தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Ameer And Pavani: திருமணம் செய்யாமல் ஒரே வீட்டில் வசிக்கும் அமீர், பாவனி

Ameer And Pavani: திருமணம் செய்யாமல் ஒரே வீட்டில் வசிக்கும் அமீர், பாவனி

Aarthi V HT Tamil
May 01, 2023 11:40 AM IST

அமீர், பாவனி லிவிங் டு கெதர் ரிலேஷன்ஷிப்பில் இருக்கின்றனர்.

பாவனி, அமீர்
பாவனி, அமீர்

ட்ரெண்டிங் செய்திகள்

ஒரு சிலர் மட்டுமே தங்களது உறவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்கின்றனர். அது போன்ற ஜோடிகளில் ஒருவர் தான் அமீர் மற்றும் பாவனி. பிக் பாஸ் ஐந்தாவது சீசன் மூலம் பிரபலமானவர் அமீர். இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் முன்பே இவருக்கு பாவனி மீது ஒரு விதமான விருப்பம் இருந்துள்ளது.

பின்னர் நிகழ்ச்சியின் வாயில் கார்டு போட்டியாளராக நுழைந்த பிறகு பாவனிணியிடம் தனது காதலை சொல்லிக்கொண்டே இருந்தார். ஆனால் அதற்கு பாவனி சம்மதம் தெரிவிக்கவில்லை.

இருவரும் பின்னர் பிபி ஜோடிகள் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அதிலும் தொடர்ந்து பாவனியிடம், அமீர் பல்வேறு விதமான சேட்டைகள் செய்து காதலை வெளிப்படுத்தினார். இறுதியாக நிகழ்ச்சி முடியும்போது அமீர் காதலை ஏற்றுக் கொண்டார் பாவனி. இருவரும் துணிவு படத்தில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

இந்நிலையில் இவர்கள் இருவரும் தற்போது ஒரே வீட்டில் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருக்கின்றனர். சமீபத்தில் பிரபல யூட்யூப் சேனலில் ஹோம் டூர் வீடியோவில் இதனை அவர்கள் பதிவு செய்தனர்.

மேலும் பெற்றோர்களின் சம்மதத்திற்கு இணங்க தான் தாங்கள் லிவிங் டு கெதர் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாகவும் தெரிவித்தனர்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

IPL_Entry_Point

டாபிக்ஸ்