தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Baashha: ‘ஜெயிலரை பாட்ஷாவோடு ஒப்பிடாதீங்க’ இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா ஷாக் பேட்டி!

Baashha: ‘ஜெயிலரை பாட்ஷாவோடு ஒப்பிடாதீங்க’ இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா ஷாக் பேட்டி!

Stalin Navaneethakrishnan HT Tamil
Aug 25, 2023 11:22 AM IST

Suresh Krishna: ‘இப்போ அவர் டான்ஸ் ஆடி, ஸ்டைல் பண்ணக் கூடாது’

பாட்ஷ மற்றும் ஜெயிலர் திரைப்பட போஸ்டர்கள்
பாட்ஷ மற்றும் ஜெயிலர் திரைப்பட போஸ்டர்கள்

ட்ரெண்டிங் செய்திகள்

‘‘ஜெயிலரை பாட்ஷா உடன் ஒப்பிடக் கூடாது. ஜெயிலருக்கு ஒரு ப்ளஸ், மைனஸ் இருக்கும். பாட்ஷாவுக்கு ஒரு ப்ளஸ், மைனஸ் இருக்கும். எல்லா படத்திற்கும் அந்த நேரத்தில் இருக்கும் மார்க்கெட், க்ராப் எல்லாமே மாறும்.

இப்போ வயதுக்கு ஏற்றவாறு, ரஜினி சாரோடு புகழோ, ரசிகர்களுக்கு இருக்கும் அன்போ இன்னும் குறையவே இல்லை. 3 தலைமுறைகளாக அப்படியே இருக்கு. அப்போது இருந்து இப்போ வரை அதே வரவேற்பு அவருடைய படங்களில் இருக்கிறது. 

இப்போ அவர் டான்ஸ் ஆடி, ஸ்டைல் பண்ணக் கூடாது. பாட்ஷாவில் உள்ள என்ன பவர் என்று பார்த்தால், முதல் பாதியில் அவருடைய பவரை காட்டவே மாட்டோம். அதே தான் ஜெயிலரில் இருக்கு. நெல்சன் சரியா புரிந்து, ரஜினி சார் வயதுக்கு ஏற்றவாறு ஸ்கிரிப்ட் பண்ணி, அவரோட ப்ளாக் காமெடியையும் மிஸ் பண்ணாம பண்ணிருக்கார். 

1995ல் பாட்ஷா பெரிய ஹிட். இப்போது ஜெயிலர் பெரிய ஹிட். அங்கேயும் ரஜினி சார், இங்கேயும் ரஜினி சார். இரண்டையும் ஒப்பிடவே கூடாது. விக்ரம் படம் பார்த்துட்டு, லோகேஷூக்கு போன் பண்ணி பேசினேன். நான் ரொம்ப ரசித்தேன். 

நான் சத்யா பண்ணும் போது, என்னுடைய முதல் படம். பாரதிராஜா சார் தான் முதலில் படம் பார்த்துட்டு, ‘இது உன்னுடைய முதல் படம் என்று சொன்னால், நம்பச் சொல்றீயா?’ என்று என்னிடம் கேட்டார். அது எனக்கு பெரிய பாராட்டாக இருந்தது. லோகேஷ் என்னுடைய சத்யா படத்தை ரீமேக் எடுக்க ஆசை என்று சொன்னது எனக்கு பெருமை தான். 

ரஜினி சாருக்கு இன்னும் ரசிகர்களிடம் வரவேற்பு இருக்கிறது. தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள் எல்லாரும் மகிழ்ச்சியா இருக்காங்க. ரஜினி சார், இயக்குனர்கள் என்ன சொல்றாங்களோ அதை அப்படியே கேட்பார். 

சில நேரங்களில், ‘சார் இதை நான் வேறு படத்தில் பண்ணேன், அது ஒர்க்அவுட் ஆகல’ என்று கூறுவார். 150 படங்களுக்கு மேல் பண்ண அவரோடு அனுபவத்தை அந்த இடத்தில் நாம கேட்டுக்கலாம். அப்போ கூட, இது வேணும்னு நீங்க சொன்னா, அவர் கேட்டுப்பார். பாட்ஷா படம் ஓடியதற்கு பல காரணம் இருக்கு. அதில் நடித்த, பணியாற்றிய எல்லாருமே அதற்கு காரணம்’’

என்று அந்த பேட்டியில் சுரேஷ் கிருஷ்ணா கூறியுள்ளார். 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்