தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  The Police Tried To Put Fine On A Person Who Had No Habit Of Drinking

Police: போலி மெஷின்.. குடி பழக்கம் இல்லாதவரிடம் மீட்டர் போட நினைத்த போலீஸ்

Aarthi V HT Tamil

Mar 28, 2023, 09:51 AM IST

குடி பழக்கம் இல்லாதவரிடம் காவலர்கள் பணம் வசூலிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
குடி பழக்கம் இல்லாதவரிடம் காவலர்கள் பணம் வசூலிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

குடி பழக்கம் இல்லாதவரிடம் காவலர்கள் பணம் வசூலிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையைச் சேர்ந்தவர் தீபக். இவர் நேற்று இரவு ( மார்ச் 27 ) 10 மணியளவில் டிடிகே சாலை அருகே தனது வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது அவரை காவல் துறையினர் மடக்கி சுவாச சோதனை கருவி மூலம் சோதனை செய்தனர்.

ட்ரெண்டிங் செய்திகள்

TN Chief Minister Stalin: ஆறுநாட்கள் கொடைக்கானலில் தங்கும் முதலமைச்சர் - டிரோன்கள் பறக்கத் தடை விதிப்பு

Weather Update: 'வெப்ப அலை வீசும்.. பார்த்து மக்களே.. வெளியில் சுத்தாதீங்க':வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

TN Wet Land : பரந்தூர் ஈரநிலங்கள் காக்கப்படுவதை உயர்நீதிமன்றம் உறுதி செய்யுமா – சூழல் ஆர்வலர்கள் கேள்வி!

Weather Update: ’மக்களே உஷார்! தமிழ்நாட்டில் 42 டிகிரி செல்சியஸ் வரை உயரும் வெப்பநிலை!’ வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

அதில், அவர் 45% குடித்து இருப்பதாக காண்பிக்கப்பட்டது. இதனையடுத்து அவருக்கு ரசீது கொடுக்கப்பட்டது. இதனால் கடுப்பான அவர் தனக்கு குடிக்கும் பழக்கமே இல்லை என கூறி காவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இருப்பினும் காவலர்கள் அவர் குடித்து இருப்பதாக சொல்லி முறையிட்டனர்.

அதற்கு பிறகு மீண்டும் ஒரு புதிய சுவாச சோதனை கருவி கொண்டு வந்து அவரை சோதனை செய்தனர். அப்போது அதில், அவர் உடம்பில் 0% ஆல்கஹால் இருப்பதாகத் தெரியவந்தது. இதனையடுத்து அவர் அந்த இடத்தில் விடுவிக்கப்பட்டார்.

காவலரும், தீபக்கும் வாக்குவாதம் செய்யும் வீடியோ வெளியாகி உள்ளது. இது குறித்து தீபக் பேசுகையில், "நான் நேற்று இரவு எனது வீட்டிற்கு சென்று கொண்டு இருந்த போது என்னை காவலர்கள் மடக்கி சோதனை செய்தனர்.

சுவாச சோதனை கருவியில் நான் குடித்து இருப்பதாகக் காட்டியது. ஆனால் எனக்கு குடிக்கும் பழக்கம் இல்லை என எனது நெருங்கிய வட்டாரங்களுக்குத் தெரியும். எனது வழக்கறிஞரைத் தொடர்பு கொண்டு பேசினேன். அவர் தங்கள் மேல் தவறு இல்லை என்றால் வாக்குவாதம் செய்யுமாறு கூறினார். அதற்கு பிறகு வேறு ஒரு சுவாச சோதனை கருவியில் சோதனை செய்த போது நான் குடிக்கவில்லை என காட்டியது.

வேண்டும் என்றே பழுதான இயந்திரத்தை வைத்துக்கொண்டு இது போல் செய்கிறார்கள். நீங்கள் குடிக்காமல் இது போன்ற சம்பவ நடந்தால் இதே போல் செய்ய வேண்டும் என்பதற்காக வீடியோ வெளியிட்டேன் " என்றார்.

இது போன்று பழுதான இயந்திரத்தை வைத்துக்கொண்டு காவலர்கள் செய்யும் அராஜகம் செய்பவர்கள் மீது அரசு நடவடிக்கை வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்