தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tn Chief Minister Stalin: ஆறுநாட்கள் கொடைக்கானலில் தங்கும் முதலமைச்சர் - டிரோன்கள் பறக்கத் தடை விதிப்பு

TN Chief Minister Stalin: ஆறுநாட்கள் கொடைக்கானலில் தங்கும் முதலமைச்சர் - டிரோன்கள் பறக்கத் தடை விதிப்பு

Marimuthu M HT Tamil

Apr 28, 2024, 11:31 AM IST

google News
TN Chief Minister Stalin:முதலமைச்சர் ஸ்டாலினின் வருகையை ஒட்டி, கொடைக்கானலில் டிரோன்கள் பறக்கத்தடை விதிக்கப்படுகிறது.
TN Chief Minister Stalin:முதலமைச்சர் ஸ்டாலினின் வருகையை ஒட்டி, கொடைக்கானலில் டிரோன்கள் பறக்கத்தடை விதிக்கப்படுகிறது.

TN Chief Minister Stalin:முதலமைச்சர் ஸ்டாலினின் வருகையை ஒட்டி, கொடைக்கானலில் டிரோன்கள் பறக்கத்தடை விதிக்கப்படுகிறது.

TN Chief Minister Stalin: முதலமைச்சர் ஸ்டாலின் குடும்பத்துடன் வருகையை ஒட்டி, கொடைக்கானலில் டிரோன்கள் பறக்கத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மற்றும் புதுவையில், கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று முடிந்தது. மொத்தம் 7 கட்டங்களாக நாட்டின் 543 மக்களவைத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்றபின், வரக்கூடிய ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது.

எனவே, தேர்தலுக்கு முன் களத்தில் அரசியல் கட்சிகளின் பரப்புரை அனல் பறந்தது. அந்த வகையில் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் தீவிர பரப்புரை செய்தார்.

அப்போதும் கடும் வெயில் தமிழ்நாட்டை ஆக்கிரமிக்கத் தொடங்கியது. அப்போது இருந்து இப்போது வரை கடுமையான புழுக்கம் காணப்படுகிறது. வெயில் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

ஏப்ரல் 28ஆம் தேதியான சென்னை வானிலை ஆய்வு மைய அறிக்கையின்படி, இன்று வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும். இதர தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும்பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் உள் மாவட்டங்களில் வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸில் இருந்து படிப்படியாக உயரக் கூடும் எனவும், மக்கள் குடையில்லாமல் வெளியில் செல்லக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடும் வெயில் மற்றும் நீர் ஆவியாதல், மழையின்மை காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு கூட்டங்களில் குடி நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதனை ஆய்வுக்கூட்டம் நடத்தி, ஆராய்ந்த முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு ஆணைகளை துறைசார் அலுவலர்களுக்கு பிறப்பித்திருக்கிறார் எனத் தெரிகிறது.

கடும் வெயில் மற்றும் தேர்தலில் சூறாவளிப் பரப்புரை ஆகியவற்றில் ஏற்பட்ட களைப்பு காரணமாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடும்பத்துடன் கொடைக்கானலுக்குச் சென்று ஓய்வினைக் கழிக்கத் திட்டமிட்டுள்ளார். 

அதன் ஒரு பகுதியாக, இதற்காக நாளை சென்னை விமான நிலையத்தில் இருந்து மதுரை மாநகருக்கு குடும்பத்துடன் வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கிருந்து காரில் புறப்பட்டு கொடைக்கானல் செல்கிறார். இதனைத்தொடர்ந்து ஏப்ரல் 29ஆம்தேதி முதல் மே 4ஆம் தேதி வரை, 6 நாட்கள், கொடைக்கானலில் குடும்பத்துடன் தங்கி இருப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் முதலமைச்சரின் முகாம் அலுவலகம், கொடைக்கானலில் செயல்படும் எனக் கூறப்படுகிறது.

இதனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை ஒட்டி, நாளை ஏப்ரல் 29ஆம் தேதி முதல் வருகிற 4ஆம் தேதி வரை கொடைக்கானலில் டிரோன்கள் பறக்கத் தடை விதித்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டாக்டர் பி.பிரதீப் ஐ.பி.எஸ். உத்தரவு பிறப்பித்துள்ளார்.

முன்னதாக 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றபின்,திமுக தலைவர் ஸ்டாலின், கொடைக்கானலில் உள்ள மன்னவனூர் ஆட்டுப் பண்னைக்கு குடும்பத்துடன் விசிட் அடித்தார். அப்போது அவருடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலின், மகன் உதயநிதி, மருமகள் கிருத்திகா, மகள் செந்தாமரை, மருமகன் சபரீசன், பேரன் மற்றும் பேத்திகள் ஆகியோர் சென்று இருந்தனர்.

இம்முறையும் அதேபோல், மக்களவைத் தேர்தலுக்குப் பின், முதலமைச்சர் ஸ்டாலினின் குடும்பம், முன்னதாக மாலத்தீவு செல்ல திட்டமிட்டு, பின் அதை கேன்சல் செய்துவிட்டு, தற்போது கொடைக்கானல் செல்லத்திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.
அடுத்த செய்தி