நான் கற்றுக்கொண்ட ஒரு விஷயம் என்னவென்றால், நீங்கள் மேலே பார்த்தாலும் பயப்படுவீர்கள், கீழே பார்த்தாலும் பயப்படுவீர்கள். எனவே உங்களுக்கு மேல் இருக்கும் ஒரு படியில் மட்டும் ஏறிச் செல்லுங்கள்’’என்றார்.

ஓரி பகிர்ந்த வீடியோவில், ஜான்வி அந்த மலையின் கடைசி கட்ட நிலையில் செல்லும்போது, தனது முழங்கால்களை வைத்து படிக்கட்டுகளில் ஏறினார். ஜான்வியின் செயலால் ஈர்க்கப்பட்ட ஓரியும் அவ்வாறே செய்ய முயற்சிக்கிறார். மிகவும் பார்ப்பதற்கு அபூர்வமான வீடியோவாக அது இருக்கிறது. 

கடந்த காலங்களில், ஜான்வி கபூர், தனது தந்தை போனி கபூர் மற்றும் சகோதரி குஷி கபூருடன் அடிக்கடி திருப்பதிக்கு வருகை தருவார் என்னும் நிலையில், 50ஆவது முறை தனது காதலன் மற்றும் நண்பருடன் வந்து ஏழுமலையானை தரிசித்துச் சென்றார். 

#RC16 படத்தில் ஜான்வி: 

ஹைதராபாத்தில் புச்சி பாபு சனா இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் இன்னும் பெயரிடப்படாத படத்தின் பூஜையில், தனது தந்தை போனி கபூருடன் ஜான்வி கபூர் பங்கேற்றார்.

 ராம் சரண், ஜான்வி கபூருடன் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதில் ஒன்று தயாரிப்பாளர்களுடன் தனது இல்லத்தில் எடுக்கப்பட்ட படங்களில் ஒன்றாகும். அதில் ராம் சரண்,"#RC16ஐ எதிர்நோக்குகிறோம்!" என்று நடிகர் எழுதி, அங்கு படக்குழுவினருடன் எடுக்கப்பட்ட புகைப் படங்களைப் பகிர்ந்து கொண்டார். 

படத்தின் வெளியீட்டின்போது பூஜையில் ஜான்வியும் பங்கேற்றார். இதில் சிரஞ்சீவி மற்றும் அல்லு அரவிந்த் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

கொரட்டலா சிவாவின் இயக்கத்தில், ஜூனியர் என்.டி.ஆர். நடித்து வரும் ‘தேவரா’ என்னும் படத்தின்மூலம், ஜான்வி தெலுங்கில் அறிமுகமாகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கோவாவில் நடந்து வருகிறது. மேலும் ஜான்வி உல்ஜா என்னும் படத்தைத் தவிர, மிஸ்டர் அண்ட் மிஸஸ் மஹி என்ற இந்தி படங்களிலும் நடித்து வருகிறார்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்