தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Boney Kapoor Confirms Janhvi Kapoor Has Been Roped In For Ram Charans Next

Janhvi Kapoor: ராம் சரணுடன் ஜோடி சேரும் ஜான்வி - உறுதிப்படுத்திய தந்தை போனி கபூர்!

Marimuthu M HT Tamil
Feb 19, 2024 03:29 PM IST

ராம் சரணுடன் ஜான்வி ஜோடி சேர்ந்து நடிக்கயிருப்பதை அவரது தந்தை போனி கபூர் உறுதி செய்தார்.

ராம் சரணுடன் ஜோடி சேரும் ஜான்வி
ராம் சரணுடன் ஜோடி சேரும் ஜான்வி (Instagram)

ட்ரெண்டிங் செய்திகள்

அனைத்து ஊகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும்படி திரைப்படத் தயாரிப்பாளர் போனி கபூர், தனது சமீபத்திய நேர்காணலில் தனது மகள் ஜான்வி கபூர், ராம் சரணுடனுடன் இரண்டாவது தெலுங்கு படத்தில் கையெழுத்திட்டுள்ளார் என்பதை உறுதிப்படுத்தினார். 

உப்பேனா இயக்குநர் புஜ்ஜி பாபு தனது அடுத்த படத்தில், தான் நடிகர் ராம் சரணை விரைவில் இயக்கவுள்ளதாகத் தெரிவித்த நிலையில் ஜான்வி கபூர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

ராம்சரணுடன் நடிப்பதை ஆசீர்வாதமாக கருதும் ஜான்வி:

ஜான்வி தற்போது கொரட்டலா சிவாவின் தேவரா படத்தில் ஜூனியர் என்.டி.ஆருடன் இணைந்து நடித்து வருகிறார். அப்படம் குறித்தும் அவரது வரவிருக்கும் தெலுங்கு படங்கள் குறித்தும் பேசிய போனி கபூர், "எனது மகள் ஏற்கனவே ஜூனியர் என்.டி.ஆருடன் ஒரு படத்தில் நடித்துள்ளார். அவர் இங்கு படப்பிடிப்பு தளத்தில் செலவழிக்கும் ஒவ்வொரு நாளையும் நேசிக்கிறார். 

விரைவில், ராம் சரணுடனும் சேர்ந்து நடிக்கவுள்ளார். அவங்க ரெண்டு பேருடைய லுக் டெஸ்ட் சிறப்பாக வந்துள்ளது. அவர் நிறைய தெலுங்கு படங்களைப் பார்த்து வருகிறார். ராம் சரணுடன் நடிப்பதை, பணிபுரிவதை ஜான்வி பாக்கியமாக உணர்கிறார். இப்படம் வெற்றி அடைந்தால், தெலுங்கில் அவர் அதிகப்படங்களில் நடிக்கலாம். விரைவில் சூர்யாவுடன் இணைந்து நடிக்கவுள்ளார். என் மனைவி ஸ்ரீதேவி பல மொழிகளில் நடித்துள்ளார். என் மகளும் அதையே செய்வார் என்று நம்புகிறேன்.

இதற்காகவே, நான் ஹைதராபாத்தில் ஒரு வீட்டை வாங்க விரும்பினேன்’’ என்றார். 

முன்னதாக, போனி கபூர் தெலுங்கில் பல படங்களைத் தயாரித்து இருக்கிறார். மேலும் பல ஆண்டுகளாக நகரம் எவ்வளவு மாறிவிட்டது என்பதைப் பற்றி போனி கபூர் பேசினார். அவர் ஒரு காலத்தில் ஸ்ரீதேவிக்காக ஹைதராபாத்தில் ஒரு வீட்டை வாங்க விரும்பியதாகவும், ஆனால் அப்போது அவருக்கு மனம் இல்லை என்றும் வெளிப்படுத்தினார்.

இதுதொடர்பாக ஊடகங்களிடம் பேசிய போனி கபூர், "நான் எனது 12 படங்களை ஹைதராபாத்தில் படமாக்கினேன். அப்போது அது வளர்ந்து வரும் நகரமாக இருந்தது. சில வருடங்கள் கழித்து நான் திரும்பி வந்தபோது, மொத்த ஹைதராபாத் நகரமும் மாறியிருந்தது.

அப்போது நானே காரை எடுத்துக்கொண்டு ஓட்டுவேன். அந்த அளவுக்கு ஹைதராபாத் நகரின் தெருக்கள் எனக்குப் பரீட்சயம். ஆனால், இப்போது எனக்கு வழிகாட்ட உள்ளூர் வடிகாட்டி ஒருவர் தேவை. என் மனைவி ஸ்ரீதேவி ஹைதராபாத்தில் ஒரு வீடு வாங்க விரும்பினேன். ஏனென்றால், அவள் இங்கு நிறைய படங்களில் பணி செய்து இருக்கிறாள். நாங்கள் இங்கு இருக்கும்போதெல்லாம் நிறைய ஆந்திர உணவுகளைச் சாப்பிட்டிருக்கிறோம். இங்கு சாப்பிட்டது எல்லாம் எனக்கு நினைவிருக்கிறது. இப்போது, எனக்கு இவ்வூரைப் பிரிய மனம் இல்லை" என்று அவர் கூறினார்.

ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம் சரண் ஆகியோருடன் தெலுங்கு படங்களில் கமிட் ஆகியுள்ள ஜான்வி, சூர்யாவுடன் தமிழ்ப் படம் ஒன்றிலும், இந்தியில் மிஸ்டர் அண்ட் மிஸஸ் மஹி மற்றும் உலாஜ் ஆகியப் படங்களில் நடிக்கிறார். 

ஆனால், ராம் சரணின் அடுத்த படத்தின் தயாரிப்பாளர்கள் இதுகுறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்