தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Weather Update: 'வெப்ப அலை வீசும்.. பார்த்து மக்களே.. வெளியில் சுத்தாதீங்க':வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Weather Update: 'வெப்ப அலை வீசும்.. பார்த்து மக்களே.. வெளியில் சுத்தாதீங்க':வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Marimuthu M HT Tamil

Apr 28, 2024, 08:53 AM IST

Weather Update:கடந்த 24 மணிநேரத்தில் வட தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களில் வெப்பநிலை, இயல்பை விட மிக அதிகளவில் அதாவது 3.1 டிகிரி செல்சியஸ் முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை இருந்துள்ளது.
Weather Update:கடந்த 24 மணிநேரத்தில் வட தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களில் வெப்பநிலை, இயல்பை விட மிக அதிகளவில் அதாவது 3.1 டிகிரி செல்சியஸ் முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை இருந்துள்ளது.

Weather Update:கடந்த 24 மணிநேரத்தில் வட தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களில் வெப்பநிலை, இயல்பை விட மிக அதிகளவில் அதாவது 3.1 டிகிரி செல்சியஸ் முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை இருந்துள்ளது.

Weather Update: குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதனால் இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் நகரின் வானிலை அறிய இங்கே கிளிக் செய்க
ட்ரெண்டிங் செய்திகள்

Today Gold Rate : அட்சய திருதி அன்று தாறுமாறாக உயர்ந்த தங்கம் விலை.. வெள்ளி விலையும் உயர்வு.. இதோ இன்றைய நிலவரம்!

10th Result: 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.55% சதவீதம் தேர்ச்சி..மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி!

Fire Accident Near Sivakasi: சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்து - 8 பேர் உயிரிழப்பு; முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்

Today Gold Rate: நாளை அட்சய திருதியை .. இன்று தங்கம் விலை திடீர் குறைவு. . இன்றைய நிலவரம் என்ன தெரியுமா?

மேலும் இன்று(ஏப்ரல் 28) தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:

தமிழக உள் மாவட்டங்களில் இன்று(ஏப்ரல் 28) அதிகபட்ச வெப்பநிலை 2° செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும். வட தமிழக உள் மாவட்டங்களில், அதிகபட்ச வெப்பநிலை 3°-5° செல்சியஸ் இயல்பைவிட அதிகமாக இருக்கக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களின் ஒருசில இடங்களில் 39°-42° செல்சியஸ் வரையும், இதர தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 35°-39° செல்சியஸ் வரையும் இருக்கக்கூடும்.

ஈரப்பதம்: ஏப்ரல் 28ஆம் தேதியான இன்று காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 30-50%ஆகவும், மற்ற நேரங்களில் 40-75% ஆகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 50-80% ஆகவும் இருக்கக்கூடும்.

வெப்ப அலை பற்றிய முன்னெச்சரிக்கை:-

ஏப்ரல் 28ஆம் தேதியான இன்று வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும். இதர தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும்பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:-

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸை ஒட்டியும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

கோடை வெப்பத்தில் இருந்து தற்காத்துக்கொள்ளும் வழிமுறைகள்:-

தண்ணீர்:

  • தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும்.
  • வெளியே செல்லும்போது தண்ணீர் பாட்டிலை எடுத்துச் செல்லவும்.
  • தண்ணீர், எலுமிச்சை சாறு, தேன், இஞ்சி போன்றவை சேர்த்து பானங்கள் தயாரித்து அருந்தவும்.
  • உணவு:
  • லேசான மற்றும் ஜீரணிக்க எளிதான உணவுகளைச் சாப்பிடவும்.
  • தர்பூசணி, வெள்ளரி, முலாம்பழம் உள்ளிட்ட நீர்ச்சத்து நிறைந்த பழங்கள், காய்கறிகள், சாலட் போன்றவை அதிகம் சாப்பிடவும்.
  • வறுத்த உணவுகள், அதிக எண்ணெய் மற்றும் கொழுப்பு உள்ள உணவுகளைத் தவிர்க்கவும்.

ஆடை:

  • வெளிர் நிற, இலகுவான பருத்தி ஆடைகளை அணியவும்.
  • தொப்பி, கண்ணாடி போன்றவை அணிந்து சூரிய ஒளியில் இருந்து தற்காத்துக் கொள்ளவும்.
  • வெயில் நேரத்தில் வெளியே செல்லும் நேரத்தைக் குறைக்கவும்.
  • சூரிய ஒளி அதிகம் இருக்கும் நேரத்தில் வெளியே செல்ல வேண்டியிருந்தால், நிழலில் நடக்கவும்.
  • தினமும் இரண்டு வேளை குளிர்ந்த நீரில் குளிக்கவும்.
  • வயதானவர்கள் மற்றும் குழந்தைகளை சிறப்பு கவனத்தில் கொள்ளவும்.

டாபிக்ஸ்